மூவகை விசுவாசிகள் THREE KINDS OF BELIEVERS 63-11-24E பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா. 1.நம்முடைய தலைகள் குனிந்திருக்கட்டும். நம்முடைய தலைகளும் இருதயங்களும் பணிவாக குனிந்திருக்கும் இவ்வேளையில் உங்களில் எத்தனை பேர் ஜெபத்தில் நினைவு கூரப்படவேண்டுமென்று விரும்புகிறீர்கள்-? அத்தனை பேர்களும், தங்கள் கரங்களை உயர்த்தி, 'கர்த்தாவே, என்னை நினைவு கூர்ந்தருளும்'' என்று கூறுங்கள். இங்கே அதிகமான ஜெப விண்ணப்பங்களும், கைக் குட்டைகளும் மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ளன. 2. பிரியமான பரலோகப் பிதாவே, எல்லா சமயங்களிலும் நீர் எங்களை சந்தித்து உம்முடைய அன்பை எங்களுக்கு வெளிப்படுத்தின இந்த கூரையின் கீழ், இந்த மாலை நேரத்தில் நாங்கள் கூடியிருக்கிறோம். நீர் எங்களுக்குச் செய்தவை களுக்காக எங்களுடைய நன்றியையும், அன்பையும் தாழ்மையான முறையில் உமக்குத் தெரியப்படுத்த இங்கு நாங்கள் கூடியிருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் மறுபடியும் இங்கு வந்திருக்கிறோம். தேவைகள் உள்ள ஜனங்களாகிய எங்களுக்கு நீர் எப்போதும் தேவையாய் இருக்கிறீர். நாங்கள் இவ்வுலகத்தில் இருக்கும் பரியந்தம், யுத்தங்களும், கதறுதல்களும் உண்டு என்றும், உங்கள் எதிராளியான பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல் யாரையோ தேடுகிறான். ஆனால் தம்முடைய சிறு பிள்ளைகளை விசாரிக்கிற பிதா எங்களுக்கு உண்டு என்று நாங்கள் எங்கள் ஜெப விண்ணப்பங்களோடு உம் இடத்தில் ஓடி வருகிறோம். கர்த்தாவே, எங்களுக்கு அதை அருளிச் செய்யும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். 3. இதோ இந்த கைக்குட்டைகள் இங்கு இருக்கின்றன, கர்த்தாவே, தேசத்தைச் சுற்றிலும் உள்ள வியாதியுள்ள ஜனங்கள், தங்களுடைய விசுவாசத்தை கிரியைச் செய்யப் பண்ண, இந்த கைக்குட்டைகள் இங்கு இருந்து அனுப்பப்பட வேண்டும் என்ற உணர்வுகளை அது குறிக்கிறதாய் இருக்கின்றன. தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடையும்படி அருளிச் செய்யும். 4. கர்த்தாவே, ஒரு சிறு பையனுடைய இழந்த ஞாபக சக்தியை முழுமையாக திரும்பப் பெறச் செய்த உம்முடைய மகத்தான வல்லமையை சற்று முன்பு தான் நாங்கள் அந்த அறையில் கண்டோம். உம்முடைய மகத்தான வல்லமை எல்லா சமயங்களிலும் தொடர்ந்து அசைவாடி வியாதியை சொஸ்தப்படுத்தியும், இருதயங்களில் உள்ள இரகசியத்தை வெளிப்படுத்தியும், ஜனங்களை நிலைப் படுத்தி நேரான பாதைக்கு உள்ளாக்குகிறதையும் நாங்கள் காண்கிறோம். தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், ஏனெனில் சரியான காரணம் எதுவென்றும், எப்படியென்றும் தீர்க்கமாக அறிவிக்கும் உம்முடைய கிரியை, எந்த மனித சக்திக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது. அது நீரேயன்றி வேறொருவரும் இல்லை, பிதாவே. உம்முடைய வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகை அறுக்கிறதாயும் இருக்கிறது என்று நாங்கள் அறிந்தவர்களாய் உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 5. இப்பொழுது கர்த்தாவே, தங்கள் தலைகளை குனிந்தவர்களாய் இவைகளின் மேல் சிந்தனை செய்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு பரிசுத்தாவியானவர் தாமே அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரின் ஜெபங்களும் பதில் அளிக்கப்பட உதவிச் செய்யும். இரட்சிக்கப்படத்தக்கவர்களை இரட்சியும். கர்த்தாவே, இழந்து போனவர்களும் இங்கு வந்து இரட்சிக்கப்படட்டும். 6. கர்த்தாவே, அநேக ஜனங்களுடைய, பழைய மனுஷனுடைய, பாவங்களும், சாபங்களும் திறக்கப்பட்ட கல்லறைக்குள் போட்டு புதைக்கப்பட்டதை, இங்கே குவியலாக குவித்து வைத்திருக்கும் ஈரமான ஆடைகளின் மூலம் நாங்கள் அறிந்திருக்கிறோம். பிதாவே, அதற்காக நான் உமக்கு நன்றி உள்ளனாய் இருக்கிறேன். தங்களுடைய மீதமுள்ள நாட்களில் புதிதான ஜீவனில் அவர்கள் நடந்து கொள்ளட்டும். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் மூலம் இவைகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 7. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் இருதயங்களில் இருந்த விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பாராக. 8. சகோ.வீலருடைய (Bro.Wheeler) சிறு பிள்ளைக்கும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பில்லி என்னிடம் கூறினான் என்று நினைக்கிறேன். (அநேக பிள்ளைகள் பிரதிஷ்டை ஆராதனைக்காக இருப்பதாக சகோ.நெவில் ஆலோசனையாக கூறுகிறார்). சரி, நீங்கள் சிறு பிள்ளைகளை இங்கு கொண்டு வருவீர்களானால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே, நானும் மூப்பர்களுமாக அவர்கள் மேல் கைகளை வைத்து பிரதிஷ்டை செய்வோம். மிகவும் சுருக்கமாக இவ்வாராதனையை முடிக்க முயற்சி செய்வோம். தேவன் தங்களுக்குக் கொடுத்ததான சிறு விலையேறப்பட்டவைகளை கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டு வர இப்பெற்றோர்கள் விரும்புகிறதை நாங்களும் விரும்புகிறோம். அவர்களுக்கு வழிவிட எப்பொழுதும் நாங்கள் முயற்சிக்கிறோம். ஏனெனில் நாளை என்பது எதை உடையதாய் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. 9. என்னுடைய தாயார் அடிக்கடி என்னிடம், “இன்றைக்கு உன்னால் என்னக் கூடுமோ அதை செய், நாளை என்று அதைத் தள்ளிப் போடாதே,'' என்று கூறுவார்கள். அது சரியே, ஏனெனில் நாளைய தினம் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாது, ஆனால், நாளைய தினத்தை யார் தம் கரத்தில் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அது தான் முக்கியமான காரியம். நாளைய தினத்தை யார் வைத்திருப்பது என்பதை நாம் அறிவோம். 10. சகோ.வீலர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, இவர்கள் சகோதரி வீலரா-? நான் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்களை முதன் முறையாக இங்கு சந்திப்பதை சிறந்த ஒரு சிலாக்கியமாக நான் கருதுகிறேன். இக்குழந்தை உங்களுடையதா-? அதன் பெயர் என்ன-? (சகோதரி வீலர் கார்லேனா ரெபெக்காள் என்று சொல்லுகிறார்கள் - ஆசி). கார்லேனா ரெபெக்காள், என்ன அருமையான சிறுபெண். இவள் இப்பொழுது சிறிய கார்லேனா ரெபெக்காள் வீலர். 11. சகோ.வீலர் இச்சபையின் மூப்பர்களில் ஒருவர். தேவன் அவர்களுடைய இணைப்பை இச்சிறு குழந்தையின் மூலம் ஆசீர்வதித்திருக்கின்றார், உங்களுக்கு இன்னும் இரண்டு பெண் பிள்ளைகள் உண்டல்லவா-? (சகோ.வீலர் மூன்று என்கிறார்-ஆசி) மூன்று பெண் பிள்ளைகள், அவர்கள் அருமையானவர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். ரெபெக்காளும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பாருங்கள்-? அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும் அல்லவா-? அது சரி ஏனென்றால்... அவர்கள் அருமையான பிள்ளைகள். 12. இவளை என் கரங்களில் ஏந்திக் கொள்ள இவள் என்னை அனுமதிப்பாளா இல்லையா என்று தெரியவில்லை, அப்படி இல்லை என்றால் எங்கள் கரங்களை இக்குழந்தையின் மீது வைப்போம், ரெபெக்கா, என்னிடத்தில் வர உனக்கு விருப்பமா-? நான் உன்னை ஏந்திக்கொள்ள வேண்டுமா-? அது மிகவும் நல்லது, என்ன அருமையானவள். இப்பொழுது நமது தலைகளை வணங்குவோம். 13. இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு இம்மூப்பனின் முன்னால் நிற்கையில்; உண்மையாகவே ஒரு அருமையான அலுவலில் அவர் ஈடுப்பட்டிருக்கிறார். ஏனென்றால் ஒரு மூப்பனானவன் குற்றமற்றவனாகவும் ஒரே மனைவியையுடைய புருஷனாகவும் தன் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனாயிருக்க வேண்டும். ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி நடத்துவான், இச்சகோதரன் இத்தகுதிகளையுடைவராக இருப்பதினால் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். கர்த்தருடைய ஆவி அவருக்குள் இருப்பதை நாங்கள் காண்கின்றோம். 14. இப்பொழுது அவர் தம்முடைய சிறு பெண் குழந்தையை பிரதிஷ்டை செய்வதற்காக இங்கு கொண்டு வந்திருக்கிறார். இக்குழந்தை இவர்களுடைய கரங்களில் வளர இவர்களுக்கு ஒப்புவித்திருக்கிறீர். இக்குழந்தை தன்னுடைய சகோதரிகளைப் போல வளர வேண்டும் என்ற இவர்களுடைய வாஞ்சைக்காக நன்றி செலுத்துகிறோம். இவர்களுக்கு இதை அளியும். பிதாவே இந்தக் குழந்தை ஆனது வாழ்ந்து உமக்கு பெரிய சேவை செய்ய வேண்டும். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இக்குழந்தையை சேவையுள்ள ஒரு வாழ்க்கை செய்ய உம்முடைய கரத்திலே சமர்ப்பிக்கின்றோம். நல்ல உடல் நிலை உள்ளவளாகவும் உறுதியாகவும் ஆக்கும். இவளுக்கு நீடிய ஆயுசை இயேசு வரும் வரையிலும் தாரும். மேலும் பிதாவே, இவள் கிறிஸ்துவுக்கேற்ற சிட்சையில் வளர்க்கப்படுவாள் என்று விசுவாசிக்கிறேன், சேவை உள்ள வாழ்க்கை செய்ய இவளுடைய வாழ்க்கையை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 15. ரெபெக்காள், கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரன், சகோதரி வீலர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உங்களோடு கூட இருப்பராக, 16. எப்படி இருக்கிறாய்-? தன் முகத்தில் பெரிய புன்னகையுடன் இன்னுமொரு சிறு பெண் வந்திருக்கிறாள். அவளுடைய பெயர் என்ன-? (ரோண்டா ரெனீ கோட்ஸ் என்று அக்குழந்தையின் தாய் சொல்கிறாள் - ஆசி) ரோண்டா ரெனீ கோட்ஸ் அது சரிதானே-? நீங்கள் ஜெஸி கோட்ஸ் உறவினரா-? (இல்லை) நான் நினைத்தேன். இப்பட்டினத்தில் கோட்ஸ் என்ற பெயருடைய சில மக்கள் எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு நீண்ட நாள் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். 17. ரோண்டா ரெனீ என்னிடம் நீ வந்தால் நன்றாயிருக்கும்-? கர்த்தராகிய இயேசுவிடம் உன்னை கொடுத்து விட்டு, திரும்ப உன்னை உன் தாயிடம் கொடுத்து விடுவேன். இவள் அருமையாய் இருக்கிறாள் அல்லவா-? இப்போது நாம் தலைகளை வணங்குவோம். 18. பரலோகப் பிதாவே, உம்முடைய மூப்பனும் நானும் சுவிசேஷத்திற்கு ஏற்றபடியும் அதின் இசைவாகவும் இன்றிரவு நிற்கும் வேளையில் இத்தாய் தன் சிறு ரோண்டா ரெனீயை பிரதிஷ்டைக்காக கொண்டு வந்திருக்கிறாள். நீர் தாமே இக்குழந்தையை பாதுகாப்பதற்கென அவளுடைய கரங்களில் கொடுத்திருக்கிறீர், முதல் வேலையாக அவள் செய்ய வேண்டியது என்னவெனில், அதை உம்மிடம் கொடுப்பதே ஆகும். யோபு, சொன்னது போல் கர்த்தர் இவைகளைக் கொடுக்கிறார், இவளை நீர் தாமே திரும்ப எடுத்துக் கொள்ளும் வரை பத்திரமாக காக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம். இவள் ஒரு சிறந்த கிறிஸ்தவ ஜீவியம் ஜீவித்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக வளர வேண்டும். இவளுடைய வீட்டை ஆசீர்வதியும். மேலும் உத்தம இருதயத்தோடும் முழு சேவை செய்ய உமக்கு பிரதிஷ்டை செய்யப்படுவதாக. இப்போதும் கர்த்தாவே, இச்சிறு ரோண்டா ரெனீ கோட்ஸை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சேவை உள்ள ஜீவியம் செய்ய உம்மிடம் கொடுக்கிறோம். ஆமென். நல்லது, சகோதரியே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. 19. எப்படி இருக்கிறாய்-? (ராபர்ட் பால் ஷாம்மெல் என்று சகோதரி சொல்கிறார்கள் - ஆசி) ராபர்ட் பால் ஷேன்-? (ஷாம்மெல் - ஆசி) ஷாம்மெல். 20. ஷாம்மெல் நல்லது என்ன... நீ இன்னும் பருவமடையும் தருணம் இருக்கிறது. இதைக் குறித்து குழப்பம் ஏற்படுத்த மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பார்த்து அப்படி சிரிக்காதே, நீ பார்த்து சிரிக்க வேண்டும் என்றால், இங்கே பார்-? ராபர்ட் பால் என்ன அருமையான பெயர். இப்பொழுது தலைகளை வணங்குவோம் 21. கர்த்தாவே இச்சிறு பெண் வந்திருக்கும் நேரத்தில், எங்களுக்கே இவள் ஒரு சிறு பெண்ணாக தோன்றுகிறாள். தன்னுடைய சிறு பையனை சேவை செய்யும் ஜீவியத்திற்காக கொடுக்கிறாள், கர்த்தாவே சேவையுள்ள ஒரு ஜீவியம் உமக்கு செய்யத்தக்கதாக. இதை இவர்களின் விவாக இணைப்பின் கனியாக இருக்கின்றது. நானும் உமது மூப்பனும் இச்சிறு பிள்ளையின் மேல் கைகளை வைத்து இவனுடைய வாழ்க்கை உமக்கு அர்ப்பணிக்கப்படத்தக்கதாக நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே நாளை என்பது இருக்குமானால், இவன் தாமே தன் பெற்றோர் கேட்கும் இச்செய்தியை எடுக்கத்தக்கதாக அருள் புரியும். இவர்கள் உடைய வீட்டை ஆசீர்வதியும், மேலும் இப்பிள்ளையானவன் கர்த்தருடைய சிட்சையில் வளர்க்கப்பட்டு - உமக்கு அன்பான சீஷனாக இருக்க அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இவனை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென். 22. நல்லது - அவன் அருமையான பையன். அவ்வளவு தான். ஆம் ஐயா, இதை விட நலமானதை கேட்க முடியாது-? உன்னால் முடியுமா-? இவ்வுலகத்தில் இதைவி ட இனிமையான ஒன்று இருக்க முடியாது. இச்சிறு பையனைப் போல் எப்போதும் புன்னகையுடன் இருப்பது. அது அருமையானது (சபையோர் ஆமென் என்கிறார்கள் - ஆசி). 23. நான் அநேக குழந்தைகளை ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு சமயம் என் மனைவி என் மேல் பொறாமை கொண்டாள். ஏனெனில் அவைகளை ஏந்திக் கொள்வதில் அவளுக்கு அவ்வளவு பிரியம். எனக்கும் அத்தகைய பிரியம் உண்டு. ஆனால் அவைகளின் கழுத்தை நான் முறித்து விடுவேனோ என்று நான் எப்பொழுதும் பயப்படுவேன். அவர்கள் அழகாய் மிகவும் மென்மையா னவர்களாய், காணப்படுகின்றார்கள். ஆனாலும் சிறிது காலம் கழித்து அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்களாய் இருப்பார்களென்று உங்களுக்குத் தெரியுமா-? 24. அடுத்த 35 நிமிடங்களில் துரிதமாய் முடித்து விட்டு செல்லலாம் என்று இருக்கிறேன். அவ்விதம் நான் செய்யக்கூடுமா-? முயற்சி செய்து பார்க்கலாம். நான் எதைக் குறித்தும் தவறாக நியாயந் தீர்க்கவோ அல்லது பேசவோ நோக்கம் கொள்ளவில்லை. அங்கு ஆராதனை முடிந்தவுடன் வெளியே செல்லும் போது எப்போதும் இருக்கிற சுறுசுறுப்பு மங்கலாகிவிடுகின்றது. சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று ஆராதனைகள் மிகவும் களைப்பை உண்டாக்கி விடுகின்றன. ஏன்... 25. அந்த முக்கியமான பகுதி என்னவென்றால், அந்த தரிசனங்கள் தான். பிரசங்கிப்பது ஒரு போதும் என்னை களைப்படையச் செய்கிறதில்லை. நான் இங்கு முழு நாளும் நின்று கொண்டு பிரசங்கித்தாலும் அது என்னை சங்கடப் படுத்துவதில்லை. ஆனால் அந்த தரிசனங்கள் தாம்... அங்கு ஜனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சந்தித்து ஜெபிக்கும் போது தரிசனங்கள் ஏற்படுகின்றன. அதற்காகத் தான் அவர்களும் வருகின்றனர். பாருங்கள்-! சில காரியங்கள் கைகளை வைப்பதினால் மட்டும் முடிவடைகிறதில்லை. ஏனெனில் அவைகள் உடைய மூலக்கூறு (Root) எது என்றும், எது அதற்கு காரணமாயிற்றென்றும் கண்டு பிடிக்க வேண்டும். பின்பு அதிலிருந்து விடுபட என்ன வழி என்று கண்டு பிடிக்கவேண்டும். அதற்காகத்தான் ஜனங்களும் இங்கு வந்து காத்திருக்கின்றனர். 26. லூசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட் என்னுமிடத்தில் நாளை மறு நாள் ஆன புதனன்று கூட்டம் ஆரம்பமாகின்றது. உங்களுடைய நண்பர்கள் யாராகிலும் அங்கு இருப்பார்களென்றால் அவர்களுக்கு அதை அறிவியுங்கள். அதிகமானோர் உட்காரக் கூடிய அந்த அரங்கத்தில் கூட்டங்கள் நடைபெற ஒழுங்கு செய்யா விட்டால், அவைகள் ஃலைப் கூடாரத்தில் துவங்கும் என்று நான் நினைக்கிறேன். ஃலைப் கூடாரத்தில் மாடியிலும் கீழேயும் பெரிய விசாலமான இடம் உண்டு. ஆனால் அதில் எத்தனை பேர் அமரலாம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு நெரிசல் அதிகமானால் நாம் அரங்கத்தை ஏற்பாடு செய்யலாம். நான் அங்கே கூட்டங்கள் நடத்தி இருந்தாலும் எத்தனை இருக்கைகள் என்று நினைவில்லை. இப்பொழுது அங்கு நடக்க இருப்பது ஒரு வருடாந்திரக் கூட்டமாகும். 27. மூன்று வருடங்களுக்கு முன்பு, ஓரு நாள் அங்கிருந்த போது நாங்கள் கர்த்தருடைய நாமத்தினால் அங்கு எழுப்புதல் கூட்டங்களை ஆரம்பித்தோம். இன்று வரை அந்த எழுப்புதல் ஓயவில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. தினமும் மக்கள் வந்து இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு கர்த்தருடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஊழியக்காரர் அதில் ஊழியம் செய்கின்றனர். அது அவ்விதம் இருக்கும் வரை நான் எப்பொழுதும் அங்கு சென்று சில வார்த்தைகளை பேசி விட்டு செல்ல விருப்பமாய் உள்ளேன். 28. இக்கூட்டங்கள் புதன் கிழமை ஆரம்பித்து ஞாயிறு அன்று முடியும். இக்கூட்டத்திற்குப் பின்பு வியாபாரிகளின் சுவிசேஷக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது நடைபெறும் தேதியை அவர்கள் உங்களிடம் அறிவிப்பார்கள். 29. கடந்த சமயம் அங்கு மிகவும் மகத்துவமாய் இருந்தது “இப்பிரசங்கத்தினால் அங்கு ஒரு யூத ரபியை கர்த்தர் இரட்சித்தார். அங்கு என்னென்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இரத்தத்தினாலான உடன்படிக்கையைக் குறித்து நான் பிரசங்கித்தது கர்த்தருக்குள் ஒரு மகத்தான நேரமாய் இருந்தது. யூதர்கள் இரத்தத்தைக் குறித்து அறிந்திருக்கிறார்கள். இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. பாருங்கள். 30. நாம் இப்பொழுது நேரிடையாக வார்த்தைக்குச் செல்வோம். நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பிரயாசப்படுவேன். 31. கிறிஸ்து பிறந்த நாளை தொடர்ந்து வருகிறதான 29-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இங்கு ஆராதனை உண்டு. நீங்கள் உங்கள் விடுமுறைகளை கழித்து விட்டு இங்கிருப்பீர்கள் என்றால் ஆராதனைக்கு வாருங்கள். எதிர் காலத்தைப் பற்றி நாமறியாததினால் என்ன சம்பவிக்கும் என்று நமக்குத் தெரியாது. அப்படி ஏதாகிலும் சம்பவிக்குமானால் நாங்கள் இங்கிருக்க முடியாது. மெம்பீஸ் (Memphis) என்னும் இடத்திலுள்ள ஜனங்கள் இங்கு வருவதுபோல, பட்டினத்திற்கு வெளியே நீங்கள் இருப்பீர்களானால், நீங்களும் கூட அவ்விதமாய் இங்கு வருவீர்களானால் காரியங்களை குறித்து அறிந்துகொள்ளலாம். 32. சகோ.உன்கிரன் இங்கு இருக்கிறாரா-? “நீர் எவ்வளவு மகத்துவமானவர்' என்ற பாடலை அவர் பாட நான் கேட்க ஆவலாயிருந்தேன். 33. நான் அநேக காரியங்களில் பிரியப்படுகிறேன். ஆனால் எல்லாம் எனக்கு சம்பவிக்கிறதில்லை. சரி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 34. இப்பொழுது நாம் வார்த்தைக்குச் செல்வோம். என்னுடைய வார்த்தைகள் மாறும். ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒரு போதும் மாறாது. அவருடைய வார்த்தையை நீங்கள் இங்கு தங்கியிருந்து கேட்டுக் கொண்டிருப்பதால், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ''விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்'' அது உண்மையல்லவா-? பரி. யோவான் 6-ம் அதிகாரம் 60 வசனம் முதல் 71 வசனம் முடிய வாசிக்கும்படியாய் நீங்கள் வேதத்தை திருப்பும் இந்நேரத்திலே... பரி.யோவான்-6:60. 35. சிறிது நேரத்திற்கு முன்பு நான் சாளரத்தின் வழியாக நோக்கி பார்த்துக் கொண்டு இருந்தேன். இச்சூரியனானது மறைவதையும், எல்லா இயற்கைக்கும் எவ்விதம் ஓர் பிரமாணம் இருக்கிறதென்பதையும் எனக்குள்ளாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். இலையுதிர் காலம் வரும் போது இயற்கையானது மரத்தின் சாரத்தை அதன் வேர்களிடமாக கொண்டு சென்று விடுகின்றது. 36. யோபு சொன்னது போல், “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்” (யோபு 14:13) அதுதான் காரியம். மரணத்தினுடைய சாரம் அதன் வேர்களிடம் செல்லும் இயற்கையின் தத்துவத்தை யோபு கண்டான். (யோபு.14:7-9) வரையிலுள்ள வசனங்களில் அது கூறப்பட்டுள்ளது-தமிழாக்கியோன்) “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கை எண்டு; அது வெட்டிப் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும். அதின் இளங் கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையில் பழையதாகி அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம் போலக் கிளைவிடும்.'' ''உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து என்னை திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாய் இருக்கும்'' என்பதை யோபு கூறுவதை கவனித்தீர்களா சகோ.வே அவர்களே-? 37. இயற்கைக்கு ஒரு பிரமாணம் உண்டு; அதைத் தவிர வேறு எந்த வழியையும் அதை அணுக முடியாது. அது போல ஆவிக்கு ஓர் பிரமாணம் உண்டு; அதையடைய வேறு எந்த வழியாகவும் நாம் போக முடியாது. 38. எதையும் முழுவதுமாக அழிக்க முடியாது என்பதைக் குறித்து ஒரு தம்பதிகளிடம் இன்று மதியம் பேசிக் கொண்டிருந்தேன். மனித வர்க்கங்கள் அழிக்கப்பட முடியாது (annihilate) அவர்கள் கிழித்தெறியப்பட முடியும். ஆனால் அழிக்கப்பட முடியாது. “சரி, அப்படியானால் ஒரு காகிதத்துண்டை எரிக்கும் போது அது அழிந்து விடவில்லையா-?'' என்று யாரோ ஒருவர் கூறினார். இல்லை ஐயா, நெருப்பிலிருக்கும் உஷ்ணமானது அதனுடைய ரசாயனங்களை உடைத்து பிரித்து அதனுடைய ஆதி நிலையான வாயு நிலைக்கு அதைக் கொண்டுச் சென்று விடுகின்றது. இவ்வுலகமானது இன்னும் அநேக காலத்திற்கு நிற்குமானால், அதே வாயுக்களும், ராசயனங்களும் திரும்பவும் அந்த சிறிய காகித துண்டாக வரக் கூடும். அது முற்றிலும் அழிக்கப்பட முடியாது. 39. ஆகவே, எல்லாவற்றிற்கும் அழிவென்றொன்றில்லாமல் உயிர்த்தெழுதல் ஓன்று ஒன்றிருக்குமானால், நீதிமான்களின் உயிர்த்தெழுதல் என்று ஒன்று இருக்கும். ஆம், நாம் திரும்பவும் வரத்தான் வேண்டியுள்ளது. அது தான் காரியம்; அதைத்தவிர வேறு வழி ஓன்றுமில்லை. நீ எரிக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்து இருந்தலோ, மேலும் இச்சம்பவங்களை எவ்விடத்தில் சம்பவித்து இருந்தாலும், நீ முழுவதும் அழிக்கப்பட முடியாது. 40. உன்னுடைய ஒவ்வொரு பாகமும் இங்கே தான் இருந்தது என்பதை ஞாபகம் கொள்வாயாக. தேவன் தம்முடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உலகத்தை சிருஷ்டித்த போது, உன்னுடைய சரீரத்தை இங்கு வைத்தார். ஆகவே தேவன் தவிர வேறெதுவும் அதை பறித்துக்கொள்ள முடியாது. எல்லாம் அவருடைய கரத்திற்குள் திரும்பவும் வரும் என்பதை கவனியுங்கள். சிருஷ்டிக் கர்த்தாவாகிய அவரே வாக்குத் தத்தத்தை செய்தவர். ஆகவே நித்திய ஜீவன் உண்டென்று நாம் நிச்சயமாய் இருக்கிறோம். இப்பொழுதே என்றென்றும் அழியாத அந்த நித்திய ஜீவனை அடைந்து இருக்கிறோம் என்று நம்முடைய இருதயங்களில் நம்பிக்கைக் கொண்-டிருக்கிறோம். 41. நாம் இப்பொழுது யோவான் 6ம் அதிகாரம் 60-ம் வசனம் தொடங்கி முடிவு வரை படிப்போம். ''அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்ட பொழுது; இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். சீஷர்கள் அதைக் குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்கு உள்ளே அறிந்து, அவர்களை நோக்கி; இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ-? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப் போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்-? ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், (அது தேவனாகிய அவரைக் குறிக்கின்றது) ஜீவனாயும் இருக்கிறது. (அவர் என்ன கூறினார்-? ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று கூறினார்) ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார் விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக் கொடுப்பவன் இன்னாரென்றும் ஆதி முதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்; ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அது முதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள் (கடினமான வார்த்தை, அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை). அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி; நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக; ஆண்டவரே, யார் இடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும், அறிந்தும் இருக்கிறோம்; என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா-? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஓருவனாயிருந்தும் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாய் இருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார். 42. இந்த இரவு நேரத்தில், நான் இப்பொருளைப் பெயரிட்டு அழைக்க வேண்டும் ஆனால் அது, “மூவகை விசுவாசிகள்'' என்ற தலைப்பின் கீழ் பேச விருப்பமாய் உள்ளேன். 43. நான் அடிக்கடி இவ்விதம் குறிப்பிட நினைப்பதுண்டு. ''நல்லது, இந்த செய்தியை என்றாவது ஒரு நாள் நான் பிரசங்கிப்பேன் என்று விசுவாசிக்கிறேன்'' என்று நான் நினைத்தேன். இன்று அந்த சமயமுண்டாயிருக்கிறது. 44. முதல் வகையைச் சேர்ந்தவர்கள் விசுவாசிகள்', இரண்டாவது 'பாவனை விசுவாசிகள்', மூன்றாவது 'அவிசுவாசிகள்' என்ற விதமாய் இம்மூன்று வகையினர் காணப்படுகின்றார்கள். இத்தகைய பொருளையுடைய செய்தியானது முற்றிலும் புதிதாகக் காணப்பட்டாலும், இந்த இரவு நேரத்தில் நாம் இங்கு அமர்ந்து இருக்கையில் அத்தகைய கூட்டம் எப்பொழுதும் கூடி வருகின்றனர். எங்கெல்லாம் ஜனங்கள் கூடுகின்றார்களோ, அங்கு இந்த கூட்டத்தை நாம் காணலாம், ஒரு வேளை கர்த்தர் வரும் வரை அத்தகையோர் நம்மோடு கூடி வரலாம். இந்த இரவு நேரத்தில், நான் இந்த மூன்று விதமான கூட்டத்தைக் குறித்து பேசும் போது, நாம் எத்தகைய கூட்டத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் நிதானித்துக் கொள்ள விரும்புகிறேன் . 45. இந்த இரவு நேரத்தில் ஜனங்கள் சுற்றிலும் நிறைந்த இந்த சபைக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் இந்த முழு உலகத்திற்கும் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்த ஒலிநாடாக்கள் உலகிலுள்ள எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. 46. மூன்று வித்தியாசப்பட்ட விசுவாசிகளைக் குறித்து நான் பேச விருப்பமாய் உள்ளேன். ஞாபகம் கொள்ளுங்கள்; விசுவாசிகள், என்னுடைய பொருள் விசுவாசிகளை பற்றியது. ஒரு வகையினர் உண்மையான விசுவாசிகள், இரண்டாமவர் பாவனை விசுவாசிகள், மூன்றாமவர் அவிசுவாசிகள். பாருங்கள்-? 47. முதலாவதாக நான் உண்மையான விசுவாசியைக் குறித்து பேச விருப்பமாய் உள்ளேன். ஏனெனில் அவன் தான் உண்மையாக விசுவாசிப்பவனாய் இருக்கின்றான். ஆகவே அவனே முதன்மையான இடத்தைப் பெறுகிறான். இயேசுவின் சீஷர்கள் விசுவாசித்ததை போன்று, உண்மையான விசுவாசி எவனும் விசுவாசிக்கின்றான். நாம் வாசித்த வேத பாகத்தை அதற்கு உதாரணமாக நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன். முதலாவது விசுவாசிகள். உண்மையான விசுவாசிகள். 'விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்'' (ரோமர் 10:17). தேவனுடைய வார்த்தை கிறிஸ்துவாய் இருக்கிறது. பாருங்கள் விசுவாசிகளே, 48. பேதுரு என்னும் விசுவாசி அளித்த இந்த மகத்தான வாக்கு மூலத்தை நீங்கள் கவனித்தீர்களா-? உலகப் பிரகாரமான வழியாய் விவேகமாக இருத்தலைப் போன்று ஒரு விசுவாசி இருக்க வேண்டியது இல்லை. அநேக ஜனங்கள் கூறுகிறவிதமாய், அவன் கல்வியறிவு பெற்றவனாய் இருத்தல் அவசியம் அன்று, மகத்தான அந்த வாக்கு மூலத்தை கொடுத்த பேதுரு படிப்பு அறியாதவனும், பேதையுமானவன் என்று வேதம் கூறுகின்றது. அவன் ஒரு விவேகம் உள்ள மனிதனென்று கருதப்படவில்லை. 49. “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராய் இருந்தாலும் திசைக் கெட்டுப்போவதில்லை'' (ஏசா:35:8) (ஆங்கில வேதத்தில் "There Shall be highway and a way" என்றிருக்கிறது. அதாவது, ஒரு பெரும்பாதையும் ஒரு பாதையும் இருக்கும்-தமிழாக்கியோன்). 50. இன்று மதியம் நான் உதவியாளர் ஓருவருடன் பாலங்கள் குறுக்காகக் கட்டப்படுவதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் அவரிடம், “நதிகளின் குறுக்காகப் போடப் பட்ட அனேக பெரியப் பாலங்கள் இன்று நம்முடைய உலகத்திலுண்டு. ஆனால் பூமியையும் மகிமையையும் இணைக்க ஒரே ஒரு பாதை மட்டுமேயுண்டு. அது தான் ராஜாவின் பெரும் பாதை. தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை'' என்று கூறினேன். ஆம், அந்த பாதை நமது கர்த்தராகிய கிறிஸ்துவால் கட்டப்பட்டு பூமியையும், மோட்சக் கரையையும் இணைக்கிறதய் இருக்கிறது. தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை. 51. 'ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவேன்'' என்ற தேவனின் வாக்குத்தத்தம், அந்த நாளுக்குரிய வார்த்தையாக முற்றிலும் நிரூபிக்கப்பட்டதை இந்தப் படிப்பறியாத பேதுரு கண்டான். முதலில் சீமோனுக்கு அதை விசுவாசிப்பதற்கு சற்று கடினமாக இருந்து இருக்கக்கூடும். ஏனெனில் அநேக போலியான இயேசுக்கள் அச்சமயம் உண்டாயிருந்தனர். ஆனால் தன்னை (பேதுருவை) யார் என்று சரியாக அடையாளம் காட்டின அந்த நாளுக்குரிய உண்மையான வார்த்தையை அவன் கண்ட போது, அவர் மேசியா தான் என்று நிச்சயமாக அறிந்து திருப்தி கொண்டான். அவர் யாரென்று கேட்கப்பட்ட போது “ஆண்டவரே யாரிடத்தில் போவோம்-?'' என்று கூறினவன் இந்த பேதுரு தான் . 52. அங்கிருந்த ஜனக்கூட்டமானது, விசுவாசிகள், அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள் என்ற விதமாய் பிரிந்து கொண்டு இருந்தனர். அன்று அங்கு கூடி இருந்த ஒரு கூட்ட ஜனத்தில் இந்த மூன்று பிரிவான ஜனங்கள் காணப்பட்டதை நாம் வாசித்த அதிகாரம் கூறுகின்றது. இத்தகைய பிரிவுக்கு காரணம் என்ன எனில், இயேசு அவ்விதமாக தம்முடைய வார்த்தையை பிரசங்கித்திருந்தது தான். அவருடைய பிரசங்கம் அந்த சபையில் பிரிவினையை உண்டாக்கிற்று; ஆனாலும் அது நிச்சயமாக அவ்விதம் தான் செய்யப்பட வேண்டும். 53. இயேசு வியாதியஸ்தரை சுகப்படுத்திக் கொண்டிருந்த வரையில் அவர் ஒரு மகத்தான மனிதனாகக் கருதப்பட்டார். ஆனால் உபதேசத்திற்கும், தீர்க்க தரிசனத்திற்கும் அவர் வந்த போது, அது தான் பதரை கோதுமை மணியினின்று பிரித்து விட்டது, பாருங்கள்-? பதரானது, கோதுமை மணியல்ல; அது கோதுமை மணியை மூடின தோலாய் இருக்கிறது. அது மேலும் உபயோகிக்கப்பட முடியாது. ஏனெனில் அதில் ஜீவன் இல்லை. அது பதராக இருப்பதினால், கோதுமை மணியோடு அது தங்கியிருந்து அதனுடன் சுதந்திரவாளியாக இருக்க முடியாது. ஆகவே தான் நாம் இந்த கோதுமை மணியைக்குறித்து முக்கியமாக பேசிக் கொண்டிருக்கிறோம். 54. இப்பொழுது கவனியுங்கள். அவர் மேசியா என்று பேதுரு நிச்சயமாக திருப்திக் கொண்டான். ஒரு போதகரோ, ரபியோ, சபையோ அல்லது யார் அதைக் குறித்து என்ன கூறினாலும் சீமோன் பேதுருவுக்கு அது எந்த வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. ஏனெனில் அவன் அதைக்குறித்து தன்னில் தானே உறுதிக் கொண்டவனாய் இருந்தான். 55. ஒரு சமயம் இயேசு தம்முடைய சீஷரைப் பார்த்து, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்-?'' என்று கேட்டார். 56. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது இயேசு: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 57. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 58. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (ஒரு புத்தகத்திலிருந்தோ, ஒரு பாரம்பரியத்தினின்றோ அல்லது வினா-விடை படிப்பினின்றோ நீ இதை கற்றுக் கொள்ளவில்லை) பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் (வார்த்தையின் உண்மையான வெளிப் பாட்டைப் பெற்ற பேதுருவே உண்மையான விசுவாசி) மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய்; இந்தக் கல்லின் மேல் (நான் யார் என்னும் வெளிப்பாடாகிய இந்தக் கல்லின் மேல்) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவது இல்லை' என்று கூறினார் (மத்.16:13-18). ''ஆண்டவரே யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே,'' என்று பேதுரு கூறியதில் ஆச்சரியம் ஓன்றுமில்லை. இயேசு திரும்பி ''நீங்களும் போக மனதாயிருக்கிறீர்களா-?'' என்றார். 59. அவர்கள் 'ஆண்டவரே நாங்கள் யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே . நீர் ஒருவர் மட்டுமே...'' என்றனர். 60. நித்திய ஜீவ வசனங்களை அவர் கொண்டவராக மட்டுமல்ல, அவரே நித்திய ஜீவ வார்த்தையாய் இருந்தார். அவரே ஜீவ வார்த்தை என்பதை சீமோன் முற்றிலுமாக அறிந்து கொண்டான். அவன் அவ்விதம் அறிந்த பின்பு அதுவே அவனுடைய நம்பிக்கையைக் காத்துக் கொண்டது. ஏனெனில் அவரே ஜீவிக்கிற வார்த்தை ஆனவர் என்பது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 61. ஒரு உண்மையான விசுவாசியின் காரியம் அதுவே. யாரோ ஒருவரால் வசியப்படுத்தப்பட்டு கூறுகிற காரியமோ அல்லது ஏதோ ஒன்றின் மூலமாகவோ அல்ல, வார்த்தையைப் பரிசுத்த ஆவியானவர் உனக்கு வெளிப்படுத்தும்போது, வார்த்தை தெளிவாக்கப்படுவதையும், அந்தக் காலத்திற்குரிய வார்த்தையாய் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி நிரூபிப்பதையும் நீ காண்பாய். 62. லூத்தர் ஒரு சீர்திருத்தவாதியாய் எழுப்பப்பட்டார் என்பதை அறிந்த ஓர் மனிதன் அதை விசுவாசிப்பதில் இருந்து எவ்வாறு விடுபட முடியும்-? 'மனித ஆவி' (3-ம் ஜீவன் மனுஷ முகம் போன்ற முகமுள்ளதாய் இருந்தது. (வெளி.3:7). என்ற வசனத்தை சகோ.பிரான்ஹாம் குறிப்பிடுகிறார்- தமிழாக்கியோன்) சீர்த்திருத்தலுக்கென்று அங்கே புறப்பட்டுச் சென்றது. ஜான் வெஸ்லியும் அவ்வாறே ''பரிசுத்தமாகுதல்,'' என்ற செய்தியோடு புறப்பட்டுச் சென்றார். அவர்கள் அதை விசுவாசிக்கத் தான் வேண்டியிருந்தது. ஏனெனில் அதுவே அந்த சபையின் காலத்திற்குரிய செய்தியாயும் நிச்சயமாக நிகழ்ந்தேற வேண்டிய காரியமுமாய் இருந்தது. 63. லவோதிக்கேயா சபையின் காலத்தில் நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். இந்தக் காலத்தில் கிறிஸ்துவானவர் சபையின் வெளியே தள்ளப்பட்டு, அவர் கதவைத் தட்டுபவராக இருந்து உள்ளே பிரவேசிக்க பிரயாசப்படுவதைக் குறித்து நாம் போதிக்கப் பட்டிருக்கிறோம். அத்தகைய சம்பவம் நிகழ்வதை நாம் காணும் போது, நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம். 64. ஆகவே, உலகத்தின் சரித்திரமானது முடியும் தருவாயில் நாமிருக்கிறதைக் காண்கிறோம். புத்தகமானது முடிவு பெற்று அதன் கடைசி வரியானது வரப் போகும் என்றோ ஒரு நாளில் எழுதப்படும் (சகோ.பிரான்ஹாம் தனது கரங்களை ஒரு முறை தட்டுகிறார்-ஆசி) சபையானது முடிவு பெறப்போகிறது. அப்பொழுது காலமானது இனி இல்லாமற் போகும். 65. மகத்தான நாடகமானது ஏற்படுத்தப்பட்டு, தேவதூதர்களும் அதை ஆகாயத்தில் இருந்து உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடகமானது என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதன் உடைய நடிகர்கள் தயாராகவும், தங்கள் பாகத்தை நடித்துக் கொண்டும் இருக்கின்றனர் என்பதையும் உங்களால் காணக்கூடும். 66. தீயோனாகிய சாத்தானும் அங்கு நடித்துக் கொண்டிருப்பதை உங்களால் காணக் கூடும். இந்நாடகத்தின் வில்லனாக அவன் காட்சியில் தோன்றி எவ்விதம் ஏமாற்றுபவனாக நடிக்கிறான் என்பதையும் உங்களால் காணக்கூடும். 67. ஆனால் அதே சமயத்தில் முன் குறிக்கப்பட்ட சபை எடுக்கப்படுதலுக்கென்று ஆயத்தமாகிக் கொண்டிருப்பதையும் உங்களால் காணக்கூடும். அது ஒரு மகத்தான காட்சி அல்லவா-? வேதத்தில் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்ட இந்த மகத்தான நாடகமானது நடந்தேறி வருவதை தேவனுடைய பிரசன்னமானது நிரூபித்துக் கொண்டிருப்பதை உங்களால் காணக்கூடும். நாம் வாழ்வதற்கென்று எத்தகைய மகிமையான நேரம் நமக்கு உண்டாகி இருக்கின்றது-! எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த மனிதர்களும் தீர்க்கதரிசிகளும் இந்தக் காலத்தையும் இந்த மணி நேரத்தையும் காண வாஞ்சையாய் இருந்தனர்; ஆனால் அவர்களுக்கு அத்தகைய பாக்கியம் உண்டாகி இருக்கவில்லை. 68. பேதுரு ஒரு விசுவாசியாயிருந்தான். ஏனெனில் அவன் அதைக் கண்டான், விசுவாசித்தான். “நீர் மேசியாவாகிய கிறிஸ்து நீரே இந்த காலத்தின் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று அந்த சீஷர்கள் கூறினார்கள். ஒரு உண்மையான விசுவாசியின் காரியம் அது தான் பாருங்கள். 69. அடுத்த கதாபாத்திரத்திற்கு நாம் செல்லும் முன்பு, இன்னும் சில விசுவாசிகளை குறித்து துரிதமாக நாம் பார்ப்போம். நோவா என்னும் தீர்க்க தரிசியை எடுத்து கொள்வோம். இந்த நோவா ஓர் விவசாயியாக இருந்திருக்கக் கூடும். அந்த நாட்களின் சபையானது இழிவான பின் மாற்றத்தில் காணப்பட்டு, பரியாசக்காரர்களையும், மத வைராக்கியம் உடையவர்களையும் கொண்டு இருந்த போது, தேவன் நோவாவிடம் பேசி, அவன் ஒரு பேழையை உண்டு பண்ண வேண்டிய அவசியத்தை அவனிடம் கூறினார். நோவா தேவனோடு சர்ச்சை கொள்ளவில்லை. அவன் அதை தேவனுடைய வார்த்தை என்று விசுவாசித்து துரிதமாக பேழையை உண்டு பண்ணுவதற்காக பொருட்களை ஆயத்தம் செய்தான். 70. அது தான் ஒரு உண்மையான விசுவாசியின் காரியம். அதை குறித்து விவாதிக்காதே. நீ முற்றிலுமாய் உறுதியடைந்து விசுவாசிப்பாயானால் அதுவே போதுமானதாகும். எந்த ஒருவனும், எந்த விசுவாசமும், எந்த வழியும் இவ்விதமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் விசுவாசமானது கேள்வினால் வருகிறதாய் இருக்கிறது. நீ இங்கு இவ்விதமாக நிற்பாயானால் உன்னிடத்தில் உள்ள வியாதி என்னவென்று மருத்துவர் கூறியிருந்தாலும் அது ஓர் காரியம் அல்ல (மருத்துவர், அவருடைய அறிவும், கருவிகளும் கூறுகின்ற காரியங்கள் வரை நிதானித்து, உன்னுடைய வியாதி இது தான்; மரணம் தான் உனக்கு சம்பவிக்கும்; அதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒரு வேளை கூறக் கூடும்) ஆனால் நீ ஜெபித்துக் கொண்ட பின்பு, அங்கு நின்று கொண்டு உன்னை சுகம் அடைந்தவனாகவோ, அல்லது சுகம் அடைந்தவளாகவோ காணக் கூடும் போது அதுவே போதுமானது. நிச்சயமான ஒரு காரியத்தை போன்று நீ அதற்கு உள்ளாக நடக்கின்றாய். ஏனெனில் தேவன் அதை சொன்னதினால், அது அவ்விதமே நடக்கும் என்று நீ விசுவாசிக்கிறாய். 71. புற்று நோயினால் அவதியுற்ற அந்த பெண்மணி, புற்று நோயை இரும்பி துப்பினதைப் போன்று, அது அவ்விதமாக நடந்தேறும் என்று அவள் சிறிதளவு ஏனும் சந்தேகமற்றவளாய் இருந்தாள். அந்த புற்று நோயானது செத்துப் போய் அவள் சரீரத்தினின்று விடுபட்டு, இரும்பலின் மூலமாக, வாயின் வெளியே வந்து விழுந்தது. பாருங்கள்-? நீ விசுவாசிக்கும் போது அத்தகைய காரியம் தான் சம்பவிக்கும். 72. சற்று நேரத்திற்கு முன்பு நிகழ்ந்த அந்த சிறு பிள்ளையினுடைய காரியம் போன்று இருக்கின்றது. அவனுடைய தகப்பனார் அவனை இங்கு அழைத்து வந்திருந்தார். (அவர் இங்கு தான் எங்கோ அமர்ந்திருக்கிறார்) அந்த சிறு பையன் கீழே விழுந்ததால் தன்னுடைய ஞாபக சக்தி முழுவதையும் இழந்து விட்டு இருந்தான். எதையும் அவனால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஜெபம் செய்த சில வினாடிகளுக்குப் பின்பு. அவனுடைய பெயரும் வயதும் என்னவென்று நான் கேட்டேன். அவன் தன் பெயரையும் வயதையும் சரியாகச் சொன்னான். மற்ற எந்த சிறுவனையும் போல அவன் சுகதேகியாய் மாறினான். பாருங்கள்-? அவர்கள் விசுவாசித்தார்கள் அது தான். காரியம். தேவன் எதை ஆகிலும் கூறுவாரென்றால், அது அந்த வழியாகத் தான் இருக்கும். நோவா தேவனை விசுவாசித்தான், அதினால் அவன் ஓர் விசுவாசி என்று கருதப்பட்டான். 73. தானியேலை எடுத்துக்கொள்வோம். அந்த நாளின் சபையானது பாபிலோனில் சிறை இருப்பாய் காணப்பட்ட போது, தானியேல் தேவனை விசுவாசித்தான். “ராஜாவாகிய பரிசுத்த மனிதனைத் தவிர வேறு எந்த தேவனை ஆகிலும் மனுஷனை ஆகிலும் நோக்கி யாதொருக் காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணக் கூடாது என்று நாங்கள் ஒரு பிரகடனம் செய்யப் போகிறோம்,'' என்று அவர்கள் கூறினார்கள். தானியேல் அதைக் குறித்து யாதொரு கவனத்தையும் செலுத்தவில்லை. அவன் தேவனுடைய சத்தத்தை கேட்கிறவனாய் இருந்தான். தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வந்தது. ஏனெனில் அவன் ஒரு தீர்க்க தரிசியாய் இருந்தான். சாலொமோனின் நாட்களில் ஆலயமானது பிரதிஷ்டை செய்யப்பட்ட போது, “தன் சிறையிருப்பின் தேசத்திலே, சங்கடத்திலே உள்ள ஒருவன், தேவரீர் தெரிந்து கொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கும் நான் கட்டின இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவன் விண்ணப்பத்தையும் ஜெபத்தையும் கேட்டருளும்” என்று சாலொமோன் ஜெபம் செய்ததை தானியேல் அறிந்திருந்தான். தானியேல் தேவனை விசுவாசித்தான். அவன் உண்மையான ஒரு விசுவாசியாய் இருந்தான். சிங்கங்களும் கூட அவனைக் கொன்று தின்ன முடியவில்லை. அவனுக்குள் ஏதோ ஓர் உண்மைத்துவம் காணப்பட்டது. மற்றும் ஒரு விசுவாசியான தாவீதைக் காண்போம். தாவீது ஒரு எளிமையான சிறுவனாய் இருந்தான் 74. நோவாவும், தானியேலும் அன்றிருந்த நவநாகரீக சபையில் ஒரு போதும் தங்களுடைய ஸ்தானத்தை வைக்கவில்லை. சத்தியமாவது எது என்று தேவன் கூறினதை அவர்கள் நம்பின விசுவாசியாய் இருந்தனர். நாகரீக உலகம் எதைக் கூறினாலும் அதைக்குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஏனெனில் தேவன் எதைக்கூறினாரோ அதை சத்தியம் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். அதுதான் உண்மையான விசுவாசிகளின் காரியமாகும். 75. இயேசு ஜீவ வார்த்தையை உடையவராயும், அவரே அந்த ஜீவ வார்த்தையு மாய் இருக்கிறார் என்பதையும் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் விசுவாசித்தது போன்று தான் அவர்களும் விசுவாசித்தனர் இன்று நானும் அவ்வாறே அதை விசுவாசிக்கிறேன். அதற்கு முரண்பட்டதாய் இருக்கிற ஒவ்வொரு காரியமும் தவறானதாகும். இது மட்டுமே ஜீவ வார்த்தையாய் இருக்கிறது. கிறிஸ்துவே அந்த வார்த்தை ஆனவர். மற்றதெல்லாம் மரணமாய் இருக்கிறது. 76. இப்பொழுது இந்த தாவீதைப் பார்ப்போம். முதலாவதாக, இவன் தன் சகோதரர்களால் ஒரு வேளை கொடுமைப்படுத்தப்பட்டவனாய் இருந்து இருக்கக் கூடும். ஏனெனில் அவன் ஒரு சிறு பையனாய் இருந்தான். கவசங்களைத் தரித்துக் கொண்டு யுத்தத்திற்கு செல்லுமளவிற்கு அவன் பெரிய மனிதனாய் இருக்கவில்லை. அவன் ஒரு சிறுவனாய் இருந்தாலும் அங்கு நடந்து சென்ற ஒரு விசுவாசியாய் இருந்தான். 77. அங்கே அந்த வனாந்திரத்திலே அவன் ஒரு கவணை தன் கையில் பிடித்தவனாய் தன் தகப்பனுடைய சிறு மந்தையை மேய்த்துக் கொண்டு இருந்தான். (அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடமானது, சிங்கங் களையும் கரடிகளையும், ஓநாய்களையும் கொண்டதாய் இருந்தது). அமர்ந்த புல்லுள்ள இடங்களையும், நிழல் தரும் இடங்களையும் தாவீது பார்க்கும் போது, ஆடுகள் வெயிலின் கொடுமைக்குத் தப்பி அந்த நிழல் தரும் மரங்களின் கீழ், புல்லின் மேல் அமருவது என்பது எத்தகையது என்பதையும், குளிர்ச்சியான நல்ல தண்ணீர் எத்தகையது என்பதையும் குறித்து தாவீது அறிந்திருந்தான். ''மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது'' பாருங்கள்-? அவன் அழுது ஜெபித்தவனாய் இருந்தான். 78. ஒரு நாள் அவனுக்கு ஒரு நெருக்கடியான நேரம் வந்தது. ஒரு சிங்கம் மந்தையில் இருந்த ஒரு ஆட்டைத் தூக்கிச் சென்று விட்டது. அப்பொழுது அவன், “தேவன் என்னை சிங்கத்தைவிட பராக்கிரமசாலியாய் உண்டாக்கி இருக்கிறார்'' என்று யோசித்து, தன்னுடைய கவணை எடுத்து, ஒரு சிறு கல்லை அதில் வைத்து சுழற்றி, அதினால் அந்த சிங்கத்தை விழச்செய்தான். ஆப்பிரிக்கா சிங்கத்தை யாராகிலும் பார்த்ததுண்டா-? பாலஸ்தீனாவிலும், ஆசியாவிலும் பிடரி மயிர் அதிகமுள்ள சிங்கங்கள் உண்டு. அதிக வல்லமை உள்ள குண்டுகளால் மட்டும் அவைகளை வீழ்த்த முடியும். ஆனால் தாவீது ஒரு கல்லினால் அதை வீழ்த்தினான். பின்பு அந்த சிங்கமானது எழுந்து அவனை எதிர்க்கொண்டு வருகையில், அவன் அதின் தாடி மயிரைப் பிடித்து அதைக் கொன்று போட்டான். அவன் எதைக் குறித்துப் பேசினானோ அதை அறிந்து இருந்தான். அவன் அதைக் குறித்த அனுபவத்தைப் பெற்றிருந்தான். அவன் தேவனை அவருடைய வார்த்தையில் சோதித்தறிந்தான். 79. தாவீது கோலியாத்தைப் பார்த்து பயப்படவில்லை. ஏனெனில் கோலியாத் விருத்தசேதனம் இல்லாதவனும், அவிசுவாசியுமாய் இருந்தான். அவன் அங்கு வந்து தன் தேவர்களின் நாமத்தினாலே தூஷித்தான். 80. இந்த கோலியாத் தாவீதைப் பார்க்கிலும் பன்மடங்கு பெரியவனாயும், பலசாலியுமாய் இருந்தான். அவனுடைய கைகளின் விரல்கள் பதினான்கு அங்குலம் நீளமாயிருந்தன. அவன் ஒரு மகத்தான போர் வீரனாய் இருந்தான் என்பதை கவனித்தீர்களா-? ஒரு வேளை அவன் தன் மேல் அணிந்திருந்த கவசங்களின் நிறையானது 300 பவுண்டுக்கும் அதிகமான எடை உள்ளதாயும், அவன் அணிந்திருந்த தலைச்சீரா ஒன்றரை அங்குல கனம் உள்ளதாயும் இருந்து இருக்கக் கூடும். அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படை மரத்தின் கனிதியும், அதின் நீளம் இருபது அடியாக இருந்திருக்கும் எனக் கூறுகிறார்கள். இவ்விதமான அவன் ஒரு இராட்சதனாக அங்கு நடந்து வந்தான். அத்தகைய மனிதன், நின்ற வண்ணமாகவே பன்னிரண்டு மனிதர்களை ஒரே சமயத்தில் தூக்கி வீசியெறிய முடியும். எத்தகைய ஓர் எதிர்ப்பு என்று கவனியுங்கள். 81. அவன் அங்கு நின்று கொண்டு காரியங்கள் பலவீனமடைந்தது போல் தோன்றின அந்த நேரத்தில்... தன்னைக் குறித்து பெருமை அடித்துக் கொண்டு இருந்தான். “நாம் இரத்தம் அதிகம் சிந்த வேண்டாம், நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம் பண்ண ஒருவனை விடுங்கள். அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களைச் சேவிக்க வேண்டும்,'' என்று அந்த கோலியாத் கூறினான். பிசாசானவன் உங்கள் பலவீனத்தில் உங்களைப் பிடித்து பரிகாசம் செய்ய விரும்பும் போது, அங்கு நடக்கும் காரியம் என்ன என்பதைப் பார்த்தீர்களா-? ஆனால் பிசாசு இங்கு தவறான மனிதனை சந்தித்து விட்டான். தேசத்திலேயே மிகவும் சிறியவனாயும், சிவந்த மேனி உடையவனாயும், சரிந்த தோள்களை உடையவனுமாய் இருந்த தாவீதை பிசாசு சந்தித்தான். 82. ''ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்த சேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்-?'' என்று தாவீது கூறினான். அந்த பெலிஸ்தனுடைய அறைகூவல்-! தாவீதை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. ஏன்-? ஏன்-? ஏனெனில் அவன் ஒரு விசுவாசியாய் இருந்தான். அங்கிருந்த மற்றவர்கள் எல்லாரும் பாவனை விசுவாசிகளாயிருந்தனர். பாருங்கள்-? அவன் ஒரு உண்மையான விசுவாசியாயிருந்தான். “நீங்கள் பயந்தீர்களென்றால், நான் சென்று அவனோடு யுத்தம் செய்வேன்,'' என்று தாவீது கூறினான். பாருங்கள்-? ஒரு சிறு பையனாக இருந்த தாவீதுக்காக வைக்கப்பட்டிருந்த சவால் எத்தகையதாய் இருந்தது-! அவன் ஒரு விசுவாசியாயிருந்தபடியால், தேவன் எதை செய்வார் என்பதை அறிந்தவனாக அதையே சரியாக செய்தான். 83. விருத்தசேதனமில்லாத அந்த பெலிஸ்தன் தன்னுடைய தேவர்களின் நாமத்தினால் தாவீதை சபித்து, “நான் ஒரு நாயா-?'' என்று கேட்டான். தாவீது அங்கே ஒரு சிறிய குள்ள மனிதனாக நடந்து வந்தான். அந்த பெலிஸ்தன் மேலும் தொடர்ந்து, “என்னுடைய ஈட்டியின் முனையில் உன்னைக் குத்தி எடுத்து, உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகள் திண்பதற்காக மரத்தின் மேலே தொங்க வைப்பேன் வா-!” என்று கூறினான். ஓ-! எத்தகைய ஒரு பயங்கரமான மனிதன் அவன்-! 84. அதற்கு தாவீது, “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும் கேடகத்தோடும், பெலிஸ்தர்களின் தேவனின் நாமத்தினாலும் என்னிடத்தில் வருகிறாய். ஆனால் நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலருடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்-!'' என்றான். 85. அவன் தான் விசுவாசி, ஐயா. அது தான் அவனுடைய கோட்டையும் கவசமும் பாதுகாப்புமாகும்-! ஆமென்-! சபையின் பாதுகாப்பும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். எந்த ஒரு விசுவாசிக்கும் அதுவே பாதுகாப்பாகும். என்ன சம்பவித்தாலும், உலகம் என்ன கூறினாலும் அது ஒரு காரியமல்ல. உன் உடைய பாதுகாப்பு இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரே. அது போதுமானது ஐயா-! “இயேசு கிறிஸ்துவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்'' இயேசு கிறிஸ்துவே நமது பாதுகாப்பாகும். 86. அன்று அந்த போர்க்களத்தில் நடந்த சம்பவத்தை நாமறிந்திருக்கிறோம். கோலியாத்தின் நெற்றியில் ஒரு சிறு பாகம் மட்டுமே தாவீது தன் கவண் கல்லினால் தாக்கத் தக்கதாக திறந்து இருந்தது. அந்த இராட்சதனிடம் அதிக சமீபமாக தாவீது நெருங்கு முன்பே, அவனைக் கொல்லத்தக்கதான பாகத்திற்கு கவண் கல்லை தேவன் வழி நடத்தினார். பின்பு தாவீது அவனைக் கொன்றான். தேவனே அதைச் செய்தார். தாவீது ஒரு விசுவாசியாயிருந்தான். என்று நாம் காண்கிறோம். 87. ஊர் என்கிற கல்தேயரின் பட்டினத்தானான ஆபிரகாம் என்னும் விசுவாசியைக் குறித்துப் பார்ப்போம். சரீரப் பிரகாரமாக முற்றிலும் நடக்க முடியாத ஒரு காரியத்தை விசுவாசிப்பதற்காக அவன் அழைக்கப்பட்டிருந்தான். ''தேவனுடைய வாக்குத் தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல், தேவன் அதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்,'' என்று ரோமர் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. 88. ஆபிரகாமும், சாராளும், தாங்கள் வாலிப வயதிலிருந்து ஒன்றாக வாழ்ந்து இருந்தாலும், அவர்களுக்குப் பிள்ளையில்லாது இருந்தது. அவனுக்கு 75 வயதும், அவளுக்கு 65 வயதுமான போது தேவன் ஆபிரகாமை நோக்கி, 'ஆபிரகாமே, உன்னை அவிசுவாசிகளின்று பிரித்துக்கொள்'' என்றார். தேவன் எப்பொழுதும் சில பிரிவினைகளை சம்பவிக்கச் செய்கிறவராய் இருக்கிறார். ''அவிசுவாசி களின்று பிரிந்து எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உன்னை ஜாதிகளுக்குத் தகப்பன் ஆக்கினேன்'' நான் ஏற்கெனவே அதைச் செய்து விட்டேன்,'' என்று தேவன் அவனோடு கூறினார். 89. ஆபிரகாம் அதை விசுவாசித்தான். “கர்த்தாவே, நீர் எவ்விதம் அதைச் செய்யப் போகிறீர்-?'' என்று அவன் ஒருபோதும் கேள்விக் கேட்கவில்லை. ஏனெனில் தேவன் அதை சொன்னார். அதுவே அதன் முடிவாய் இருக்கிறது என்று அவன் விசுவாசித்தான். 90. வாக்குத்தத்தத்தைப் பெற்ற முதல் மாதம் கடந்த பின்பும் சாராள் இன்னுமாக மலடியாகவே இருந்தாள். (ஸ்திரீகளுக்குரிய வழிபாடு இவளுக்கு நின்று போயிருந்தது). ஆபிரகாம் அவளை நோக்கி ஏதாகிலும் வித்தியாசமாக காண்கிறாயா-?'' என்று கேட்டான். அதற்கு அவள், “சிறிதளவும் அவ்விதமில்லை'' என்றாள். 91. இருந்தாலும் ஆபிரகாம் அதை விசுவாசித்தான். 25 வருடங்கள் கழித்தும் எந்தவித வித்தியாசமும் அங்கு காணப்படவில்லை-! ஆனால் ஆபிரகாம் இன்னுமாக விசுவாசித்தான். அவன் ஒரு பாவனை விசுவாசி அல்ல. விசுவாசியாகவே இருந்தான். 25 வருடங்களுக்கு பின்பும் அவன் ஆரம்பத்தில் கொண்டு இருந்ததை விட அதிகமாக விசுவாசத்தில் பெலனடைந்திருந்தான். அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். அது தான் உண்மையான விசுவாசிக்குரிய காரியமாகும். 92. இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் எந்த வகை விசுவாசிகள் என்பதை நீங்களே சோதித்தறியும்படிக்கு உங்களை விட்டு விடுகிறேன். 93. சரி, இந்த ஆபிரகாம் என்ன செய்தான்-? அவன் தேவனுடைய வாக்குத் தத்தத்தைக் குறித்து அது கைகூடாதது போல் தோன்றிய போதும், அவிசுவாசப் படவில்லை. 94. 75 வயது நிரம்பிய ஒரு மனிதன், 65 வயது நிறைந்த தன் மனைவியோடு ஒரு மருத்துவரிடம் சென்று, 'எங்களுக்குப் பிள்ளை பிறக்கப் போவதினால், மருத்துவமனையில் சில ஏற்பாடுகளைச் செய்ய விரும்புகிறோம்'' என்றுக் கூறி, பின்பு 25 வருடங்கள் கழித்து திரும்பவும் மருத்துவரிடம் வந்து ''ஐயா மருத்துவரே, எங்களுக்காக இன்னும் மருத்துவமனையை திறந்து வைத்து இருக்கிறீரா-?'' என்று கேட்பது எப்படி இருக்கும் என்று பாருங்கள்-? 95. உன்னுடைய அத்தகைய ஓர் நடவடிக்கை உன்னை வேடிக்கைக்கு உரியவனாக்கி விடும். உன்னுடைய தீர்மானங்கள் உலகத்திற்கு பைத்தியமாய் தோன்றும். ஆனால், அது எவ்வளவுதா ன் விகர்ப்பமாய்க் காணப்பட்டாலும் ஒரு விசுவாசிக்கு அது ஒரு பொருட்டல்ல. தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்று அவன் முழு நிச்சயமாக நம்பினான் என்று வேதம் கூறுகின்றது. 96. அத்தகைய வெற்றியுள்ள விசுவாசமே இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியின் பங்காக இந்த மதியத்தில் காணப்பட வேண்டும்-! ‘நிறைவேற்றுவேன்' என்று தேவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்ற அவர் வல்லவராய் இருக்கிறார்-! 'அற்புதங்களும், அடையாளங்களும் இக்காலத்திற்குரியது அல்ல. அத்தகைய காலங்கள் கடந்து போயிற்று-! இப்பொழுது நடப்பது எல்லாம் மனோவசியக் காரியமே அன்றி வேறல்ல'' அது ஒரு குறி சொல்லுதலாக இருக்கும் என்று ஸ்தாபனங்கள் கூறினாலும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை-! ஏனெனில் என்னுடைய துப்பாக்கியானது இலக்கை நோக்கி சரியாகக் குறி வைக்கப்பட்டிருக்கிறது; அது சரியாக இலக்கை நோக்கி தாக்கும் என்று நான் இன்னுமாக விசுவாசிக்கிறேன். அதே விதமாக ஒரு விசுவாசியானவன் தேவனுடைய வார்த்தையோடு ஒன்றி இருப்பானானால், அவனுடைய குறி சரியாக தேவனுடைய வாக்குத் தத்தத்தை சந்திக்கும் என்று நான் விசுவாசிக் கிறேன். தேவனுடைய வார்த்தையானது வாக்குத்தத்தத்தைக் கொடுத்து இருக்குமானால். அதை திரும்பவும் சம்பவிக்கச் செய்யும். இந்தக் காலத்தில் இத்தகைய காரியங்கள் சம்பவிக்க வேண்டும் என்பதை நாம் காணும் போது, அது அவ்விதமே நடந்தேறும் என்று நான் முற்றிலுமாய் விசுவாசிக்கிறேன். 97. அதன் காரணமாகவே, ஜீவ புஸ்தகத்தில் முன் குறிக்கப்பட்ட மணவாட்டி ஆனவள் அழைக்கப்படும் போது, வானத்திலிருந்து ஓர் சத்தம் பிறந்து, அது மணவாட்டிக்குள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அபரிமிதமாக நிரப்பி, பூமியில் இருந்து அவள் எடுக்கப்படுவதற்கேற்ற கிருபையை உண்டாக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் அதை வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார். விஞ்ஞானமும், விண்வெளி வீரர்களும் அநேக கோடி மைல்கள் தூரம் விண்வெளியில் சென்று ஆராய்ந்து பரலோகம் என்ற ஒன்று இல்லை என்று கூறி உறுதிப்பத்திரமாக வெளியிட்டாலும், அதை குறித்து எனக்கு எந்தவித கவலையுமில்லை. பரலோகம் என்று ஒன்றுண்டு. அங்கே உண்மைத் துவமாக இயேசு கிறிஸ்து என்பவரும் உண்டு. அவர் அங்கிருந்து ஒரு சரீரத்தில் தம்முடைய மணவாட்டியாகிய சபையை பெற்றுக் கொள்ள வருவார்-! எவ்வளவு பழையக் கதையாக அது தோன்றினாலும் அது ஒரு காரியமல்ல, ஏனெனில் அதை தேவன் கூறினதினால் அது சத்தியமாயிருக்கிறது. அதைத் தான் விசுவாசிகள் விசுவாசிக்கின்றனர். 98. “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். நான் கர்த்தர்-! நான் மாறாதவர்'' என்று தேவன் கூறினார். ஆமென்-! தேவன் வார்த்தையாயிருக்கிறார். தேவன் மாறாதவராய் ருப்பாரானால், அவருடைய வார்த்தையானது எப்படி மாறிப் போகும்-? கவனிக்கிறீர்களா-?'' “நான் கர்த்தர்; நான் மாறாதவர்'' என்று வசனமானது கூறுகிறது. தேவன் தமக்கே அதைக் கூறிக்கொண்டார். அவ்விதம் அவர் மாறாதவரானால், அவரே வார்த்தையுமாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்-!'' ஆமென்-! ஆம் ஐயா. 99. தேவன்; தம்முடைய வார்த்தை தற்காலிகமாக வாசம் செய்யத்தக்கதாக மோசே, எசேக்கியல், எரேமியா, ஏசாயா, எலியா போன்ற சரீரங்களை கால காலங்களில் எழுப்பினார்-! ஆனால் பூரண வார்த்தையானது இயேசு கிறிஸ்து என்னும் மனிதனில் வெளிப்பட்டது. இவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் சரீரப்பிரகாரமாகக் குடிக்கொண்டிருந்தது. தேவன், மாமிசமானார் என்ற வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். அவருடைய ஒவ்வொரு வார்த்தையை யும் நான் விசுவாசிக்கிறேன். யோபு என்னும் விசுவாசியைக் குறித்து சிந்திப்போம். 100. விசுவாசிகளானவர்கள் எப்பொழுதும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். “கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனை சிட்சித்து தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்'' (எபி 12:6). சோதனைகளையும், கரடு முரடான பாதைகளையும், உபத்திரவம் என்னும் தகிக்கிற சூரியனையும் ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் இருதயத்திலுள்ள சத்தியத்தின் நிமித்தம் சரீரமானது இத்தகைய சோதனைகளையும், உபத்திரவங்களையும் சகித்து, உருவாக்கப்படுவதற்கு ஆயத்தமாகின்றது. தேவனுடைய புத்திரர்கள் அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டு, சாட்சியின் மாதிரிகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் வார்த்தையாகிய தேவன் அவர்கள் மூலமாக ஜீவிக்கிறார். கவனிக்கிறீர்களா-? நீ அடித்தளத்தில் போகும் மட்டும் சோதனைகள் உன்னை அசைத்து, உன்னுடைய உறுதி எதிலே சார்ந்து இருக்கிறதென்று சோதித்தறியும். தேவனிடத்தில் வருகின்ற ஒவ்வொரு புத்திரனும் அவ்வாறே சோதிக்கப்படுகிறான். 101. யோபு உபத்திரவங்களாகிய சோதனைகளின் மூலம் கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. அவனுடைய பிள்ளைகள், அவனுக்கு உண்டாயிருந்த யாவும் அவனை விட்டு எடுபட்டுப் போயிற்று. அவனுடைய சபை அங்கத்தினர்கள் அவனிடத்தில் வந்து அவனை ஒர் இரகசிய பாவியென்று கூறி, அவனுக்கு விரோதமாக எல்லாவற்றையும் பேச முயற்சித்தார்கள். ஆனாலும் அவைகள் ஒன்றிற்காகிலும் அவன் செவிகொடுக்கவில்லை. ஏனெனில், தேவன் அவனிடம் எதிர்பார்த்த அன்றைக்குரிய கிருபையை அவன் நிறைவேற்றியவ னாய் இருந்தான்; அவனை சோதிக்க சாத்தானுக்கு எந்தவித முகாந்திரம் உண்டாகி இருக்கவில்லை என்பதையும் இந்தக் காரியத்தை செய்கிறவன் சாத்தான் தான் என்பதையும் யோபு அறிந்திருந்தான்-! அவனுடைய வியாதிக்கு தேவனே காரணமானவர் என்று யோபு விசுவாசித்த வரை, சாத்தான் யோபை சவுக்கினால் வாதித்தான். ஆனால் தேவன், இதற்கு காரணரல்ல என்றும், இந்த சோதனைகள் மூலம் தான் ஒரு உன்னத நிலைக்கு மாறிப்போகிறோம் என்ற வெளிப்பாடு யோபை சந்தித்த போது, அவன் தெளிவு பெற்றான். சாத்தானே அவனை உபத்திரவத்திற்கு உள்ளாக்கினான்; தேவனல்ல. 102. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கின்றது. உனக்கு ஏற்பட்டிருக்கிற சோதனைகளும், உபத்திரவங்களும் தேவன் உனக்கு அளிக்கின்ற தன்டனைகள் என்று பிசாசு உன்னிடம் சொல்ல முயற்சிப்பான். அது அவ்விதம் இல்லை, ஐயா. சாத்தானே அதை செய்கிறவனாய் இருக்கிறான். நீ சோதிக்கப்படும்படி தேவன் அனுமதித்து, உன்னுடைய பொக்கிஷமானது உலகத்தோடு கட்டப்பட்டு இருக்கிறதா அல்லது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை அறிகிறார். ஏனெனில், “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கு உங்கள் இருதயமும் இருக்கும்,'' என்று வேத வசனம் கூறுகின்றது. 103. யோபு சோதிக்கப்பட்டான். ஆனாலும் அவன், “என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்'' என்று கூறினான். 104. அவனுடைய சரீரத்தில் ஏற்கெனவே புழுக்கள் இருந்தன என்பதை கவனித்தீர்களா-? அவ்விதமே நம்முடைய சரீரத்திலும் புழுக்கள் இருக்கின்றன. காற்று புகாவண்ணமாயுள்ள சரீரக் கூட்டை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் தோலை தின்னும் புழுக்கள் ஏற்கெனவே அங்கிருக்கின்றன. தங்கள் கிரியையைச் செய்யத் தக்கதான நேரத்திற்காக அவைகள் அழைக்கப்பட காத்திருக்கின்றன. ஏரோது ராஜாவை ஞாபகம் கொள்ளுங்கள். அவன் சரீரத்தில் புண்கள் காணப்பட்டு, அவனுடைய தோல் புழுக்கள் அங்கே அவனை தின்றன. ஆகவே அவைகள் அங்கு கிரியை செய்ய ஆயத்தமாயிருக்கின்றன. 105. ''இந்த என் தோல் முதலானவைகள் புழுக்களால் அழிக்கப்பட்ட பின்பும், நான் என் மாமிசத்தில் இருந்து தேவனை பார்ப்பேன்,'' ஆமென்-! புழுக்கள் இந்த சரீரத்தை தின்று விட்டாலும், இதை முற்றிலுமாக அழித்து விட முடியாது. ஏனெனில் அது திரும்பவும் உண்டாகும். “அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்'' என்று யோபு கூறினான். ஏன் அவ்விதம் அவன் கூறினான்-? அவன் ஒரு விசுவாசியாய் இருந்தான். சோதனையிலும், உபத்திரவத்தின் நேரத்திலும் அவன் உண்மையுள்ள ஒரு விசுவாசியாய் இருந்தான்-! 106. யோசேப்பு என்னும் அடுத்த விசுவாசியைக் குறித்துப் பார்ப்போம். அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பதை தவிர்க்க முடியாதவனாயிருந்தான். ஏனெனில் தேவன் அவனை ஒரு தீர்க்கதரிசியாக உண்டாக்கியிருந்தார். தன்னுடைய சகோதரர்களினின்று அவன் வித்தியாசப்பட்டவனாயிருக்க விரும்பவில்லை ஆனாலும் அவன் வித்தியாசப்பட்டவனாயிருந்தான். அவன் எவ்விதமாயிருக்க வேண்டுமோ அவ்விதமே, அவனை தேவன் படைத்தார். அவனுடைய இடத்தை வேறு எவரும் களவாட முடியாது. 107. அதே விதமாக உன்னுடைய ஸ்தானத்தையும் வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. “நான் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்தான், ஐயா,'' என்று ஒருவேளை நீ கூறலாம். தேவன் தம்முடைய ஆதினத்தில் உன் ஸ்தானத்தைக் குறித்திருக்கிறார். கிறிஸ்துவின் சரீரம் அவ்வித ஒழுங்கில் வைக்கப்பட்டு உள்ளதால் உன்னுடைய ஸ்தானத்தை வேறு எவரும் எடுத்துக் கொள்ள முடியாது. பில்லி-கிரகாமின் இடத்தை வகிக்க நான் (நம்மில் பல ஊழியக் காரரும்) எவ்வளவாய் ஆசித்தாலும் அதை நான் வகிக்க முடியாது. அது போல பில்லிகிரகாமும் நம்முடைய இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. பாருங்கள்-? நம் எல்லாருக்கும் ஒவ்வொரு ஸ்தானம் உண்டு. நம்மில் சிலர் சுவிசேஷ கராகவும் சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் போதகர்களாகவும் மேய்ப்பர்களாக வும் இருக்கிறோம். சிலர் குடும்ப பெண்களாகவும், சிலர் விவசாயிகளாகவும், தொழிலாளிகளாகவும் இருக்கிறோம். தேவன் உங்களை உங்களுடைய ஸ்தானத்தில் நிறுத்தி இருக்கிறதை கவனித்தீர்களா-? 108. யோசேப்பு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். சொப்பனத்திற்கு வியாக்கியானம் செய்ய அவனால் கூடுமாகையால் அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. தரிசனங்கள். காண்பதை அவனால் தவிர்க்க இயலவில்லை. அவன் எவ்வளவு உண்மை உள்ளவனாய் இருந்தான் என்பதை கவனியுங்கள். தான் கண்ட சொப்பனங்களை அவன் விசுவாசித்த காரணத்தால் அதினிமித்தம் தன்னுடைய சகோதரர்களின் நட்பை அவன் இழந்துவிட நேரிட்டாலும், அவன் உண்மை உள்ளவனாய் இருந்தான். தன் சகோதரர்கள்-கதிர்கட்டுகள் தன்னை வணங்கு வார்கள் என்று விளங்கும்படியாக அவன் கண்ட சொப்பனங்கள் அந்த விதமாகவே நடந்தேறியது. ஏனெனில் அவன் அதை விசுவாசித்தான். அவன் ஒரு உண்மை உள்ள விசுவாசியாயிருந்தான். 109. எனக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் உள்ளன. அந்த ஸ்திரீ... ஆனால் பத்து பக்கத்திற்கு வேத குறிப்புகள் இங்கு எழுதி வைத்துள்ளேன். 110. நாத்தான்வேல் ஒரு விசுவாசியாயிருந்தான். அது உண்மையா-? அவன் ஓர் கபடற்ற உத்தம இஸ்ரவேலனென்றும், பிலிப்பு அவனை அழைப்பதற்கு முந்தின தினம் அவன் ஒரு அத்தி மரத்தினடியில் ஜெபம் செய்து கொண்டிருந்ததையும் இயேசுவானவர் முன்னறிந்து கூறினபோது, அது அவனுக்குள் கிரியை செய்தது. அவன் ஒரு விசுவாசியாய் இருந்தான். 111. அங்கே அநேகர் கூடி நின்று, "இவன் பிசாசு பிடித்தவன். இவன் பிசாசின் ஆவியினால் சுகப்படுத்துகிறான்' என்றார்கள். அந்த அதே பழைய பிசாசு இன்றைக்கும் மரித்து விடவில்லை. பிசாசு சுகமளித்தலின் கிரியை செய்தது என்று அவர்கள் விசுவாசித்தார்கள். 112. சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி-? ஒரு இராஜ்யம் தனக்கு தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த இராஜ்யம் நிலை நிற்க மாட்டாதே'' (மாற்கு3:23:24) என்று இயேசு கூறினார். பாருங்கள்-? சாத்தான் சொன்னான். அதை அவனால் செய்ய முடியாது. ஆகையால் சாத்தான், சாத்தானைத் துரத்த முடியாது. 113. நாத்தான்வேல் விசுவாசியாய் இருந்தான். வார்த்தையானது மாமிசமாகி நிரூபிக்கப்பட்டு, தம்மை ஒரு விசுவாசி என்று அழைத்தபோது, அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா,'' என்று கூறினான். அவன் அதை விசுவாசித்தான். 114. சமாரியா கிணற்றண்டை காணப்பட்ட அந்த ஸ்திரீயானவள் அதை விசுவாசித்தாள். ஏனெனில் அவள் ஒரு விசுவாசியாய் இருந்தாள். 115. குருடனான பர்த்திமேயு... அந்த ஸ்திரீ.. வந்த போது... இயேசுவைக் சுற்றிலும் அநேக ஜனக்கூட்டத்தினர் கூப்பாடு போட்டுக் கொண்டும், கதறிக் கொண்டும் இருந்தனர். அவர்களில் சிலர், “மரித்தவனை உயிரோடு எழுப்பினீராமே, இங்கே இந்த கல்லறைத் தோட்டம் நிறைய மரித்தவர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் எல்லோரையும் உயிரோடு எழுப்புமே பார்க்கலாம். உம் கிரியையை நாங்கள் பார்க்க வேண்டுமே,'' என்று கூறியிருப்பார்கள். பாருங்கள் அத்தகைய அதே பிசாசு தான். “நீர் தேவனுடைய குமாரனே ஆனால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றும், முள்ளுக ளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து அவர் மேல் துப்பி, அந்த கோலை எடுத்து அவரை சிரசில் அடித்து, “உம்மை அடித்தவன் யார் என்று கூறும். அப்பொழுது உம்மை விசுவாசிப்போம்'' என்று கூறிற்று. அந்த சேவகர்கள் அவரை பரியாசம் பண்ணினார்கள். உக்கிரமானது அவர் மேல் சொரியப்பட்ட வண்ணமாகக் காணப்பட்டது. 116. ஆனால் தேவன் எப்பொழுதும் அத்தகைய நேரத்தில் காணப்படுகிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எந்த நேரமும் உதவி செய்வதற்கு தேவன் அங்கு ஆயத்தமாய் இருந்தார். 117. “இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா-? அப்படி செய்வேனானால், இவ்விதமாய் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்று இயேசு கூறினார். அவர் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டியவராய் உலகிற்கு வந்தார். ஆகவே அதனூடாக அவர் கடந்து செல்லவேண்டியதாயிற்று. 118. நீயும் கூட ஏதாகிலுமொன்றை செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டு இருக்கின்றாய். ஒருவேளை நீ மனமுறிவு உடையவனாகவோ, உபத்திரவங்கள் உடையவனாகவோ அல்லது சில ஏமாற்றங்கள் உடையவனாகவோ காணப் படலாம். அவைகளை விட்டு ஓடிவிடலாம் என்று எண்ணுகிறாயா-? “கர்த்தாவே, இவைகள் எனக்காக வைக்கப்பட்டிருக்குமானால், அவைகள் எதுவாயிருந்தாலும் அவைகளினூடே நான் கடந்து செல்ல கிருபை தாரும்'' என்று ஜெபம் செய். அதுவே போதுமானதாகும். 119. குருடனான பர்த்திமேயுவை நாம் இப்பொழுது கவனிப்போம். “கலிலேயாவில் இருந்து வந்த இந்த தீர்க்கதரிசி, தாவீதின் குமாரன் தான் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று சில விசுவாசிகள் கூறினதை அவன் கேட்டு இருந்தான். ''விசுவாசிகளாகிய நாங்கள் அவர் தான் தாவீதின் குமாரன்'' என்று அறிந்து உள்ளோம் என்றார்கள். 120. அவர் அவ்விதம் தாவீதின் குமாரனாய் இருப்பாரானால் அவரே வார்த்தை ஆனவர் என்பதை பர்த்திமேயுவும் அறிந்திருந்தான். அவரே வார்த்தை என்று அவன் அறிந்திருந்தான் என்றால், அவரே, இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவர் என்றும் அறிந்திருந்து இருப்பான். ஆகவே அவன், “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்,'' என்று கதறினான். அங்கே அவிசுவாசிகளும், சபை அங்கத்தினர்களும் பலவாறாக இயேசுவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களால் குருடனான பர்திமேயுவை தடுத்து நிறுத்த முடிய வில்லை. 'இயேசுவே, தாவீதின்குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாகக் கதறினான்-! 121. ஒரு வேளை அவன் கதறின சத்தம் இயேசுவின் காதில் விழாமல் இருந்து இருக்கலாம். ஆனால் அவனுடைய கதறுதலை அவர் தம் இருதயத்தில் அறிந்தார். ஆகவே அவர் அங்கு நின்று திரும்பி, ஒரு விசுவாசி அங்கே நிற்பதைக் கண்டு, ''உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். ஆமென். 122. பெரும்பாடுள்ள ஸ்திரீயிடமும் இயேசு அதையே கூறினார். 123. ஏனெனில் அவள் தன் இருதயத்தில் ''அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சொஸ்தமாவேன்'' என்று விசுவாசித்தாள். ஆகவே இயேசு அவளை நோக்கி, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்று கூறினார். அவள் ஒரு விசுவாசியாய் இருந்தாள், பாருங்கள்-? (சகோ பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை பலமுறை தட்டுகிறார்). 124. இருதய வியாதியினால் பீடிக்கப்பட்ட 91 வயதான வில்லியம் டௌ என்பவர் அன்று ஒருநாள் அவ்விதமே, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்ற விதமாக சொஸ்தமானார். ஏன், அவர் ஓர் விசுவாசியாயிருந்தார். 125. சங்கை.டாம்-கிட் இன்று இங்கிருக்கிறார். அவருக்கு தற்போது 90 வயது ஆகின்றது. அவர் 79-வயதாய் இருக்கும் போது அவருக்கு ஏற்பட்ட புற்று நோயினால் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள், இனி அவர் பிழைப்பது அரிது என்ற தங்கள் கருத்தை தெரிவித்து விட்டார்கள். 126. அன்று காலை நாங்கள் அவருக்காக ஜெபிக்கச் சென்றோம். அங்கே அவர் போர்வையை போர்த்திய வண்ணம் அமர்ந்திருந்தார். அவருடைய பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியை பாட்டி என்று அவர் அழைத்து, ''அம்மா நீங்கள் பனியைப் போன்று வெண்மையாயிருக்கிறீர்கள்'' என்று தன்னுடைய அறிவுக்கும் அப்பாற்பட்ட விதமாக கூறினார். அவர் தன் நிலையை முற்றிலுமாக இழந்தவராக அவ்வளவு கடைசி கட்டத்தில் காணப்பட்டார். 127. இருந்தாலும் தேவனுடைய வல்லமை அந்த அறையை நிரப்பிற்று. இன்று அவர் நம்மோடு உயிருள்ளவராக இருக்கின்றார்-! இது நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஏறத்தாழ 80 வயதுடைய ஒரு மனிதன் புற்று நோயின் அறிகுறி ஏதுமில்லாமல் இன்று நம்மிடையே சுகதேகியாய் இருக்கிறார்-! அவர் ஒரு பாவனை விசுவாசியல்ல, மாறாக அவர் ஓர் விசுவாசியாக இருந்தார். அது தான் காரியம். தேவனுடைய வார்த்தையில் அவர் தேவனை சந்தித்தார். 128. குருடனான பர்த்திமெயுவை போன்று அவரும் இருந்தார். பர்த்திமேயு குருடனாய் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் கவனத்தை தன்னிடமாக திருப்பினால் தன் விருப்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். 129. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் தன் விருப்பம் நிறை வேறும் என்பதை பெரும்பாடுள்ள ஸ்திரீ அறிந்திருந்தாள். 130. டாம் கிட் விசுவாசமுடையவராயிருந்தார். நான் அவருக்காக ஜெபம் செய்தால், தான் விரும்பும் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். 131. மார்த்தாளின் விசுவாசமும் அது போன்றதில்லையோ-? அவள், “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன். என் சகோதரன் மரித்து நான்கு நாளாயிற்று. அதோ அங்கே அந்த கல்லறையில் அவன் கிடக்கிறான். ஆனாலும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொண்டால் அதை அவர் உமக்குத் தந்தருளுவார்,'' என்றாள். இயேசு அவளை நோக்கி, ''உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்,'' என்றார். 132. அதற்கு மார்த்தாள், ''உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவன் மிகவும் நல்லவனாக இருந்தான்,'' என்றாள். இயேசு அவளை நோக்கி, “நானே அந்த உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,'' என்றார். அதற்கு அவள், 'ஆம் ஆண்டவரே, நான் அதையும்கூட விசுவாசிக்கிறேன்'' என்றாள். அவனை எங்கே வைத்தீர்கள்-?'' என்று இயேசு கேட்டார். அதுதான் அதற்கு முடிவு. ஆம் ஐயா. 133. தென் தேசத்து ராஜஸ்திரீ அந்த நாட்களின் அவிசுவாசியான சந்ததியின் மத்தியில் வந்து தான் கண்டதை “தேவனுடைய-காரியம்'' என்று விசுவாசித்தாள். ''தென் தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோன் உடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்த சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள் மேல் குற்றம் சுமத்துவாள்'' (மத்:12:42) என்று வேதம் கூறுகின்றது. 134. மோசே, ஒரு விசுவாசியாயிருந்தான். அவன் தன்னுடைய ஞானத்தினால் இஸ்ரவேலரை மீட்க முயற்சித்தான். ஆனால் அது கிரியை செய்யவில்லை. அவன் அழைப்பைப் பெற்றவன் என்று அறிந்திருந்ததால், தான் கற்ற கணித வழியாகவும், யுத்த வழியாகவும், கல்வியின் வழியாகவும் இஸ்ரவேலரை மீட்க அவன் முயற்சித்தான். ஆனால் அவைகளெல்லாம் கிரியைக்கு உதவவில்லை. ஆனால் பின்பு அவன் தேவனுடைய வழியைத் தெரிந்து கொண்டான். 135. பின்பு சம்பவித்ததென்ன-? ஒரு நாள் அவன் ஒரு புதரிலே அவியாமல் எரிகின்ற அக்கினியை சந்தித்தான். அந்த அக்கினியினின்று வார்த்தையானவர், ''இருக்கிறவராக இருக்கிறேன்'' என்று உரைத்தார். “இருந்தவர் அல்லது இருக்கப் போகிறவர்'' என்று அல்ல- “இருக்கிறவராக இருக்கிறேன்'' என்று கூறினார். அவர் இன்றைக்கும் இருக்கிறவராக இருக்கிறார்-! அவரே நித்திய வார்த்தையாய் இருக்கிறார். 136. மோசே, சந்தேகிக்கவில்லை. இயற்கை அவனுக்கு எதிராக இருந்தது. ஒவ்வொரு காரியமும் அவனுக்கு எதிராக இருந்தது. ஆனாலும் ஒரு வளைந்த கோலை தன் கையில் பிடித்தவனாய், எகிப்திற்குச் சென்று முழு தேசத்தையும் கைப்பற்றி எகிப்தின் சேனையை சிவந்த சிவந்த சமுத்திரத்தில் மூழ்கச் செய்து, இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றான். எவ்விதம் அதை செய்தான்-? அவன் தேவனை விசுவாசித்தான். அது தான் உண்மை . அவன் தான் விசுவாசிக்கிறவன். 137. நான் இந்த விசுவாசிகளைக் குறித்தே அரை மணி நேரம் பேசிவிட்டேன். 138. இன்னும் இரண்டு வகுப்பினர் நமக்குண்டு, அவர்கள் நமக்கு முக்கியமான பொருளாக இல்லா விட்டாலும் அந்த இரண்டு வகுப்பினரையும் துரிதமாக பார்ப்போம். 139. இரண்டாவதாக நாம் இப்பொழுது அவிசுவாசிகளைக் குறித்து பார்ப்போம். ஒரு அவிசுவாசி என்ன செய்வான்-? 140. விசுவாசி எதைச் செய்வான் என்று பார்த்தோம்-? விசுவாசி வார்த்தையை ஏற்றுக் கொள்வான். நோவா முதல் இன்று வரை ஒவ்வொரு விசுவாசமான இனமும், சந்ததியும் அவ்வாறே வார்த்தையை ஏற்றுக் கொள்வார்கள். விசுவாசி த்தவர்கள் என்ற பொருளின் பேரில் ஆறு மாத காலங்களுக்கு எழுப்புதல் கூட்டம் நடத்தும் அளவிற்கு நம்முடைய வேதத்தில் கதாபாத்திரங்கள் உண்டு. விசுவாசியானவன் தர்க்கிப்பதில்லை. எவ்வளவு தான் நடக்க முடியாத காரியமாக இருந்தாலும். அதைக் குறித்து யார் என்னக் கூறினாலும், அது எந்த விதமான சத்தத்தை தொனித்தாலும், விசுவாசியானவன் அதை விசுவாசிக் கிறான். 141. எதை ஐயா-? வார்த்தையை-! சமய கோட்பாட்டையோ ஸ்தாபனத்தையோ அல்லது வேறு யார் கூறுவதையோ அல்லது வார்த்தையையே விசுவாசியா னவன் விசுவாசிக்கிறான். 'அது எவ்வாறு நடக்கும்-? அதை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தால்.'' என்று எல்லாம் விசுவாசியானவன் கூற மாட்டான். அவிசுவாசி தான் அவ்விதமாக கேட்பான் பாருங்கள்-? ஆ அது எவ்விதமாய் இருப்பினும் விசுவாசியானவன்,'' அது வார்த்தையென்றால் வார்த்தைதான். அது உண்மை,'' என்று கூறுவான். அவன் தான் விசுவாசிப்பவன். 142. அவிசுவாசிகள், தாங்கள் 'சீஷர்கள்' என்று அழைக்கப்பட்டு, ஜனங்கள் அவர்களின் முதுகில் தட்டிக் கொடுக்கும் வரை சரியான காரியங்களைச் செய்தார்கள். எல்லாம் சுமுகமாய் இருக்கும் வரை அவர்களுடைய காரியங்கள் சரியாக இருந்தன. தீர்க்கதரிசியென்று யாரை அவர்கள் விசுவாசித்தார்களோ, அவர் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்திக் கொண்டு இருந்தவரை அவரை விசுவாசித்தார்கள். ஆனால் சத்தியமும், கடிந்து கொள்ளலும் அவர் மூலமாய் வந்த போது, அது அவர்கள் விசுவாசத்திற்கு முரணாகக் காணப்பட்ட போது, வார்த்தையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . 143. அவர் அற்புதங்களைச் ஏற்றுக் கொண்டு, அதையே தாங்களும் செய்தார்கள். அவர்கள் வெளியே சென்று பிரசங்கித்து பிசாசுகளைத் துரத்தினார்கள், இருந்தாலும் அவர்கள் அவிசுவாசிகளாய் இருந்தார்கள். 12 சீஷர்களுடன் மற்ற எழுபது பேரும் இரண்டிரண்டு பேராகச் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். அவர்கள் தங்கள் ஊழியத்தின் செய்தியை இயேசுவுக்கு அறிவித்த போது, இயேசு, “சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்'' என்று கூறினார். அவர்கள் பிசாசுகளைத் துரத்தினார்கள், யூதாசும் அவர்களில் ஓருவனாக இருந்தான். (இங்கே தான் அவிசுவாசிகள் காணப்படு கிறார்கள்.) 144. ஆனால் இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்றும் “மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப் போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்-?'' என்றெல்லாம் கூறின போது. 145. அவர்கள், ''இந்த மனிதன் என்ன, தன்னை வானத்திலிருந்து வந்தவன் என்று கூற முயற்சிக்கிறான்; இது மிகவும் மிகைப்படுத்தப்பட்டக் காரியம். இதை நம்மால் விசுவாசிக்க இயலாது'' என்று கூறினார்கள். 146. அதற்கு இயேசு, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, நீங்கள் பேசுகிற மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது'' என்று கூறினார். 147. அங்கு தான் காரியம் உள்ளது. வார்த்தையை ஆவியானது உயிர்ப்பிக்கிற தாய் இருக்கிறது - ஒரு ஸ்தாபன கோட்பாடல்ல. பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை உயிர்ப்பித்து உன்னில் ஜீவிக்க செய்கிறார். அது தான் காரியம் ஐயா, விசுவாசத்தினால் நீ அதைக் காண்கிறாய். ஆவியானது வார்த்தையை உயிர்ப்பித்து; உங்களுக்குத் தருவதால், தேவனுடைய வார்த்தை கூறுவது எதுவோ,' அது அவ்விதமே,'' என்று நீ அறிகிறாய். 148. நாம் வார்த்தைக்கேற்ற கிரியையை நடப்பிக்கும் போது, அவிசுவாசிகள் யாரென்று வெளிப்படுவதை நாம் காணலாம். நீங்கள் ஒன்றைக் கூறினால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் உங்களுக்கு எதிராக வெளி நடந்து, “நான் அதை விசுவாசிக்க மாட்டேன்'' என்று கூறுவார்கள். ஓ, அத்தகைய காரியம் இன்றுள்ள உலகத்தில் அதிக ஆழமாய் புரையோடி விட்டது. ஏதாகிலும் ஒன்றைக் கூறினால். 149. அவர்கள் கூட்டமாக கூடிவிடுகிறார்கள். நான் அநேக கூட்டங்களில் அதை கவனித்திருக்கிறேன். அவர்கள் பெருங் கூட்டமாக கூடி நின்று கவனித்துக் கேட்டுக் காத்து கொண்டே இருப்பார்கள். அப்பொழுது நீ, “இயேசு கிறிஸ்து மேசியாவில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார்'' என்று கூறும் போது, அவர்களால் அதை தாங்க முடியாமல் தலைகளை துலுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். அது என்ன-? அவிசுவாசிகள்-! 150. “நீரே இதை உண்டு பண்ணி கூறுகிறீர்'' என்று நீ கூறலாம். நான் எதையோ உருவகித்துக் கூறவில்லை. வேதம் என்ன கூறுகிறதோ அதையே நானும் சரியாக கூறுகிறேன். 151. அவர்கள் சீஷர்களாய் இருந்த போதிலும் அவிசுவாசிகளாய் இருந்ததால் அங்கிருந்து புறம்பே சென்று விட்டனர். 'இத்தகைய ஓர் காரியத்தை யாரால் விசுவாசிக்கக் கூடும்-?'' என்று அவர்கள் கூறினார்கள். இயேசுவோடு இணைந்து புறப்பட்டுச் சென்று, பின்பு வெளியே வந்த பரிசேயரும், சதுசேயருமாக அவர்கள் இருந்தனர். 152. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் தன்னுடைய கிரியையை வெளிப்படுத்திக் காண்பிக்கும் பொழுது, அங்கே மூன்று வித்தியாசப்பட்ட காரியங்களை அது உண்டு பண்ணுவதாய் இருக்கிறது. எகிப்து தேசத்தில் அது அவ்விதம் தான் செய்தது. அங்கு அந்த மூன்று வகையினர் காணப்பட்டனர். இரவு முழுவதும் விவரிக்கும் அளவிற்கு அக்காரியங்களை நான் இங்கு குறித்து வைத்து இருக்கிறேன். எப்பொழுதும் எங்கேயும் இந்த 3-வகையினரை நீங்கள் காணலாம். 153. இந்த எழுபது பேரை கவனியுங்கள். அவர்கள் அவரோடு நடவாமல் பின் வாங்கிப் போனார்கள். ஏனெனில் அவர்கள் எதை சரியென்று விசுவாசித் தார்களோ அதற்கு அது முரண்பட்டதாய் இருந்தது. 154. நம்முடைய சிந்தனைகள் அல்ல, அவர் என்ன கூறினாரோ அதுவே காரியமாய் இருக்க வேண்டும். உன்னுடைய சொந்த எண்ணங்களை நீ மறந்து விட்டு, அவர் என்ன கூறுகிறாரோ அதையே நீயும் கூறுவாயாக. அது தான் உண்மையான ஏற்றுக் கொள்ளுதலாகும். ஒப்புக் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்வது என்பது அந்த காரியத்தையே அறிக்கையிடுவதென்பதாகும். ஒரு காரியம் நடைபெற்றது என்று நான் அறிக்கை செய்வேனானால், நடந்த காரியம் அதுவே என்று தான் நான் கூற முடியும். அதுதான் உண்மையான அறிக்கையும் கூட. நம்முடைய அறிக்கையின் பிரதான ஆசாரியர் இயேசுவே. கவனிக்கிறீர்களா-? தேவன் கூறினதையே திரும்பவும் கூறுவது அதை உறுதிப் படுத்துவதாய் இருக்கிறது. ஏனெனில் தேவனுடைய வார்த்தையையே நீ திரும்பக் கூறுகிறாய். 155. இப்பொழுது கவனியுங்கள், அந்த எழுபது பேர் பின் வாங்கிப் போனதின் காரணம் என்ன-? அவர்கள் பின் வாங்கிப் போனதின் காரணம், அவரோடு ஒவ்வாமல் இருந்ததுதான். அவர்களுடைய ஞானமும், சபையோடு அவர்களுக்கு இருந்த இணக்கமும் அதிகமாய் இருந்தது. இயேசு, தம்மை தேவன் என்று கூறியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு முன்பாக நின்றுக் கொண்டு இருந்த அந்த மனிதனை தவறாய் பிறந்தவனென்று மீதமுள்ள ஜனங்கள் விசுவாசித்ததால் அவர் தம்மை தேவன் என்று அழைத்துக் கொள்ள அவருக்கு அதிகாரமில்லை என்றும், அவர் ஒரு சாதாரண மனிதன் தான் என்றும் அவர்கள் நினைத்தனர். யூதர்கள், “நற்கிரியையின் நிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி இவ்விதமாகத் தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால் உன் மேல் கல்லெறிகிறோம்'' என்றார்கள். 156. தேவனுடைய வார்த்தை அவரை தேவன் என்று கூறிற்று. "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்'' என்று அவர்கள் வாசித்த அதே வேத வசனங்கள் கூறிற்று. 157. ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்-? என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தாவீது 800 வருடங்களுக்கு முன்பு பாடிய சங்கீதத்தை அவர்கள் ஜெப ஆலயத்தில் தினந்தோறும் அறிக்கை செய்து கொண்டிருந்த போதிலும், உண்மைத்துவமாக அவர், அவர்கள் மத்தியில் வந்த போது, அவர்கள் குருடராயிருந்து அதை காணத் தவறிப் போனார்கள். 158. இன்றைக்கும் அதே காரியம் தான் சம்பவித்திருக்கிறது. இந்தக் காலத்தைக் குறித்து முன்னுரைத்த தேவன், தாம் எதை செய்யப் போவதாகக் கூறினாரோ அதையே சரியாக செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதைப் பார்க்கக்கூடாமல் அவர்கள் குருடராய் இருக்கிறார்கள்-! அவர்கள் தாம் அவிசுவாசிகள். அத்தகைய காரியத்தை என் ஜீவியத்தில் நான் கேள்விப்பட்டதேயில்லை. அதையென்னால் விசுவாசிக்க முடியாது'' என்று அவர்கள் கூறி புறம்பே சென்று விடுவார்கள். அது அவ்விதமாகத்தான் இருக்கும் என்று வேதம் கூறினதால் அதை அவர்கள் கேட்டாலும் எந்தவித வித்தியாசத்தையும் அவர்களுக்கு அது உண்டாக்காது. 159. அவர்கள் அதைக்குறித்து கேள்விப்பட்டே இருக்க மாட்டார்கள். ஆனாலும் அது அவ்விதமே மாறாததாய் இருக்கின்றது. பாருங்கள்-? அதுதான் உண்மை. 160. ஏவாளைப் போன்று அவர்களும் அவிசுவாசிகளாய் இருக்கின்றனர். அவள் மிகவும் பக்தியுள்ளவளாயிருந்தாள். ஆனால் உண்மையான வார்த்தையை அவளால் விசுவாசிக்க முடியாததினால் தனக்கென்று அத்தியிலைகளால் ஆனதொரு மதத்தை உண்டாக்கிக் கொண்டாள். கவனித்தீர்களா-? ஆனால் அத்தகையக் காரியம் கிரியைக்குதவாது. 'மதம் (Religion) என்பதற்கு போர்வை (Covering) என்ற பொருளாகும். 161. காயீனும் அத்தகைய காரியத்தைதான் செய்தான். சரியானதெதுவோ அதை அவனால் விசுவாசிக்க முடியவில்லை. அவன், “தேவன் பரிசுத்தமும், அழகான வருமாய் இருக்கிறார்; ஆகவே நான் அவருக்கு அழகான ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதிலே அழகான மலைர்களைத் தூவி அதை அலங்கரித்து, அதன் முன்பாக பயபக்தியுடன் பணிந்து தேவனைத் தொழுதுக்கொள்வேன். ஏனெனில் எனது தகப்பனும், தாயும் சில ஆப்பிள் பழங்களை (ஏதோ சில பழம்) உண்டதால் நான் பிறந்தேன். ஆகவே நிலத்தின் கனிகளால் பலிபீடத்தை அலங்கரிப்பேன். என்னுடைய இந்த மகத்தான ஆலயத்தை தேவன் புறம்பாக்க மாட்டார். அவரின் கவனத்தை கவரும் மட்டும் நான் அதை அழகுப் படுத்துவேன்,'' என்று கூறினான். சாத்தான் என்பவன் தான் அழகு என்று காரியத்தில் வசிக்கின்றான். வேதமும் அப்படித் தான் கூறுகின்றது. 162. அதன் காரணமாகத்தான் ஒரு அழகுள்ள ஸ்திரீ சாத்தானின் கண்ணிக்கு இலக்காகிறாள். அத்தகைய ஒருவளை அவன் தன் கைக்குள் போட்டுக் கொள்ளுவானானால், தேசத்திலுள்ள மதுநிலையங்கள் மனிதர்களை நரகத்திற்கு ஆயத்தம் செய்வதை விட அதிகமான மனிதர்களை ஒரு அழகான பெண்ணின் மூலம் அவன் நரகத்திற்கு அனுப்பிவிடுவான். அது உண்மை. அதே விதமாக வசிகரமான ஒரு வாலிபனும் பிசாசின் கையில் அமைவானானால் அநேக பெண்களை பிசாசு நரகத்திற்கு அனுப்பிவிடுவான். ஆம் ஐயா. 163. சாத்தான் அழகில் வசிக்கிறான் என்பதை கவனியுங்கள். ஆதியிலே அவன் செய்யமுயற்சித்த காரியமென்ன-? மிகாவேலின் இராஜ்ஜியத்தைக் காட்டிலும் ஒரு அழகான இராஜ்ஜியத்தை உண்டாக்க அவன் நினைத்து, வட திசையாக திரும்பி, மூன்றில் இரண்டு பங்கு தேவ தூதர்களை தனக்கென்று வசியப் படுத்திக் கொண்டான். 164. அதன் பின்பு யாருடைய குமாரன் அத்தகைய சுபாவத்தை தனக்குள்ளே உடையவனாய் இருந்தான்-! சாத்தானுடைய குமாரனே அத்தகையோனாய் இருந்தான். இப்பொழுது கவனியுங்கள். காயீன் பலிபீடத்தை உண்டாக்கி, அதன் முன்பாக முழங்காற்படியிட்டு தொழுது கொண்டான். ஆபேல் செய்த எல்லா அடிப்படையான காரியத்தையும் காயீனும் செய்தான். ஆனால் ஆபேலோ காயீன் செய்யும் காரியம் தவறு என்று அறிந்திருந்தான் 165. பால் உணர்வினால் ஏற்பட்ட இரத்த சம்பந்தமே, தாங்கள் பிறந்ததின் காரணம் என்பதனை அறிந்தவனாய் அவன் ஒரு சிறு ஆட்டை எடுத்து, கூர்மை யான கல்லினால் அதின் கழுத்தை அறுத்து, அதை பலியாக அங்கு செலுத்தினான். 166. காயீனைக் கவனியுங்கள், “உன் சகோதரன், தொழுது கொண்ட விதமாக நீ ஏன் என்னை தொழுது கொள்ளவில்லை-? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ-?'' என்று தேவன் அவனிடம் (காயீனிடம்) கேட்டார். ஆனால் அவனோ அதைக் குறித்து அதிகமாய் தன் ஞானத்தில் அறிந்து இருந்தான். கவனிக்கிறீர்களா-? நிரூபிக்கப்பட்ட மூல வார்த்தையை அவன் நிராகரித்து விட்டான். அவ்விதமாக இன்றைக்கு ஜீவித்துக் கொண்டு இருப்பவர்களும் அவனுடைய குமாரர்களல்லவா-? பாருங்கள். 167. இப்பொழுது கவனியுங்கள். எபிரேயர் 11-ம் அதிகாரத்தில் தேவனே, ஆபேல் நீதிமான் என்று சாட்சி கொடுத்து அவனுடைய காணிக்கைகளைக் குறித்து சாட்சிக் கொடுத்தார். அவனுடைய காணிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அதை நிரூபித்தார்; அது அவருடைய வார்த்தை, அவருடைய திட்டம். 168. ''அதையே நீயும் செய்து வாழ்ந்திரு'' என்று காயீனுடன் தேவன் கூறினார். தன்னுடைய சொந்த எண்ணங்களை காயீன் தியாகம் செய்து விட்டான் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா-? இல்லை. ஐயா. அவன் ஒரு அவிசுவாசியாய் இருந்தான். அவன் வெளியேறினான். அது உண்மை. நிம்ரோத் அதே காரியத்தை தான் செய்தான். அவனால் விசுவாசிக்க முடியவில்லை. பெல்ஷாத்சார் அதையே செய்தான். 169. நேபுகாத்நேச்சார் அதையே செய்தான். தானியேலை தீர்க்கதரிசியாக அவன் கொண்டு இருந்தும் அவனால் விசுவாசிக்க முடியவில்லை. தானியேல் தேவனுடைய மகத்தான கிரியைகளை செய்வதைப் பார்த்து (தானியேலை அவனுடைய கடவுளின் நாமமாகிய பெல்தேஷாத்சார் என்று நேபுகாத்நேச்சார் அழைத்தான்) அவனுக்கு ஒரு சிலையை செய்வித்து அங்கே நிறுவி, அதை எல்லாரும் தொழுது கொள்ள வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். புறஜாதியின் ராஜாங்கமானது ஒரு பரிசுத்த மனிதனின் சிலையை தொழுது கொள்வதற்கென்று வல்லமையோடு ஆரம்பிப்பதை கவனியுங்கள், அதே விதமாக புறஜாதியின் ராஜாங்கமானது முடிவடையும் போது ஒரு பரிசுத்த மனிதனின் சிலையை தொழுவதற்கென்று வல்லமையாய் கிரியைச் செய்யும். 170. அன்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட புறஜாதிகளின் ராஜாங்கத்தில் ஒரு கையுறுப்பு சுவற்றிலே அந்நிய பாஷையில் எழுதிற்று, அதை தீர்க்கதரிசி தவிர வேறு யாராகிலும் வெளிப்படுத்த முடியாமலிருந்தது. இந்த நாளிலும் ஒரு கையுறுப்பு சுவற்றில் எழுதிற்று. ''இக்கபோத்'' - தேவ மகிமை அவர்களை விட்டு விலகி சென்று விட்டது. (சகோ.பிரான்ஹாம் கைகளை இரண்டு முறை தட்டுகிறார்) இன்றைக்கும் கையுறுப்பினால் எழுதப்பட்ட வார்த்தை நம்மிடையே உள்ளது. தேவனுடைய ஆவியினால் பிறந்த ஆவிக்குரிய சிந்தையினால் ஆவிக்குரிய காரியங்களை புரிந்து கொள்ளுகிற விசுவாசிகளால் மட்டுமே, சுவற்றிலுள்ள அந்த எழுத்தை படிக்க முடியும். 171. பெல்ஷாத்சார் ராஜா (தேவனுடைய வீடாகிய ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரத்தில் திராட்சரசம் குடித்தான். அவன் ஏன் அதை செய்தான்-? அவன் ஒரு அவிசுவாசியாய் இருந்ததால் அவ்விதம் செய்து தன்னை ஒரு விசுவாசி என்று எண்ணிக் கொண்டான். பாருங்கள். அது தான். அவன் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்தான். 172. ஆகாப் ஒரு அவிசுவாசியாயிருந்தான். விசுவாசிகளின் மத்தியில் அவன் வாழ்ந்திருந்தாலும், தன்னை விசுவாசி போல தோன்றப் பண்ணினாலும், அவன் ஒரு அவிசுவாசியாயிருந்தான். அவன் என்ன காரியத்தைச் செய்தான்-? விக்கிரக வணக்கம் செய்பவளை அவன் மணந்துக் கொண்டு இஸ்ரவேலுக்கு உள்ளே விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தான். அவன் ஒரு அவிசுவாசி. அதை நாம் அறிந்துள்ளோம். 173. தேவனுடைய வார்த்தைகள் முழுமையும் சத்தியம் என்பதை ஜனங்கள் மறுக்கின்றார்கள். ஆகாப் ஒரு மாய்மாலக்காரனாய் இருந்தான். அவன் அதை விசுவாசிப்பதாக கூறினாலும், அதை மறுத்தான். “தேவனுடைய வார்த்தையில் சிலவற்றை ஏற்றுக் கொள்ளலாம்'' என்று அவன் கூறினான். தேவனுடைய வார்த்தை எல்லாம் சத்தியமென்று அவன் சொல்லாததினால் அது அவனை அவிசுவாசி என்று தீர்க்கிறது. தேவனுடைய வார்த்தையின் ஒவ்வொரு உறுப்பையும், புள்ளியையும் நீ விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை எல்லாம் சத்தியம் என்று நான் விசுவாசிக்க மாட்டேன்,'' என்று நீ சொல்வாயானால், நீ ஒரு அவிசுவாசியாய் இருக்கிறாய். 174. ஒரு சமயம் ஒரு ஊழியக்காரர் என்னிடம், ''ஐயா, பிரான்ஹாமே, தெய்வீக சுகம் பெற்றவர் இவர்கள் என்று எத்தனை பேர்களை நீ கொண்டு வந்து நிறுத்தினாலும், நான் அதை விசுவாசிக்க மாட்டேன்.'' என்று கூறினார். 175. அதற்கு நான், "ஐயா, உங்களால் நிச்சயமாக அவ்விதம் விசுவாசிக்க முடியாது. ஏனென்றால் நீர் ஒரு அவிசுவாசியாய் இருக்கிறீர். இவைகள் விசுவாசிப்பவர்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினேன். 176. கவனியுங்கள், நீங்கள் அதை விசுவாசிக்கத்தான் வேண்டும். அவர்களோ அதை விசுவாசிக்கமாட்டார்கள். இதைக் குறித்து பவுலும், “கடைசி நாட்களில் மனுஷர்கள் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர் களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார் கள்; வார்த்தையின் பெலனை... இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு'' (2தீமோ.3:4,5) என்று கூறினார். கவனியுங்கள், அவர்கள் தோற்றத்தில் பக்தி உள்ளவர்களாக காணப்பட்டாலும், தேவனுடைய முழு வார்த்தையையும் மறுதலிக்கிறார்கள். நிரூக்கப்பட்ட உண்மையான தேவ வார்த்தையின் பேரில் அவர்கள் அவிசுவாசிகளாய் இருந்தனர். 177. நோவா, மோசே, தீர்க்கதரிசிகள் இவர்களின் மூலமாக ஒவ்வொரு காலங்களிலும் தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்துக் காண்பித்தார். தேவன் இயற்கைக்கு மேம்பட்ட விதமாக பேசி, தம்முடைய வார்த்தையை நிரூபித்து இருந்தாலும், ஜனங்கள் அதற்கு புறமுதுகு காட்டுகிறார்கள். 178. அந்த எழுபது சீஷர்கள் இயேசு செய்த கிரியைகளை கவனித்து வசனத்தை அறிந்தவர்களாயிருந்தனர். அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிற காலத்தில் தான் அக்காரியங்களெல்லாம் சம்பவிக்க வேண்டுமென்று இயேசு அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வேறு ஏதோ ஒன்றை (மனுஷகுமாரனைப் பற்றி) கூறத் தொடங்கி, அவருடைய சரீரம் பிட்கப்படுதல் போன்ற மகத்தான ஆவிக்குரிய காரியங்களை கூறின போது அவர்கள், இது கடினமான வார்த்தை'' என்றார்கள். 179. அப்பொழுது அவர் மனுஷகுமாரன் தான் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப் போகிறதை நீங்கள் காண்பீர்கள் ஆனால் எப்படி இருக்கும்-? ஆவியே உயிர்ப் பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது,'' என்று கூறினார். பாருங்கள்-? 180. அதை விசுவாசிக்க ''முடியாது,'' என்று கூறி அவர்கள் வார்த்தையின் பேரிலேயே பின் வாங்கிப் போனார்கள். சற்று பொறுத்திருந்து, என்ன தான் நடக்கப் போகிறது என்று பார்க்க அவர்கள் தவறிப் போனார்கள். அவன் தான் அவிசுவாசி. 181. விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட இந்த ஜனங்கள் மதம் என்கிற தோற்றமாகிய பின்னணியில் இருந்துக் கொண்டு சத்தியமான தேவ வார்த்தை அடையாளம் காட்டப்பட்டதை பார்க்க தவறிப்போனார்கள். ஏனெனில் அவர்களுடைய விசுவாசத்திற்கு அது முரணாயிருந்தது. பாருங்கள்-? 182. நீ எவ்வளவு தான் உண்மையுள்ளவனாய் இருந்தாலும் பயபக்தி உள்ளவனாய் இருந்தாலும், நீ எதை விசுவாசிக்கின்றாயோ அதினின்று எந்த விதத்திலும் அதை வித்தியாசப்படுத்தவில்லை. உத்தமமாயிருக்கும் ஜனங்களை நான் பார்த்திருக்கிறேன். அஞ்ஞானிகள் தங்கள் பிள்ளைகளை எரிப்பதையும், முதலைகளுக்கு இரையாக கொடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு கிறிஸ்தவன் செய்வதைக் காட்டிலும் பெரிதான காரியங்கள் அல்லவா அவைகள் எல்லாம்-! அவர்கள் அவ்விதம் செய்வதை உத்தமமாக நம்பு கிறார்கள். ஆனால் அவர்கள் உத்தமமாய் தவறாயிருக்கிறார்கள். 183. “இந்த சபை இவ்வளவு காலமாக காணப்படுகிறதே,'' என்று ஜனங்கள் கூறுகிறார்கள். அது எவ்வளவு காலமாகக் காணப்பட்டாலும் அது தேவ வார்த்தைக்கு முரணாய் இருக்குமானால், அது உத்தமமாய் தவறாயிருக்கிறது. அத்தகைய காரியங்களை நான் விசுவாசிப்பதில்லை,'' என்று நீ கூறலாம். ஆனால் வேதம் அவ்வித காரியங்களை உறுதிப்படுத்துகிறதே “இத்தகைய காரியங்களை கட்டாயம் செய்யவேண்டும் என்று நாங்கள் விசுவாசிப்பதில்லை,'' என்று நீங்கள் கூறலாம். செய்யக்கூடாது என்று தோன்றும் உங்கள் நினைவைக் குறித்து நான் கவலை கொள்ளவில்லை; ஆனால் அப்படித் தான் செய்யப்பட வேண்டும், என்று தேவன் கூறினாரே-! 184. “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று தேவன் கூறினாரே-! எவ்வளவு தூரம் அது நடத்தப்படும், ஐயா-? அது உலக முழுவதும் நடத்தப்படும். யாருக்கு நடத்தப்படும், ஐயா-? சர்வ சிருஷ்டிக்கும் என்று வேதம் கூறுகிறது (It Shall be) என்று ஆங்கில வேதாகமத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அது எதிர்காலத்தைக் குறிக்கும் வினைச் சொல்லாய் இருப்பதினால், தேவன் தம்முடைய கிரியைகள் எதிர் காலத்திலும் தொடர்ந்து நடக்கப் போகிறது என்று குறிப்பிடுகின்றார். 185. சாயங்கால நேரத்து வெளிச்சமானது பிரகாசித்துக் கொண்டிருக்க, இந்த காலத்திற்குரிய பின்மாரியின் தேவ பிரசன்னத்தை நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கையில், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டு இது சத்தியம் என்று வார்த்தையினால் நிரூபிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது-! தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் வார்த்தையின்படியும், விஞ்ஞானப் பிரகார மாகவும் நிரூபிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், ஒரு மனிதன் அதற்கு புறமுதுகு காண்பித்து ஓடுவானானால் அது எவ்விதமாய் இருக்கிறது-? அப்படிப்பட்டவன் ஒரு அவிசுவாசியாய் இருக்கிறான். அவனை இரட்சிக்க நம்பிக்கை ஏதுமில்லை. சாத்தானின் வல்லமையினால் அவன் உணர்ச்சியற்று, மரத்துப்போன நிலையை அடைகின்றான். அவன் இரட்சிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையே இல்லை. அவனுடைய நிலைமை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. 186. இப்பொழுது நாம் இந்த மூன்றாம் வகையினரான பாவனை விசுவாசியைக் குறித்து சிந்திப்போம். இம்மனிதன் ஓர் வித்தியாசப்பட்டவன். ஞாபகம் கொள்ளு ங்கள். இந்த மூன்று வகையினரும் ஒருமித்தே காணப்படுகின்றார்கள். அந்த மூன்று வகையினரும் தங்கள் தங்கள் தகப்பன்மாரை பிரதிபலிக்கின்றவராய் இருக்கின்றனர். பேதுருவையும், மற்ற அப்போஸ்தலரையும் விசுவாசிகளின் தகப்பன்மார்கள் என்றும், அந்த 70 விசுவாசிகளை அவிசுவாசிகளின் தகப்பன்மார்கள் என்றும், யூதாசை கடைசி வகையான பாவனை விசுவாசிகளின் தகப்பன் என்றும் ஒப்பிடலாம். 187. இந்த பாவனை விசுவாசியாகிய யூதாஸ் கடைசி மட்டும் கூடவே இருந்தவன். சகோதரனே, இந்த பாவனை விசுவாசிகள் கடைசி மட்டும் கூடவே இருந்து கொண்டு ஏதாகிலும் ஒரு குற்றத்தை அதிலே கண்டு பிடிப்பார்கள். ஏதாவது தவறு நேருகிறதா, அல்லது இது ஏதாவது தந்திரமா, என்றெல்லாம் ஒவ்வொரு நேரமும் உற்று நோக்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் தங்களை விற்றுப்போடுவதற்கு என்றே காத்துக் கொண்டு இருக்கிறவர் களாய் இருக்கின்றனர். 188. அவிசுவாசியானவன் அவ்விதமாகக் காத்திருக்கிறது இல்லை, அது சரி இல்லை என்று கூறி கண்டனம் செய்து அவன் வெளியேறி விடுவான். 189. விசுவாசியானவன், என்ன நேர்ந்தாலும் அதில் நிலைத்திருக்கிறான். ஏனெனில் அது வார்த்தையென்று அவன் விசுவாசிக்கிறான்-! இவ்விதமாகத் தான் இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்கள் நிறத்தைக் காட்டுகிறவர் களாய் இருக்கின்றனர். 190. அவிசுவாசியானவன் ஒரு காரியம் சொல்லப்படுகின்ற அந்நேரத்தி லேயே அதை விரும்பாமல் தன் நிறத்தை காண்பிக்கிறான். அவன் தான் அவிசுவாசி. ''அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை; நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே, எல்லோரும் நம்முடையவர்களல்ல என்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்'' (1யோவா.2:19). “நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற் போக உங்களுக்குத் தடை செய்தவன் யார்-? (கலா 5:7)'' என்று வேதம் கூறுகின்றது. இதை கவனிக்கிறீர்களா-? வார்த்தையானது பரிபூரணமாக கிரியை செய்து கொண்டிருக்கும் போது, வேறு ஏதோ ஒன்றை வைத்து கிரியை செய்ய அவர்கள் விரும்புவது ஏன்-? 191. ஆனால் உண்மையான விசுவாசிகளோ அவ்விதம் சர்ச்சை செய்வதில்லை. ஏனெனில் அவர்கள் எழுதப்பட்ட வார்த்தையை விசுவாசித்து மேலும் முன்னேறிச் செல்கின்றனர். அது தான் காரியம். அவ்விதம் எழுதப்படாமல் இருக்குமானால் அதினின்று அவர்கள் விலகி விடுவார்கள். நான் இன்று காலை கூறினது போல விசுவாசிகள், காலத்தையும், அதன் மணி நேரத்தையும், செய்தியையும், தேவன் தம்முடைய வார்த்தையில் அசைவாடுவதையும் கண்டு அதிலே நடக்கிறார்கள். 192. பிலாத்து அந்த இரவு நேரத்தில் எவ்வளவாக, தன்னுடைய மனசாட்சியின் நிமித்தம் கலங்கி, தன்னை சுத்தவனாக்க முயற்சித்தான்-? "இரவு முழுவதும் என்னுடைய கைகளை நான் கழுவினேன். இருந்தாலும் அது சுத்தமாகாதது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முயடிவில்லை-? அந்த மனிதனை நான் எவ்வாறு போய் சந்திப்பேன்-? என் கைகளில் இரத்தப்பழி சுமந்திருக்கிறதே'' என்று பிலாத்து யோசித்தான். கவனிக்கிறீர்களா-? அதைக் குறித்து ஒரு போதும் குற்றம் சாட்டாதே. 193. ஏனெனில் அது உன் கைகளின் மேலேயே உள்ளது. அதை உன்னிடமிருந்து அப்புறப்படுத்த, அதை ஏற்றுக் கொள்வதென்கிற ஒரே வழி தான் உனக்குண்டு. அதுதான் சரி. அதனுடைய பாகமாகவே மாறுவது தான் சரி. ஏனெனில் அந்த இரத்தமானது அதற்காகவே சிந்தப்பட்டுள்ளது. 194. இப்பொழுது கவனியுங்கள். இந்த பாவனை விசுவாசி கூடவே இருந்து பக்தி உள்ளவனைப் போன்று நடிக்கின்றான். ஆனால் அவன் இருதயத்தின் ஆழத்தில், நீ எப்படி கிரியை செய்கின்றாய் என்றும், அல்லது தவறு எதுவென்றும் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். அத்தகைய மாய்மாலக்காரர்களால் இந்த தேசம் நிறைந்து இருக்கவில்லையா-? அது யூதாசின் ஆவியாய் இருக்கிறது. அது சரியான வார்த்தை. யூதாஸ் சீஷர்களின் குழாமில் காணப்பட்டான். அங்கே அவன் பொக்கிஷதாரியுமாய் இருந்தான். பாருங்கள்-? அவன் அவர்கள் கூடவே இருந்தாலும், எப்பொழுதும் பணத்தின் மேல் கைபோடுகிறவனாய் இருந்தான். அவன் பண ஆசை பிடித்தவனாய் இருந்தான் என்று சரியாகச் சொல்லலாம். அவன் விசுவாசியைப் போன்று நடித்தாலும், பாவனை விசுவாசியாயிருந்தான். 195. ஆனால் ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள். அவனால் இயேசுவை முட்டாளாக்க முடியவில்லை. அந்த எழுபது சீஷர்கள் இயேசுவை விட்டுச் சென்ற பின்னர், விசுவாசிகளான சீஷர்கள் மட்டும் அவரோடு தரித்து நின்றனர். ஆனால் இயேசு பன்னிருவராகிய அவர்களிடம் திரும்பி, பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா-? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்'' (யோவா.6:70), யூதாஸைக் குறித்து இயேசு ஆதி முதலாய் அறிந்திருந்தார். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்து இருதயத்தின் இரகசியங்களை அறிந்தவராயிருந்தார். 196. இது எவ்வளவு கடினமான காரியம்-! ஒரு நிமிடம் ஆழமாய் சிந்தித்துப் பாருங்கள். “சகோதரனே,'' என்று அழைத்து தம்முடன்கூட நடந்து கொண்டு இருக்கிற ஒருவன் ஆதி முதலாய் ஏமாற்றுக்காரன் என்றும், முப்பது வெள்ளிக் காசுக்காக தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்று, அறிந்திருந்தும், அந்த உணர்வுகளை தம் மடியில் சுமந்திருந்தாரே அது எவ்வளவு கடினமான காரியம் “சிநேகிதனே,'' என்று இயேசு யூதாஸை அழைத்தார். தம்மை அவன் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார். 197. அங்கே தான் அந்த பாவனை விசுவாசி காணப்படுகிறான். அவன் நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவேன், நம்பிடுவேன் என்று பாடிக்கொண்டே, பின் புரளி செய்வதில் முற்படுவான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்க அவனுக்கு பெரிய காதுகள் உண்டாயிருக்கும். 198. ஒரு உண்மையான விசுவாசி தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறு ஓன்றையும் காதால் கேட்க மாட்டான். வார்த்தையையே அவன் எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருப்பான். பிழை கண்டு பிடிக்கும்படியான வாய்ப்புக்காக அவன் காத்திராமல், தேவனை விசுவாசித்து அதிலே அவன் தொடர்ந்து நடக்கிறான். பாருங்கள்-? அவனே விசுவாசிக்குரிய லட்சணமாயிருக்கிறான். 199. அவிசுவாசி பத்து நிமிடங்கள் கூட செய்தியை கவனித்துக் கேட்காதவனாய் அங்கிருந்து வெளியே சென்று விடுகிறான். ஏனெனில் அது அவனுடைய மதக் கோட்பாடுக்கு விரோதமாயிருக்கின்றது. 200. இந்த பாவனை விசுவாசியோ (யூதாஸ்) ஒரு ஏமாற்றுக்காரன், சண்டாளன், கூடவே இருந்து குழிப்பறிப்பவன். சில சமயங்களில் இந்த பாவனை விசுவாசிகள் ஜனங்கள் மத்தியில் பிரபலமானவர்களாய் இருக்கின்றனர் என்பதை கவனியுங்கள். அது உண்மை. இவர்கள் சாத்தானின் குமாரர்களைப் போல அதிக படிப்புள்ளவர்களாகவும், வேத பாண்டியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்களாயும், மருத்துவர்களாகவும், ஞானம் பெற்றவர்களாகவும், அதிக வருமானம் உடையவர்களாகவும், எந்தக் குறைவுமின்றி இருக்கின்றனர். கவனியுங்கள். 201. சாத்தான் ஏவாளிடம் வந்த போது, எல்லா வார்த்தையையும் ஒத்துக் கொள்கிறவனை போல காணப்பட்டான். ஆனால் அவன் ஏவாளிடம் பலவீன மான பகுதி எது என்று காணுமட்டும் காத்திருந்து, பின்பு தன் வல்லமையைப் பிரயோகித்து அவளை காட்டிக் கொடுத்துவிட்டான். அதே சாத்தான் இயேசுவின் காலத்தில் யூதாஸின் ரூபத்தில் காணப்பட்டான். அந்த முதலாம் காலத்தில் சாத்தானின் ரூபம் அது தான். அவன் யார்-? அந்த காரியம், பலவீனமான இடம் எது என்று அவன் கண்டுபிடிக்கும் வரையில், வார்த்தையுடன் ஒத்துப் போவான். 202. இன்று அவன் பலவீனம் எங்கு காணப்படுகிறது என்பதை காண காத்துக் கொண்டிருக்கிறான். ஆராதனைகளில் கூடவேயிருந்து அந்த சிறு பலவீனப்பகுதி காணப்படுமளவும் கவனித்திருந்து, 'அதோ அதுதான், அதுதான், அந்தவிதமாகத் தான் அது செய்யப்பட்டது,'' என்று கூறுவான். பாருங்கள்-? அது அவ்விதமா கவே தான் உள்ளது. 203. அன்றிரவு நடந்த கூட்டத்தில் மேடையின் மேல் வந்த அந்த மனிதனின் காரியத்தை குறித்து உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று எண்ணுகிறேன். ஜெப அட்டைகளைக் குறித்தக் காரியம் ஒரு மனோவசியம் என்று அவன் எண்ணி இருந்தான். அதை சோதித்தறிவதற்கு அவனுக்கு எல்லா உரிமையுமிருந்தது என்றும் அவன் எண்ணியிருந்தான். இந்த மனிதன் முழு சுவிசேஷத்தையும் விசுவாசியாத ஓர் ஸ்தாபனத்தின் அங்கத்தினன். அவன் என்னை சோதித்தறியும் படி மேடையின் மேல் வந்த போது, நான் மிகவும் களைத்தவனாயிருந்தேன். ஊழியர்கள் என்னை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். 204. அது ஒண்டாரியோவிலுள் வின்ட்சர் என்னுமிடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் டெட்ராய்ட் என்ற இடத்திலிருந்து வின்ட்சர் இடத்திலுள்ள ஒரு பெரிய அரங்கம். 205. இந்த மனிதன் மங்கின நிறமுடைய உடையும் சிகப்பு கழுத்துப்பட்டையும் அணிந்தவனாக அங்கு மேடையில் வந்தான். அவன் மிகவும் சாமர்த்தியம் உள்ளவனாய் காணப்பட்டான். அப்பொழுது நான் அவனை நோக்கி, ''நல்லது, ஐயா, நான் உம் கையை பிடிக்க அனுமதிப்பீராக. நான் அநேக தரிசனங்களைக் கண்டு மிகவும் களைத்தவனாயிருக்கிறேன்'' என்று கூறினேன். அவன் தன் கரத்தை என் கரத்தில் வைத்தான். அப்பொழுது நான் அவனை நோக்கி, ''ஐயா, உங்களுக்கு எந்த வியாதியும் இல்லை,'' என்று கூறினேன். அதற்கு அவன், எனக்கு இரண்டு வியாதியுண்டு,' என்று கூறினான். 206. அதற்கு நான், “எங்கே நான் மறுபடியும் பார்க்கட்டும்,” என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துப் பார்த்து விட்டு, “இல்லை ஐயா, வியாதிக்குரிய அடையாளங்கள் காணப்படவில்லை. ஆகவே, நீ ஒரு சுகதேகியான மனுஷன்,'' என்றேன். அதற்கு அவன், 'என்னுடைய ஜெப அட்டையில் என்ன எழுதி இருக்கிறதென்று வாசியும்'' என்று கூறினான். 207. அப்பொழுது நான், “ஜெப அட்டையில் நீர் என்ன எழுதி வைத்திருந்தாலும், அதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. ஜெப அட்டைக்கும் என்னுடைய ஊழியத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை,'' என்று கூறினேன். நான் ஒன்றையும் அறியாதவனாக இவ்விதம் கூறிக்கொண்டிருந்தேன். மேலும் நான் மிகவும் களைத்து சோர்ந்து போயிருந்தேன். ஆனால் தேவனுடைய கிருபை ஆனது இன்னுமாக இங்கிருந்தது என்று ஞாபகம் கொள்ளுங்கள். 208. அவர் உன்னை அனுப்புவாரென்றால், உன்னை முற்றிலுமாக காக்க வேண்டியது அவருடைய பொறுப்பாகும். அது என்னுடைய காரியம் அல்ல. அவரே அதன் காரணர். அவரே என்னை அனுப்பினார். சத்தியம் எதுவோ அதற்காக மட்டும் நிற்பதே என்னுடைய வேலையாகும். 209. மோசே, தன்னுடைய கோலை அங்கே போட்டபொழுது அது சர்ப்பமாயிற்று. மந்திரவாதிகளும் அதே காரியத்தை செய்தனர். தேவனுடைய கிருபைக்காக மோசே அங்கு காத்து நிற்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்க முடியும்-? அவ்வளவே. அவன், அவருடைய கற்பனைகளை கைக்கொண்டான். பின்பு நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா-? பாருங்கள்-? 210. அதுபோலத் தான் இச்சம்பவமும். இந்த மனிதன் அங்கு நின்று கொண்டு, “என்னுடைய ஜெப அட்டையை பாரும்” என்று கூறினான். 211. அதற்கு நான், 'நல்லது, நீங்கள் அதிக விசுவாசத்தை உடையவராய் இருந்திருக்கின்றீர். ஆகவே உம் வியாதிகள் சுகமாக்கப்பட்டிருக்கும்,” என்று எதையும் யோசியாதவனாய் கூறினேன். 212. இதை நான் கூறினவுடனே அந்த மனிதன் தன் மேற்சட்டை பொத்தனை கழற்றி, தன்னுடைய நெஞ்சை முன்னுக்குத் தள்ளி சபையோர்களிடம் திரும்பி, “எல்லோரும் இங்கே கவனியுங்கள்,'' என்றான். அப்பொழுது நான், “இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது,'' என்று யோசித்தேன். 213. அவன் அவ்விதம் சபையாரின் கவனத்தைத் திருப்பி, ''இங்கே நடக்கும் தந்திரத்தைப் பார்த்தீர்களா-?' என்று கேட்டான். (அது தான் யூதாஸின் ஆவி இவன் ஒரு பயபக்தி உள்ள மனிதனாகவும் ஒரு ஸ்தாபனத்தின் பிரசங்கி யாகவுயம் இருந்தான்). அவன் மேலும் தொடர்ந்து, “எனக்கு அதிக விசுவாசம் இருக்கிறது என்று இவர் கூறுகிறார். இவர் அதிகமாக பெலவீனப்பட்டு விட்டதினால் மனோவசியம் செய்ய முடியவில்லை. இனிமேலும் மனோவசிய சக்தி இவரிடம் போவதில்லை. என் வியாதிகள் என்னவென்று நான் ஜெப அட்டையில் எழுதி இருக்கிறேன். அதில் உள்ளதைக் கூட இவரால் கூற முடியவில்லை. இது ஒரு ஏமாற்று வித்தை," என்று கூறினான். 214. அப்பொழுது நான், ''என்ன நடந்து கொண்டிருக்கிறது-?'' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே தேவனுடைய கிருபையானது தாழ இறங்கி வந்தது. 215. அப்பொழுது நான் அவனைப் பார்த்து, ''ஐயா, தேவனை ஏமாற்றும்படி சாத்தான் உன் இருயத்தை நிரப்பினதென்ன-?'' என்று கேட்டேன். அவன் ஒரு நவநாகரீக யூதாஸாய் இருந்தான். நான் மேலும் அவனை நோக்கி, 'அமெரிக்காவில் உள்ள கிறிஸ்து சபை (Church Of Christ)யில் நீ ஒரு பிரசங்கியாய் இருக்கிறாய். அதோ அங்கே நீல நிற உடை அணிந்தவருடனும், அவருடைய மனைவியுடனும் அமர்ந்திருப்பது உன் மனைவியாகும். கடந்த இரவு நீங்கள் ஒரு மேஜையின் முன்பு அமர்ந்திருந்தீர்கள். அந்த மேஜையின் மேல் போட்டு இருந்த விரிப்பின் நிறம் பச்சை. இந்த ஊழியமானது மனோவசிய சக்தியினால் செய்யப்படுகிறதா என்பதை சோதித்தறியும்படி நீங்கள் தீர்மானித்ததின் பலனாக நீ இந்த இரவிலே இங்கு வந்திருக்கிறாய்,'' என்று கூறினேன். 216. அதற்கு அந்த மனிதன், “நீங்கள் கூறினது உண்மையும் சத்தியமுமாய் இருக்கிறது. கர்த்தர் என் மேல் கிருபையாயிருப்பாராக'' என்றான். 217. நான் மேலும் தொடர்ந்து, "ஐயா, அந்த ஜெப அட்டையில் நீர் காசநோய் என்றும், புற்று நோய் என்றும் எழுதியிருக்கிறீர்; அந்த இரண்டு வியாதிகளையும் இந்த கணமே நீர் பெற்றுக் கொள்கிறீர், அது உமக்குச் சொந்தமானது'' என்று கூறினேன். அப்பொழுது அந்த மனிதன் என்னுடைய கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “நான் அவ்விதம் நோக்கம் கொள்ளவில்லை. ''ஐயா'' என்று கதறினான். 218. அதற்கு நான், ''என்னால் எந்தவித உதவியும் செய்ய முடியாது... நீங்கள் போகலாம். இது உமக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள காரியம். உம்முடைய அழிவை நீரே ஜெப அட்டையில் எழுதிவிட்டீர்,'' என்று கூறினேன். அந்த இரண்டு வியாதிகளும் அவனை பிடித்துக் கொண்டது. அதுவே அவனுடைய முடிவாயிற்று. 219. கவனியுங்கள், இந்த பாவனை விசுவாசிகள், ஏமாற்றுக்காரர்களாயிருந்து, தேவனோடும் அவருடைய வார்த்தையோடும் குற்றம் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார்கள்-! அவர்கள் யூதாஸாய் இருக்கின்றார்கள். யூதாஸ் எவ்விதம் வெளிப்பட்டான் என்று உங்களால் காண முடிகின்றதா-? பாருங்கள்-? அவன் எவ்விதம் வெளிப்பட்டான். பாவனை விசுவாசிகளும் அவ்விதமே வெளிப்படுவர். அவர்கள் மெத்த படித்தவர்கள். வார்த்தைக்கும் சமயகோட்பாட்டிற்கும் நடுவே ஒரு மகத்தான நிரூபித்தலானது வரும் போது இந்த பாவனை விசுவாசிகள் தங்கள் முன்னோடியான யூதாஸைப் போன்று தங்களை ஸ்தாபனத்திற்கு விற்று விடுகின்றனர். யூதாஸ் தன்னை வார்த்தையின் பாகமென்று உரிமைக் கொண்டாடின போதிலும், அவன் வார்த்தையாகிய இயேசுவை தன் ஸ்தாபனத் திற்குக் காட்டி கொடுத்து விட்டான். 220. தங்களை கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்று உரிமைக் கொண்டாடுகிற அநேகர், இந்த நாளுக்குரிய வார்த்தையானது முற்றிலுமாக அடையாளம் காட்டப்பட்டு, இந்த நேரத்தின் செய்தி இது தான் என்று நிரூபிக்கப்பட்டாலும், தங்களின் புகழுக்காக அதை ஸ்தாபனத்திற்கு விற்று விடுகின்றனர். யூதாஸ் இயேசுவை பரிசேயர் சதுசேயருக்கு காட்டிக் கொடுத்தது போல இவர்களும் செய்கின்றனர். அந்த ஆவியானது ஒரு போதும் மரிப்பதில்லை. அது விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள் மத்தியில் உள்ளது. பாருங்கள். அதே ஆவி சரியாக இறங்கி வந்து இயேசுவை முப்பது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டது; அநேக மனிதர்கள் ஜீவனத்திற்காகவும், சாப்பாட்டுச் சீட்டுக்காகவும் (Meal Ticket) வாரத்திற்கு உபரியாக கிடைக்கும் நூறு டாலர் சம்பளத்திற்காகவும் இயேசுவை விற்று விடுகின்றனர். தங்களுக்கு முழு வார்த்தையையும், ஜீவனையும் கொண்டு வந்து, தங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கிற தேவனை அவர்கள் மறுதலிக்கின்றனர். 221. அற்புதங்கள், அடையாளங்களின் நாட்கள் கடந்து போயிற்று. அத்தகைய காரியங்கள் இன்றைக்கு தேவையென்று தேவன் கருதுவதில்லை. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். ஸ்திரீகளுக் குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய தாயாகிய மரியாளே வாழ்க'' என்று எல்லாம் கூறுகிறார்கள். மேலும் சிலர், ''அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை நான் விசுவாசிக்கிறேன். தேவனாகிய பிதா வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவர் என்று விசுவாசிக்கிறேன். பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை நான் விசுவாசிக்கிறேன்'' என்றெல்லாம் கூறுகின்றனர். 222. ஒரு அப்போஸ்தலன் எப்பொழுது அத்தகைய விசுவாசப் பிரமாணத்தை உடையவனாயிருந்தான் என்று எனக்குக் கூறுங்கள். அப்போஸ்தலருக்கென்று ஒரு விசுவாசப்பிரமாணம் உண்டாயிருக்குமானால் அது அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரம் 38-ம் வசனம் தான். ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.'' இதுதான் அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம். அது வார்த்தையாயும், சத்தியமாயுமிருக்கிறது. இன்றைக்கும் அது மாறாததாக இருக்கின்றது. பாவம் என்ற நோய்க்கு மருத்துவக் குறிப்பு சீட்டு அதுதான். 223. ஆனால் அவர்கள் யூதாஸைப் போன்று அதை விற்றுப் போடுகின்றனர். அவர்கள் தாம் பாவனை விசுவாசிகள். அவர்களில் சிலர் மிகவும் திறமைசாலிகளாய் இருக்கின்றனர். அவிசுவாசி துரிதமாக நிரம்பி, மேலும் கீழும் குதித்து, அவனுக்குப் பிடிக்காத வார்த்தையின் ஒரு சிறு வெளிப்பாடு வரும் போது வெளியே ஓடி விடுகிறான். அவன் மேல் உன் கவனத்தைச் செலுத்தாதே. ஏனெனில் அவன் ஆரம்பத்திலிருந்தே அவிசுவாசியாயிருக்கிறான். ஆனால் உன் கூடவே தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாவனை விசுவாசியை நீ காணும் போது அவன் யூதாஸ் என்று உணர்ந்து கொள். 224. நான் இப்பொழுது சில பெயர்களைக் குறிப்பிடப்போகிறேன். (அவ்விதமாக நான் செய்யக் கூடாதுதான், இருந்தாலும் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக அதை நான் செய்யத்தான் வேண்டும்) எல்விஸ் பிரிஸ்லி (Elvis Presley) ரெட் பாலி (Red Foley) எர்னி போஃர்ட் (Ernie Ford) பாட்பூன் (Pat Boon) என்பவர் களைத்தான் நான் குறிப்பிடுகிறேன். எல்விஸ் பரிஸ்லி பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவரும், பாட்பூன் கிறிஸ்துவின் சபை (Church of Christ ) அங்கத்தினரும், ரெட்பாலி என்பவர் கிறிஸ்துவின் சபையில் ஒரு மூப்பருமாய் இருக்கின்றனர். இந்த எர்னி போஃர்ட் என்பவர் மெத்தோடிஸ்டு சபையை சேர்ந்தவர் என எண்ணுகிறேன். இவர்கள் அனைவரும் மகத்தான பாடும் தாலந்தை உடையவர்களாக இருந்து தொலைக் காட்சியில் பாடல்களை பாடுகின்றனர். ஜனங்கள் அவர்களைக் குறித்து, “நல்லது, இவர்கள் எவ்வளவு பக்தி உள்ளவர்களாய் இருக்கின்றனர். என்ன அழகாகப் பாடுகின்றனர்-!'' என்று கூறுகின்றனர். அது உலகத்தை ஏமாற்றும் ஓர் காரியமே அன்றி வேறல்ல-! 225. அவ்விதம் அவர்கள் செய்வதினால் எதைப் பெற்றுக் கொள்கின்றனர்-? யூதாஸ் முப்பது வெள்ளிக் காசைப் பெற்றுக் கொண்டான். எல்வீஸ், பாட்பூன் என்னும் இவர்கள் ஒரு கூட்ட 'காடிலாக்' கார்களையும் (மிகவும் விலையுயர்ந்த கார்கள்) 150 கோடி ரூபாய்களையும், இசைத் தட்டுகள் மூலமாகப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எந்த சபையை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அது ஒரு மாய்மாலமாயிருக்கின்றது. அது ஒரு பாவனை விசுவாசமாய் இருக்கின்றது. அவர்களுடைய முன் தோற்றமே பக்தியுள்ள காட்சியாகும். ஆனால் அவர்களுடைய ஜீவியம் அவர்களை யார் என்று நிரூபிக்கின்றது. அது தான் உண்மை. 226. இத்தகைய தாலந்து உடையவர்கள் தங்கள் ஞானத்தினால் மகத்தான அமைப்பை உண்டாக்குகிறவர்களாய் இருக்கின்றனர். சுவிசேஷத்தை அவர்களும் பிரசங்கிப்பதாக உரிமை கொண்டாடுகின்றனர். அவர்கள் சாமர்த்தியசாலிகளும், ஞானம் உள்ளவர்களுமாய் இருக்கின்றனர். கவனியுங்கள், அத்தகைய ஒரு அமைப்பில் பயிற்சி பெற்ற ஒருவன் 'பிரசங்கி' என்று அழைக்கப்பட மாட்டான்; மாறாக 'உபந்யாசி' (Lecturer) என்னப்படுவான். அது தான் இன்றைக்குள்ள தொல்லை. ஏனெனில் நாம் அத்தகைய பல “உபந்யாசிகளைப் பெற்று இருக்கிறோம். 227. “நீங்கள் உலகமெங்கும் போய் இவைகளை செய்வதற்கென்று சீஷர்களை பயிற்றுவியுங்கள்,'' என்று ஒருக்காலும் இயேசு கூறவில்லை. மாறாக, “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன,'' என்று தான் கூறினார் (மாற்கு:16:15-17). கவனித்தீர்களா-? 228. அழகிய இனிமையும், கவர்ச்சியும் நிறைந்த சொற்களையும், மொழியும் பேசி, பகட்டான 'உபந்யாசம்' செய்து அதினால் நீங்கள், பிரதான தூதனுடைய சமூகத்தில் இருப்பதான உணர்ச்சிகளை உண்டாக்கும் 'உபந்யாசிகளை உண்டாக்க நாம் கற்று கொள்ளாது இருப்போமாக. ''தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருக்கும்'' உபந்யாசி நமக்கு தேவையில்லை, பாருங்கள், அந்த உபந்யாசி தான் (Lecturer) கிரியை செய்கிறானே தவிர பரிசுத்த ஆவியானவர் அல்ல . 229. ஆரம்பக் கல்வி கூட இல்லாத ஓர் மனிதன் விசுவாசத்தின் வல்லமையோடும் வார்த்தையோடும் வந்து பரிசுத்த ஆவியை கிரியை செய்ய வைக்கும் போது இந்த மகத்தான மனிதர்கள் அதைக் குறித்து ஒன்றும் அறியமாட்டாமல் அதை புறம்பாக்கிப் போடுவார்கள். கவனிக்கிறீர்களா-? ஆம் ஐயா. அப்படித் தான் செய்வார்கள். 230. இவர்கள் பெரிய மனிதர்கள். ஆம் ஐயா, ஸ்தாபனங்களே, இவர்கள் உலக ஞானத்தில் சாமர்த்தியசாலிகளாய் இருந்து வெற்றிகரமாக செழித்தோங்கி இருக்கிறார்கள். 231. இவர்கள் அமைப்புகளை உருவாக்குகிறவர்கள். நிர்பாக்கியமான ஸ்திரீயான ஏவாளிடம் அவன் வந்து, அவள் தேவர்களைப் போல் இருப்பதற்கான ஞானத்தின் யுக்தியை அவளுக்கு விற்பனை செய்ய முயற்சித்தான். அவளும் வார்த்தையில் நிலைத்திருப்பதை விட்டு, தான் ஞானமடையும் யுக்தியில் அவனுடைய படைப்பை உலகிற்குக் கொண்டு வந்து விட்டாள். இன்றைக்கும் அவர்கள் அதையே தான் செய்கின்றனர். இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாய் இருக்கின்றது. ஆம், ஐயா. 232. பரியேசரும், சதுசேயரும் இதையே தான் செய்தார்கள். தேவனுடைய முழு வார்த்தையானது சரியாக நிரூபிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அவை எல்லாவற்றையும் புறம்பாக்கி மறுதலித்துப் போட்டார்கள். 233. இன்று அவர்கள் ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சித்து, அதை போலி என்று எண்ணுகிறார்கள். அவர்கள் தங்கள் சிந்தனையில் இளைப்பாறுதலை பெறாததால் அதை விசுவாசிக்க முடியவில்ல. நீ ஏதாகிலும் சொல்லக் கூடும் ஆனால் அவர்கள் உனக்கு எதிர்த்து வருவார்கள். நீ அவர்களுக்குள் ஆழமாக அதை பதிக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்து அதில் ஏதாவது தவறுக்கான வாய்ப்பு தோன்றுமா என்ற நேரத்திற்காக காத்து இருப்பார்கள். அவர்கள் வேண்டுவதும் அதுதான். 234. தேவனுடைய கிருபை மட்டும் இல்லாதிருந்தால், என்னிடத்தில் தவறுகள் இருந்திருப்பின், அவைகள் யாவும் வெளியாக்கப்பட்டிருக்கும். பாருங்கள்-? அது தேவனுடைய கிருபை, ஏன்-? தேவனுடைய வார்த்தையில் பிழையில்லை. அது நேர்மையான சுவிசேஷமாய் இருக்கின்றது. நான் போதிக்கிற காரியம் தேவனுடைய வார்த்தையில் சரியாக பொருந்தாமல் இருக்குமானால், யார் வேண்டுமானாலும் என்னிடம் வந்து அதை சுட்டிக் காண்பியுங்கள் என்று நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இங்கு காணப்படும் காரியங்கள் எல்லாம், நீங்கள் காண முயற்சிக்கிற தவறுகளை மூடத்தக்கவை களாய் இருக்கின்றன. உங்கள் கண்களை சரியாக அதில் வைத்துப் பாருங்கள். அப்பொழுது அதில் தவறுக்கான வாய்ப்புகளை காண மாட்டீர்கள். 235. நன்றாக ஞாபகம் கொள்ளுங்கள். யூதாஸ் தவறுக்கான வாய்ப்பைக் கண்டுக் கொண்டான் என்று நினைத்தான். அதே போல் அவர்களும் அநேக முறை அவ்விதமாகவே கண்டு பிடித்ததாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் அதில் தவறில்லை என்று முழுவதுமாக நிரூபிக்கப்படுகிறது. அது பாவனை விசுவாசிகளின் மாய்மாலமாய் இருக்கிறது. அவர்கள் ஏவாளைப் போல 95 சதவிகிதம் வார்த்தையாகக் காணப்படுகிறார்கள். மேலும் அவர்கள் 99-ம், பத்தில் ஒன்பது பாகமுமாகக் காணப்பட்டாலும் அந்த பத்தில் ஒரு பாகமான அவிசுவாசமே எல்லா மரணத்திற்கும், துன்பத்திற்கும் காரணமாயிற்று. 236. அந்த ஒரு காரியமே ஸ்தாபனங்களை ஆக்கினைக்கு உட்படுத்துகின்றது. ஏனெனில் அவர்கள் முழு தேவ வார்த்தையையும் விசுவாசிக்காத பாவனை விசுவாசிகளாய் இருக்கின்றனர். இத்தகைய காரியத்தை நாம் எப்பொழுதும், ஒவ்வொரு காலத்தின் சந்ததியிலும் காணலாம். இத்தகைய பாவனை விசுவாசிகளான பக்தியுள்ளவர்களை நம்முடைய வழிப் பிரயாணத்தில் ஏராளமாகக் காணலாம். 237. நான் மேலும் அரைமணி நேரம் எடுத்துக் கொண்டேன். ஆகவே நான் இப்பொழுதே கூட்டத்தை முடித்து விடப் போகிறேன். 238. அந்த இத்தகைய ஜனங்கள் கடைசி நாட்களில் தோன்றுவார்கள். என்று இயேசு நம்மை எச்சரித்திருக்கிறார். அவர்கள் உண்மையைப் போல மிகவும் நெருக்கமாக இருந்து, கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். அவர்கள் யார்-? அவர்கள் தாம் யூதாஸுகள், அவர்கள் கூக்குரலிட்டு, சத்தமிட்டு தாங்களும் பிசாசுகளைத் துரத்தினோம் என்று உரிமைக் கொண்டாடி, பின்பு வார்த்தையை மறுதலிக்கிறார்கள் அது உண்மை, தேவபக்தியின் வேஷத்தை மட்டும் அவர்கள் தரித்திருக்கிறார்கள். 239. யூதாஸ் எங்கே வந்தான் என்று பாருங்கள் யூதாஸ் சுவிசேஷத்தின் ஏணியில் உயரமாக ஏறி பெந்தெகொஸ்தே வரை வந்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உண்டான ஞானஸ்நானமும் அதனுடன் கூட மற்றவைகளும் அடங்குகிறதான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதல் என்ற காரியத்தில் அவன் வெளியேறி தன்னுடைய நிறத்தை வெளிப்படுத்தி விட்டான். அத்தகைய ஆவி ஸ்தாபனங்களில் வாழ்ந்திருந்து, சத்தியம் என்ற காரியம் வரை வந்து, அவர்களின் முன்னோடிகளின் மேல் அது இருந்தது போல காணப்பட்டு, பின்பு விழுந்து மறைந்து போகும். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது அவ்வளவு நெருக்கமாக இருக்கும்.'' 240. இங்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்' என்பவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே ஜீவ புஸ்தகத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் என்ற வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லா ஜீவ வார்த்தைகளையும் விசுவாசிப்பார்கள். அவர்கள் தான் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். 241. நான் இதைக் கூறாவிடில்.... இந்த ஜனங்களை கவனியுங்கள். எல்லா பய பக்தியோடும், மரியாதையுடன் கூடிய தேவ அன்போடும் நான் இதைக் கூறுகிறேன். எனக்கே ஒரு பீட அழைப்பு தேவையாய் இருக்கின்றது. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்று இயேசு கூறினதை கவனியுங்கள். அத்தகையோர் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு சபைகளை சேர்ந்தவர்களல்ல. ஏனெனில் இவர்கள் ஆரம்பத்திலிருந்தே அவிசுவாசிகளாய் இருக்கின்றனர். ஆனால் நான் குறிப்பிடுகின்றவர்கள் இந்த பெந்தெகொஸ்தேயினர் தாம். இவர்கள் ஒரு ஸ்தாபனத்தை தங்களுக்கென்று தெரிந்துக் கொண்டு வார்த்தைக்குப் புறம்பாக தங்களைச் சுற்றி ஓர் எல்லைக் கோட்டை உண்டாக்கிக் கொண்டனர். பரிபூரணத்தைப் போலவே காட்சி அளிக்கிற இவர்கள் தாம் அந்த பாவனை விசுவாசிகளாயிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்-! அவர்கள் மேலும் கீழும் குதித்து, சத்தமிட்டு, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து உரிமைக் கொண்டாடுகிறார்கள்-! யூதாஸும் மற்றவர்களும் அவ்விதமே செய்தனர். யூதாஸும் மற்றவர்களும் ஊழியத்திற்குப் புறப்பட்டுச் சென்று, அற்புதங்களும், அடையாளங்களும் செய்து திரும்பி வந்து ஆவியில் களி கூர்ந்தார்கள். அவர்களுடைய நாமங்கள் ஜீவ புஸ்தகத்திலும் எழுதப்பட்டிருந்தது. 242. ஆனால் ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள். இந்த மணவாட்டியானவள் இத்தகைய கூட்டத்தில் காணப்படுவதில்லை. மாறாக அவள் எடுத்துக் கொள்ளப் படுதலில் செல்லுகிறவளாயிருக்கிறாள். 243. அந்த நியாயத்தீர்ப்பு நாளிலே புஸ்தகங்கள் திறக்கப்பட்டன (அக்கிரமக் காரர்களின் பட்டியல் அடங்கிய புஸ்தகம்) ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அங்கே மணவாட்டி நியாயந் தீர்க்கிறவர்களாய் நிற்பாள். பாருங்கள்-? பாருங்கள்-? போதிய வாய்ப்பில்லாமல் மரித்தவர்களாகிய ஜனங்கள் தாம் அங்கு செம்மறியாடுகளாகவும் மற்றவர்களோ வெள்ளாடுகளாக வும் பிரிக்கப்படுவர். 244. இப்பொழுது கவனியுங்கள். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர் களையும் வஞ்சிக்கும்,'' இந்தக் கூட்டமானது தொடர்ந்து நம்முடனே கூட வருகிறதாய் இருக்கிறது. ''சகோதரனே, அல்லேலூயா-! தேவனுக்கு மகிமை,'' என்று அவர்கள் கூறினாலும் எதற்காக அதைக் கூறுகிறார்கள் என்பதை நீ உன் உள்ளத்தில் அறிந்திருப்பாய். ஒரு கூட்ட ஜனங்கள் இடமிருந்து எல்லா பணத்தையும் பிழிந்து எடுப்பதற்காக அவர்கள் அவ்விதம் கூறுவார்கள். அத்தகைய காரியம் எனக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? அது எனக்குத் தெரியும் என்று ஒரு வேளை அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அதை நான் அறிந்து இருக்கிறேன். 245. தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவன் யாரென்று இயேசு ஆதி முதலாய் அறிந்திருந்தார்'' புரிந்துக்கொள்ளுகிறீர்களா-? அந்த யூதாஸ் என்ன செய்தான்-? தன்னுடைய நேரத்திற்காக அவன் காத்திருந்தான். நாமும் கூட அதேவிதமாக, நாமே அசைய முயற்சிக்காமல் அந்த நிமிஷத்திற்காக காத்து இருக்க வேண்டும். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்த இந்த ஏமாற்றுக்காரர்கள் கூடவே யாத்திரை செய்கிறவர்களாய் இருக்கின்றனர். அந்தக் கூட்டத்தை கவனித்துப் பாருங்கள். 246. இவர்கள் விசுவாசிகளோ அல்லது அவிசுவாசிகளோ அல்ல; மாறாக பாவனை விசுவாசிகளாயிருக்கின்றனர். இவர்கள் நல்ல பயிர்களோடு கூடவே களைகளாய் விளைந்து, ஜனங்களிடமுள்ள ஒவ்வொரு காசையும் பிடுங்கி (கவனிக்கிறீர்களா-?) இந்த ஸ்தாபனங்களில் குவியலாக குவித்து விடுவார்கள். அத்தகைய காரியத்திற்கு நீ விரோதமாயிருக்கிறாய் என்று அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். நீ அதைக் குறித்து என்ன தான் கூறினாலும் அது அவர்களுக்கு ஒரு காரியமல்ல. 247. அத்தகைய கடிந்துக் கொள்ளலோடு நீ அவர்களிடம் வரும் முன்பே, அவர்கள் உன்னைக் குறித்து தங்கள் ஜனங்களிடம் எச்சரித்து, ''அவனுக்கு செவி கொடுக்காதீர்கள்'' என்று கூறி விடுவார்கள். 248. ஓஹையோ என்னுமிடத்தில், அகங்காரம் கொண்ட ஓர் மனிதன் (அங்கு அப்பொழுது தான் சகோ. கிட் அவர்கள் சுகம் அடைந்திருந்தார்) மேடையில் ஏறி வந்து, “சகோ.பிரான்ஹாம் அபிஷேகத்தில் இருக்கும் போது ஒரு தீர்க்க தரிசியாய் இருக்கிறார். அதைக் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் அபிஷேகத்தில்லாத போது செய்கின்ற போதகத்தை விசுவாசிக்காதீர்கள், ஏனெனில் அது தவறாய் இருக்கிறது'' என்று கூறினான். 249. நான் அங்கு உள்ளறையில் அமர்ந்திருப்பதை அறியாதவனாய் அவன் பேசிக் கொண்டிருந்தான். அதை கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார். ஆகவே நான் மேடையில் சென்று, (உங்களில் அநேகர் அங்கிருந்தீர்கள்) “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதாயிருக்கிறதே என்று வார்த்தை உரைத்து இருக்க, ஒரு மனிதன் ஏன் அத்தகைய காரியத்தைக் கூற வேண்டும்-? நான் என்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளவில்லை. அந்த மனிதன் தான் என்னை தீர்க்கதரிசி என்று அழைத்தான். 250. தீர்க்கதரிசி என்ற பதத்திற்கு ஆங்கில மொழிபெயர்ப்பில் 'போதகர் என்று பொருள்படும். பழைய-ஏற்பாட்டின் 'ஞான திருஷ்டிக்காரன் (Seer) என்ற பதத்திற்கு, தேவனுடைய வார்த்தையை தன்னிடத்தில் வரப் பெற்றவனாய் இருந்து அதற்குரிய திவ்விய வெளிப்பாட்டையும், எதிர் நோக்கியுள்ள காரியங்களையும் முன் கூட்டியே அறிபவன் என்று பொருள்படும்'' என்று கூறினேன். 251. ஒரு மனிதன் தீர்க்கதரிசி என்று கூறியும் அவனுடைய போதகம் தவறானது என்று கூறுவானானால், அவனுடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதேயன்றி வேறென்ன-? அவர்களுடைய முகமூடி கிழிக்கப்படும் நேரமானது மிகவும் சமீபித்து விட்டது. ஆனால் அத்தகையோர் தாம் (பாவனை விசுவாசிகள்) உன்னுடைய முதுகில் தட்டி, “சகோதரனே' என்று யூதாஸைப் போன்று அழைப்பார்கள். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். அத்தகையோனை தேவன் ஆதிமுதலாய் அறிந்திருக்கிறார், இன்றும் அறிந்திருக்கிறார். 252. இச்செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே, நீங்களும் இந்த மூன்று வகையில் ஒன்றினை சேர்ந்தவர்களாய் இருக்கின்றீர்கள். அதுசரியான உண்மை. நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன். இங்கு வீற்றிருக்கும் ஒவ்வொரு வருக்கும், ஒலிநாடாக்களின் மூலமாய் இதை கேட்டுக் கொண்டிருக்கிற அல்லது புஸ்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு நான் கூறுவது யாதெனில், என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் இச்செய்தியானது மரிக்காமல் ஜீவன் உள்ளதாய் இருக்கும். அது உண்மை. பாருங்கள்-? இந்த மூன்று வகையினரில் நீங்கள் ஏதாகிலும் ஓன்றில் இருந்து தான் ஆக வேண்டும்; அதனின்று தப்ப முடியாது. 253. வேத கதாபாத்திரங்களில், விசுவாசித்தவர்களின் குணாதிசயத்தினின்று உன்னை யார் என்று அடையாளம் கண்டு கொள். இந்த இரவில் நான், நிரூபணமான வார்த்தையை உங்களிடம் உறுதிப்படுத்தின விதமாய் அதை விசுவாசிக்கிறீர்களா-? புகழான நம்பிக்கைக்கு முரணாகவே வார்த்தையானது எப்பொழுதும் காணப்படுகின்றது. 254. நோவாவின் நாட்களில் நீ வாழ்ந்திருப்பாயானால், சபையின் பக்கம் சார்ந்து இருந்திருப்பாயா-? அல்லது தீர்க்கதரிசியாகிய நோவாவின் பக்கம் சார்ந்து இருப்பாயா-? 255. மோசேயின் நாட்களில் நீ வாழ்ந்திருப்பாயானால் தேவனால் நிரூபிக்கப் பட்ட அவனுடைய செய்தியை விசுவாசித்திருப்பாயா-? அல்லது கோராகு தாத்தான் என்பவருடன் சேர்ந்து கொண்டு “நீங்கள் மிஞ்சிப் போகிறீர்கள்-! சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே'' என்று கூறின கலகக்காரர்களை சார்ந்திருப்பாயா-? 256. தானியேலின் நாட்களில் நீ வாழ்ந்திருப்பாயானால் யாரை சார்ந்தவனாய் இருந்திருப்பாய்-? தானியேலையா அல்லது நேபுகாத்நேச்சர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட அந்தச் சபையைப் போல் இருப்பாயா-? பாருங்கள்-? அவர்களின் அந்தப் பெரிய விருந்தில் இருப்பாயா அல்லது அதன் வெளியே இருந்து இருப்பாயா-? 257. எலியாவின் நாட்களில் நீ வாழ்ந்திருப்பாயானால், ஜனங்களால் பயித்தியக்காரன் என்று அழைக்கப்பட்டு தனியனாக மலையில் வாழ்ந்து, தன் கையில் வளைந்த தடியைப் பிடித்துக் கொண்டு, காகங்களால் போஷிக்கப்பட்ட எலியாவை சார்ந்திருந்திருப்பாயா-? அல்லது யேசபேலுடன் இருந்த பாகாலின் பூசாரிகளோடும், நவ நாகரீக ஆடையணிந்த பெண்களோடு நீ இருந்திருப்பாயா-? எலியா அங்கு நின்று கொண்டு பெண்களுடைய செய்கைகளைக் கடிந்துக் கொண்டு இருந்தான். அத்தகைய நேரத்தில் நீ உன் மனைவிக்கு எந்த பாகத்தை தந்திருப்பாய்-? இந்த இரவிலே, சற்று உன்னை நிதானித்து அறிந்துகொள். 258. இயேசுவின் நாட்களில் நீ வாழ்ந்திருப்பாயானால், நீ அவரை சார்ந்து இருந்திருப்பாயா-? அவர் எந்தவித ஸ்தாபனத்தின் இணைப்பை தன்னுடன் வைத்திருக்கவில்லை. அவர்கள் அவரை நோக்கி, “நீ எந்த பள்ளியில் பயின்றாய்-? அவ்விதம் நீ படித்ததற்கான சான்றுகள் எங்களிடத்தில் இல்லையே-! எங்களிடம் படிக்காமல் உனக்கு இத்தகைய ஞானம் எங்கிருந்து வந்தது-? மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் இவைகளில் எந்த சபையை நீ சோர்ந்தவன்-?'' என்றெல்லாம் கேட்டார்கள். அவர் எந்த சபையையும் சேர்ந்தவராய் இருக்கவில்லை. அவர் வார்த்தையாய் இருந்தார். அது தான் உண்மை. அந்த வார்த்தையானவரை நீ சார்ந்து இருந்திருப்பாயா-? 259. அல்லது தாழ்மை, சாந்தமெல்லாம் உடையவர்கள் போல் காட்சி தரும் நாகரீக நம்பிக்கைகுரிய பரிசேய ரபியை சார்ந்திருப்பாயா-? அல்லது நிசாயா ஆலோசனை சங்கத்தில் நிலை நின்றுக் கொண்டிருக்கின்ற ஸ்தாபனத்தையும், லூத்தர், வெஸ்லி என்ற விதமாய், தோன்றி ஸ்தாபனங்களாக மாறின எந்தக் கூட்டத்தை நீ சார்ந்திருக்கிறாய்-? இக்காலத்திற்குரிய வார்த்தை உனக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டதாய் காணும் பொழுது அந்த வார்த்தையோடு இணைந்து இருப்பாயா-? அல்லது சபையானது நின்றிருக்கும் ஸ்தானத்தை தெரிந்துக் கொள்கிறாயா-? இந்த இரவிலே உன்னை நிதானித்துக் கொள். 260. அந்த நாட்களின் பிரசங்கிகளை கடிந்துக் கொண்டு, அற்புதங்களையும், அடையாளங்களையும் இயேசு செய்த பொழுது, அவரோடு கூட தங்கியிருந்த அப்போஸ்தலர்களோடு நீயும் இருந்திருப்பாயா-? இயேசு, உத்தமுமாய் வேதத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்த அந்தப் பிரசங்கிகளைப் பார்த்து, நீங்கள் பாம்புகளின் குடியிருப்புகள். நீங்கள் ஒன்றுமல்ல, ஆனால் கள்ளர் குகையாய் இருக்கிறீர்கள், ''மரித்தவர்களின் எலும்புகளால் நீங்கள் நிறையப்பட்டு இருக்கிறீர்கள். வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே, விரியன் பாம்பின் சந்ததியே, என்றெல்லாம் அவர்களைக் கடிந்து கொண்டு கிழித்தெறிந்தார். கோபம் பொரிந்த முகத்துடன் அங்கு நின்றுக் கொண்டு கடிந்து, கிழித்தெறிந்து கொண்டிருந்த ஒருவரை நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா-? இயேசு மேலும் தொடர்ந்து, ''என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்-? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை-?'' என்று கூறினார். 261. அப்பொழுது அவர்கள் ஜனங்களைப் பார்த்து, ''அவனுக்கு செவி கொடுக்காதீர்கள், அந்த மனிதன் பிசாசு பிடித்தவன். அவன் ஒரு குறி சொல்கிறவன், பைத்தியம் பிடித்தவன், அவனுடைய தாய் திருமணமாவதற்கு முன்பே அவனை கர்ப்பந்தரித்தாள் என்றும், இலக்கணப் பள்ளியில் ஏதாகிலும் அவன் படித்தான் என்பதற்கு சான்று உண்டா-?'' என்றெல்லாம் கூறினார்கள். பாருங்கள்-? 262. பாருங்கள்-? இருந்தாலும் இயேசுவானவர் தம்முடைய பன்னிரண்டாம் வயதில் போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்து பேசின போது அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத் தரங்களையும் குறித்து பிரமித்தார்கள். பாருங்கள்-? “இவன் எந்தப் பள்ளியில் பயின்றான்-?'' என்று அவர்கள் பிரமித்தனர். “மனுஷ குமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப் போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்-?'' என்று இயேசு கேட்டார். அது தான் அவர் படித்த பள்ளி ஐயா-! பாருங்கள்-? 263. நிரூபிக்கப்படும் நேரம் வந்தபோது, இயேசு என்ற மனிதனோடு கூட நடந்த அப்போஸ்தலர்களோடு நீ நிலைத்திருப்பாயா-? 264. அல்லது, “நீ உன்னை மனுஷகுமாரன் என்று போதிப்பதே நீ தெரிந்து கொண்ட வழியாக இருக்குமானால் நாங்கள் எங்கள் சபைக்கே திரும்பவும் சென்று விடுவோம். ஏனெனில், “நீ யாரென்று எங்களுக்குத் தெரியாதா-? எங்களைப் போல் நீயும் ஒரு மனிதன் தான். நாங்கள் உன்னோடு சாப்பிட்டோம்; உன்னுடைய பெலவீனத்தை நாங்கள் கண்டோம், உன்னுடைய கண்ணீரையும் நாங்கள் கண்டிருக்கிறோம்; எங்களோடு நீ வனாந்திரத்தில் வந்திருந்ததையும் நாங்கள் கண்டோம். இவ்விதமாக நாங்கள் உன்னுடைய எல்லாவற்றையும் அறிந்து இருக்கும் போது, நீ உன்னை எப்படிப்பட்ட வனாக்குகிறாய்-? வானத்தில் இருந்து வந்தவன் என்று கூறுகிறாயே, இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சு'' என்று கூறிய அந்த 70 பேர்களை நீ சார்ந்திருக்கிறாயா-? அல்லது அந்த அப்போஸ்தலரோடும், கிறிஸ்துவுடனும் சென்றிருப்பாயா-? 265. பரிசுத்த மார்டின், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை சபையில் நிலை நிறுத்த முயன்ற போதும் அற்புதங்களையும் அடையாளங்களையும் உடையவராக சபையில் முயற்சி செய்த போது, கத்தோலிக்க சபையானது அவரை அங்கீகரிக்காமல் புறம்பே தள்ளி விட்டது. கத்தோலிக்க சபையின் மதக்கோட்பாடோடு உன்னை சம்பந்தப் படுத்தி இருந்திருப்பாயா-? அல்லது மரித்த பரிசுத்தவான்களின் சொரூப வழிப் பாட்டிற்கு மறுத்து அவைகளை சபையில் நிறுவ மறுத்த பரிசுத்த மார்டினை சார்ந்து இருந்திருப்பாயா-? சில சமய விதிகள் சபையில் சேர்க்கப்பட்ட பொழுது மார்டீன் அதை எதிர்த்து, 'வார்த்தையே சத்தியமாய் இருக்கட்டும்-!'' என்று அறை கூவினார். அவருடைய ஊழியத்தை தேவன் அற்புதங்களாலும், அடையாளங் களாலும் நிரூபித்தார். மார்டின் எதை முன்னறிவித்தாரோ, அது அப்படியே நிகழ்ந்தது. அவர் தேவ ஆவியிலே நடந்து வார்த்தையை நிரூபித்தபடியினால் அன்றிருந்த கத்தோலிக்க பாதிரிமார்கள் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாதவர்களாய் இருந்தனர். இத்தகைய ஒரு மனிதனின்கூட இருந்து அவரை நீ சார்ந்திருந்திருப்பாயா-? அல்லது கத்தோலிக்க சமய கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு இருந்திருப்பாயா-? 266. தேவனுடைய வார்த்தை, சமயக் கோட்பாடு என்பவைகள் உனக்கு முன்பாக இப்பொழுது இருக்கின்றன. நீ சபையின் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வாயா-? அல்லது வார்த்தை என்ன சொல்லுகிறதோ அதை ஏற்றுக்கொள்வாயா-? 267. ஞாபகம் கொள்ளுங்கள். இன்றிருப்பது போலவே ஒவ்வொரு காலங்களிலும் காணப்பட்டது. ஜனங்களின் மத்தியில் காணப்படும் புகழ்ச்சியான நம்பிக்கை எப்பொழுதும் உண்மையான வார்த்தைக்கு முரணாகவே இருக்கின்றன. அந்தி கிறிஸ்து வார்த்தையை மறுப்பதில்லை. நிச்சயமாக அவ்விதம் செய்யாமல் அவனும் அதை விசுவாசிக்கின்றான். ஆனால் இதில் எழுதப்பட்ட விதமாய் எல்லாவற்றையும் அவன் விசுவாசிக்கிறதில்லை. 268. சாத்தான் ஏவாளிடம் பேசினான். ஏவாள் அதை முற்றிலுமாக விசுவாசித்தாள். ஆனால் அவன், அவளுக்கு கொடுத்ததெல்லாம் ஒரு சிறிய மாற்றமே. அவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் சில சிறிய பாகமாகிய ஞானஸ்நானம் போன்ற சத்தியங்களை மறுதலிக்கின்றனர். தேவனுடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறு பாகத்தையும் நீ விசுவாசிக்க வேண்டும். நீ அவ்விதம் விசுவாசிக்கும் போது, ஒரு வேளை ஆரம்பக் கிரியைகளைத் திரும்ப செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அது தான் வார்த்தை ஆகும். ஏவாளின் நாட்களிலிருந்து, இதுவே சாத்தானின் தந்திரமாயிருக்கின்றது. வார்த்தையின் ஒரு சிறு பாகத்தை விசுவாசியாமலிருப்பதே அக்காரியமாகும். 269. வார்த்தையானது எப்பொழுதும் மூன்று வகையினரான ஜனங்களைப் பிரிக்கிறதாய் இருக்கின்றது. ஒவ்வொரு காலங்களிலும் அவ்விதமாகவே அது இருந்தது-! 270. தேவன் ஒரு காரியத்தை அனுப்பி அதை அடையாளம் காட்டும் போது (வார்த்தையை), தங்களை விசுவாசிகள் என்று உரிமை கொண்டாடி அதை பின் பற்றுபவர்கள் உண்டாகின்றனர். அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கின்றனர். 271. ஆனால் ஒரு சிறிய முரண்பாடு (அதை எவ்வளவு தான் தேவன் நிரூபித்து இருந்தாலும் கூட) அவர்கள் விசுவாசிப்பதற்கு எதிராக வரும் போது, அவர்கள் அதைக் குறித்து, அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது'' என்று கூறி விடுவர். அப்படிப் =பட்டவர்கள் அவிசுவாசிகளாய் இருக்கின்றனர். 272. யூதாஸைப் போன்று கூடவே இருந்து கொண்டு வாய்ப்பு ஏற்படும் பொழுது, "அதோ அது தான் காரியம்'' என்று அவனைப் போல ஒருவரை முதுகில் குத்தி விட்டு, இப்பொழுதோ அல்லது என்றோ ஒரு நாள் அவ்விதமாக அது சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியும்; அந்தக் காரியம் இது தான்'' என்று கூறுகிறாயா-? அப்படிப்பட்டவன் பாவனை விசுவாசியாயிருக்கிறான். அதைக் குறித்த எல்லாவற்றையும் நீங்கள் வேதத்தில் காணலாம். 273. ஒரு சமயம், மலைப்பாங்கான தேசத்தில் வளர்க்கப்பட்ட கென்டக்கியைச் சேர்ந்த சிறு பையன் ஒருவன் இருந்தான். அவன் அத்தகைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதினால், அவன் தன் ஜீவியத்தில் ஒரு போதும் முகம் பார்க்கும் நிலைக் கண்ணாடியைப் பார்த்ததில்லை. இப்படியிருக்க, அவன் லூயிவில்லில் உள்ள தன் அத்தையின் வீட்டிற்கு ஒரு சமயம் வந்திருந்தான். அவனுடைய அத்தை நல்ல நாகரீகமான வீட்டில் வசித்துக் கொண்டிருந்தாள். அங்கு படுக்கை அறையில் இருந்த கதவில், முழு நீளம் உள்ள ஒரு நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்தது. 274. இச்சிறுவன் வீட்டினூடாக ஓடி விளையாடும் போது, இக்கண்ணாடியைப் பார்த்து அப்படியே நின்று விட்டான். ஏனெனில் அந்த சிறுவனான ஜானி இன்னொரு ஜானியை அங்கு கண்டதே அதன் காரணம் பாருங்கள்-? அவன் தலையை சொரிந்தான். அவன் சிரித்தான்; அதுவும் சிரித்தது. அவன் மேலும் கீழும் குதித்தான்; கண்ணாடியிலிருந்த ஜானியும் அவ்வாறே செய்தான். அவன் அதனை நெருங்கி வந்தான். தன்னோடு விளையாடக் கூடிய சிறு பையன் அங்கு இருக்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் நடந்து வந்து கண்ணாடியை நெருங்கி, அதைக் குத்தினான். இந்த அவனுடைய வியப்பை யோசித்துக் கொண்டே அவன் திரும்பிப் பார்த்து, தன்னுடைய அத்தை கவனிப்பதைக் கண்டு, ''அத்தையே, அது நானல்லவா-?'' என்று கேட்டான். 275. இப்பொழுது கவனியுங்கள். இச்செய்தியாகிய கண்ணாடியில் உங்களை நோக்கிப் பாருங்கள். இதில் நீங்கள் யாரை பிரதிபலிக்கிறீர்களா-? நீங்கள் அந்த மூன்று வகையில் ஒருவராக இருக்கிறீர்களல்லவா-? 276. முதல் காரியத்திலேயே 'அது தவறு,' என்று கூறி தன் புற முதுகைக் காட்டும் ஒருவன் அங்கு இருக்கிறான். பாருங்கள் 277. வார்த்தையோடு சேர்த்துப் பார்த்து அது சரிதானா என்று நிதானி. “எல்லா வற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' அவர் கூறின வார்த்தை இது தான். 278. தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் உற்று நோக்கி, கடந்து போன காலங்களில் நீ எந்த வகையினை சேர்ந்தவன் என்று அடையாளம் கண்டு பிடி. நன்றாக உணர்ந்து பார். மோசேயின் காலத்திலோ, நோவா, இயேசு இவர்களின் காலத்திலோ நீ வாழ்ந்து இருந்தாயானால், எந்த வகையான விசுவாசியின் கூட்டத்தில் உன்னை சம்பந்தப்படுத்துவாய்-? இன்று இரவு அதை நீ யோசித்து அறிந்து கொள். 279. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது இது ஒரு ஆழமான காரியம். தற்பொழுது நீங்கள் வகிக்கிற நிலைமையானது அந்த நாட்களில் (நோவா, மோசே இயேசு வாழ்ந்த காலத்தில்) நீங்கள் எந்த நிலைமையில் வாழ்ந்து இருப்பீர்கள் என்பதை நிரூபிக்கிறதாய் இருக்கின்றது. உங்களுக்கு நீங்களே நியாதிபதிகளாய் இருந்து இதற்கு தீர்ப்புச் சொல்லுங்கள். 280. ஐயா, ஊழியக்காரரே, நீங்கள் எந்த கூட்டத்தை சேர்ந்தவராய் இருந்திருப்பீர்கள்-? விசுவாசிப்பதற்கு கடினமான விவரத்தை இயேசு எப்பொழுது கூறினார்-? அவரே வார்த்தையென்று பரிபூரணமாக நிரூபிக்கப்பட்ட பின்பே அக்கடினமான விவரத்தை இயேசு கூறினார் அத்தகைய காரியத்தை நீங்கள் ஒரு போதும் கேட்டிருக்க மாட்டீர்கள். ''மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்-?'' என்ற வார்த்தையை கேட்டு இருப்பீர்களானால், நீங்கள் என்ன பிரதியுத்தரம் சொல்லி இருப்பீர்கள்-? 281. ''அவர் எங்கே பிறந்தார் என்றும், அவருடைய அப்பாவும் அம்மாவும் யாரென்றும் எனக்குத் தெரியும் என்று நீங்கள் கூறி இருக்கலாம். “மனுஷக் குமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப் போகின்றது'' என்ற காரியம் உங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட பேச்சாய் இருந்திருக்கலாம். இல்லையா ஐயா-? அதை உங்களால் ஜீரணிக்க முடியாமல் போயிருந்து இருக்கலாம். ஒரு வேளை இன்றைக்கும் அதே காரியம் உங்களுக்கு சம்பவிக்கலாம். அப்படி ஆனால் தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் பார்த்து எங்கே நிற்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். ஏமாற்றுக்கார மனிதனே, நீ அதை ஒரு போதும் செய்யாதே. 282. கவனி, நீ இப்பொழுது இந்த மூன்று பிரிவுகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவனாய் இருக்கிறாய். நீ இப்பொழுது இருக்கின்ற நிலையின்படியும் மனநிலையின்படியும். காணக்கூடியவர்களாய் அமர்ந்திருக்கின்ற மக்களாகிய நீங்களும், ஒலிநாடாவின் மூலம் செய்தியைக் கேட்டுக் கொண்டு இருக்கின்ற காணக் கூடாத மக்களாகிய உங்களுக்கும், இச்செய்தியைக் கேட்ட பிறகு உங்கள் மனநிலை நீங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதை நிரூபிக்கும். இச்செய்தி ஆனது நீ எங்கே இருக்கிறாய் என்பதை திட்டமாக அறிவிக்கும். வார்த்தையை விசுவாசித்து அதிலே நிலை நிற்கும் விசுவாசியோ-!, அல்லது புறம்பே நடந்து சென்று, இந்த ஒலிநாடாவை நான் கேட்க விரும்ப வில்லை'' என்று சொல்லுகிற அவிசுவாசியோ-! அல்லது அதனுடனே இருந்துக் கொண்டு குற்றம் பிடிக்க முயற்சி செய்யும் பாவனை விசுவாசியோ-! என்று திட்டமாக இச்செய்தி உன்னை கண்டு பிடித்துவிடும். 283. வார்த்தையை விசுவாசித்து அதிலே நிலை நிற்க, உத்தமமாய் ஜீவிக்க, கீழ்ப்படிய தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக-! ஏனெனில் அவரே அந்த வார்த்தையாய் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? (சபையோர் ‘ஆமென்,' என்கின்றனர் - ஆசி) நாம் ஜெபிப்போம். 284. பிரியமுள்ள பரலோகப் பிதாவே, இத்தகைய காரியங்களை இச்சமயத்தில் கூறுவதற்கு எவ்வளவு கடினமாய் உள்ளது-! இந்த ஒலிநாடாக்கள் உலகம் முழுவதிலும் செல்லும் போது ஆயிரமாயிரமான ஜனங்கள் இதை கேட்பார்கள். ஆனால் கர்த்தாவே, இது உண்மையாய் இருக்கிறது. கர்த்தாவே, முதலாவது என் இருதயத்தை சுத்தம் செய்யும்-! ஆண்டவரே என்னை சோதித்துப் பாரும். 285. நான் பலவீனனும் சோர்வு உற்றவனாயும் இருக்கிறேன். என்னுடைய குரல், உதடு வறண்டு இருக்கின்றன. நான் வயதாகிக் கொண்டிருப்பதினால் தொய்ந்து போகிறேன். கர்த்தாவே, இதோ நான் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். 286. என்னை அறியாமல் நான் ஏதாகிலும் தவறு செய்கிறேனோ என்று என்னை ஆராய்ந்து எனக்கு வெளிப்படுத்தும் அதை நான் சரிசெய்து கொள்ள ஆயத்தமாய் இருக்கிறேன். 287. தேவ வார்த்தையாகிய கண்ணாடியில் நான் உற்று நோக்குகிறேன். என் உடைய பிம்பம் இயேசுவை பிரதிபலிப்பதை நான் காண்கிறேனா-? பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆகிய இரண்டு காலங்களிலிருந்த விசுவாசிகளை என்னில் காண்கிறேனா-? அல்லது நான் வார்த்தையை நின்று கேட்காமல் அதற்கு பதிலாக ஒரு ஸ்தாபனத்தின் கோட்பாட்டை விசுவாசிக்கும் அவிசுவாசி யாக என்னை காண்கிறேனா-? அல்லது கூடவே இருந்து கொண்டு வாய்ப்பு வரும்போது குற்றம் பிடிக்கும் பாவனை விசுவாசியாக என்னை காண்கிறேனா-? 288. கர்த்தாவே, என்னுடைய இருதயத்தைக் கழுவும். ஏனெனில் என்னுடைய ஜீவியம் சரியாக இருக்க நான் விரும்புகிறேன். காரியத்தின் பாதியிலே நிற்க வைக்க அல்ல, முழுவதையும் நிறைவேற்ற உதவி செய்யும். அது மட்டுமல்ல பிதாவே, ஆண்களையும் பெண்களையும் நான் தவறாக வழி நடத்தக் கூடாது. நான் அவர்களை நேசித்தும் அவர்களால் நேசிக்கப்பட்டும் இருக்கிறேன். 289. பிதாவே, எந்த ஒரு ஸ்தாபன-சபை சரியென்றோ சபைக் கூட்டங்கள் அல்லது பெரும்பான்மையான ஜனங்கள் சரியென்றோ நான் நினைத்தால், கர்த்தாவே, நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்த என்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு, இந்த ஜனங்கள் எங்கிருந்தால் சரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேனோ அங்கு அவர்களை அனுப்ப எனக்கு உதவி செய்து அருளும். என்னை கழுவும். ஆனால் கர்த்தாவே, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து இருக்கும் கரியத்தை நான் காணும் போது, நான் அதை அவர்களுக்குக் கூறினாலும் அவர்கள், 'அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்கி விடாது; கர்த்தர் அத்தகைய காரியத்தை எதிர்பார்ப்பதில்லை,'' என கூறிவிடுகிறார்கள். 290. கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் மாறாத இயேசுவாய் இருக்கிறீர். நீர் எப்பொழுதும் அதே தேவனாய் இருக்கிறீர். இந்த வேதாகமம் உம்முடைய வார்த்தை என்றும் நீரும் உம்முடைய வார்த்தையும் ஒன்றே என்றும் நான் விசுவாசிக்கிறேன். 291. உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களுக்குத் தந்து, அதினால் உம்முடைய வார்த்தையை உயிர்ப்பிக்கச் செய்து எங்களுக்கு உயிர்ப்பிக்கும் வல்லமையைத் தந்து, என்றாவது ஒரு நாள் இந்த எங்கள் ஜீவியத்தை நீர் முடிக்கும் போது, நாங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு உன்னதத்திற்கு, உலகத் தோற்றத்திற்கு முன் உம் உடைய சிந்தையில் இருந்த இடத்திற்கு நாங்கள் ஏறிப் போவோம். 292. எங்களுடைய பாவங்களை மன்னியும், பிதாவே வார்த்தையின் விசுவாசிகளைத் தவிர மற்ற வகையைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ இங்கு இருப்பார்களானால், தேவனே அவர்களை நீர் சுத்திகரியும். இச்செய்தியை ஒலி நாடாக்களில் கேட்கப் போகிறவர்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். தேவனே, அவர்கள் இழக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆதலால் அவர்களையும் சுத்தம் செய்யும். கர்த்தாவே, நாங்கள் இதை புரிந்து கொள்ள உதவி செய்யும். ஒரு தவறு மற்றொரு தவறை சரி செய்ய முடியாது. ஆனால் இரண்டு தவறையும் செய்வது தான் அதற்குகந்த வழி ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளை உம்மிடம் கேட்கிறோம் பிதாவே. 293. நம் தலைகளும், இருதயங்களும் பணிவுடன் இருக்கும் இந்த நேரத்தில், சில நிமிடங்கள் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 294. நான் சிறுவனாக இருந்த போது நரகத்தைக் குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டேன். அத்தகைய ஒரு காட்சியை நான் காணாது இருந்து இருப்பேனானால் நான் கூறுவது தவறாய் இருக்கும். அத்தரிசனத்தில் நான் கண்ட காட்சி ஆனது அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. 295. இழந்து போனவர்களின் அந்த தேசத்தில் நான் காணப்பட்ட போது நான் மிகவும் அலறினேன். தேவனே இந்த ஸ்தலத்திற்கு வேறு எவரையும் வர அனுமதியாதேயும்-!'' என்று கூக்குரலிட்டேன். அதன் பயங்கரங்களை எந்த நாவினாலும் விவரிக்க இயலாது. அக்கினியும் கந்தகமும் எரிகிற நரகம் என்ற ஒன்றை நீ விசுவாசிப்பாயானால், இழந்து போன நிலைமையின் பயங்கரங்களு க்கும், அதைப் பின்னியிருக்கும் ஆழ்ந்த உபத்திரவங்களுக்கும் அதை ஒப்பிடும் போது நரகமானது பார்வைக்கு குளிர்ச்சியானதாயும் பசுமையானதாயும் காணப்படும். 296. சமீபத்தில் நான் ஆசீர்வதிக்கப்பட்டோர் உள்ள ஸ்தலத்தையும் கண்டேன். மனிதனுடைய புரிந்து கொள்ளுவதற்கு அப்பாற்பட்ட காரியங்களை நான் பேச முயற்சிப்பேனானால், அதை எவ்விதம் விவரிப்பேன் என்பதை அறியாதவனாய் இருக்கிறேன். அது எவ்வளவு சமாதானமாயும், ஒருபோதும் அழியாத, வயோதிப பருவமடையாத, வியாதியுராமல், நித்திய ஜீவனுடைய, வாலிபமாகவும், சுகதேகியாகவும், பாவமென்ற ஒன்று குடியிராத இடமுமாய், அது இருக்கிறது. அதை எவ்விதத்திலும் விவரிக்க இயலாது-! 297. ''எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை. அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினால் வெளிப்படுத்தினார்'' (1-கொரி: 2:9-10) என்று பவுல் கூறினான். ஆம் அதை விவரிக்க வழியேயில்லை-! 298. இப்பொழுது கவனியுங்கள். இச்செய்தியானது நிச்சயமாக உண்மையாய் இருக்க, இங்கே காணப்படுகிறவர்களும், காணப்படாதவர்களுமாகிய இரண்டு சபையினரும் இந்த மூன்று வகையினரில் ஏதாவது ஒரு வகையை சேர்ந்த வராய் இருப்பீர்கள் என்று நான் எடுத்துக் காண்பித்துள்ளேன். உண்மையான விசுவாசிகளாய் இருந்தாலும் உங்களை வார்த்தையில் சோதித்து அறியுங்கள். வார்த்தையானது ஒரு காரியத்தைக் கூறி சபையானது அதற்கு வித்தியாச மானதைக் கூறினால், நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்-? தேவனுடைய வார்த்தையாகிய நிலைக் கண்ணாடியில் பார்த்து, நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்துக் கொள்ளுங்கள். இன்று இரவிலே நீங்களோ, அல்லது டெலிபோன் மூலமாக இணைக்கப்பட்டுள்ள காணக் கூடாத அந்த சபையாரோ, அல்லது நீங்கள் அவிசுவாசியின் வகையைச் சார்ந்தவராய் இருப்பின், நீங்கள் விசுவாசிக்கும் வகைக்கு வரத்தக்கதாக நான் உங்களுக்காக ஜெபத்தை ஏறெடுக்கலாமா-? 299. அதை ஆமோதிக்கும் விதமாக உங்கள் தலைகளும், இருதயங்களும் பணிந்து இருக்க உங்கள் கண்கள் மூடப்பட்டவைகளாக தேவனுக்கு முன்பாக காணப்படுவீர்களா-? சில சமயங்களில் ஜனங்கள் தங்களுடைய பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி கைகளை உயர்த்த பயப்படுகிறார்கள். அது அப்படி இருக்கக் கூடாது. “நான் தவறாய் இருக்கிறேன். என்று எழுந்து நின்று கூற ஜனங்கள் விருப்பம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். 300. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.'' என்று வேதம் கூறுகிறது. பாவம் என்றால் என்ன-? அவிசுவாசமே பாவமாகும். எதில் அவிசுவாசம்-? வார்த்தையின் பேரிலுள்ள அவிசுவாசமே-! 301. விசுவாச வகையினரை நீங்கள் சேர்ந்திரா விட்டதால் சில சமயங்களில் வேதத்திலுள்ள காரியங்களை உங்களுடைய அறிவை உபயோகித்து பார்க்க முயற்சிப்பீர்கள். அவ்விதம் நீங்கள் பார்க்கும் போது உங்களால் அதைக் காண முடியாது. நீங்கள் அதை அறிந்து கொள்ள முடியா விட்டாலும் அதை அறிந்து கொள்ள வீரும்புவீர்கள். அத்தகையோர் இங்கிருப்பின், “தேவனே, நான் அதைப் புரிந்து கொள்ளச் செய்யும். இதோ இப்பொழுது நான் உமக்குக் கீழ்ப்படிகிறேன்'' என்று கூறுங்கள். 302. உங்களுடைய கைகளையுயர்த்தி, “ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள்'' என்று கூறுவீர்களா-? (அநேகர் தங்கள் கரங்களை உயர்த்துகிறார்கள்) தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 303. “வேதத்தில் உள்ள ஒரு காரியம் எனக்குத் தெரியவில்லை. நான் மற்ற இரண்டு வகையைச் சேர்ந்தவனோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது- ஒரு வேளை நான் எழுபது பேரில் ஒருவனாக இருப்பேனோ என்று அஞ்சுகிறேன். தேவன் இத்தகைய காரியங்களை எப்படிச் செய்வார் என்பதை விளங்கிக் கொள்ள எனக்குக் கடினமாயிருக்கிறது. ஆனால் நான் அதை விளங்கிக் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறேன். நான் விசுவாசிக்க விரும்புகிறேன். தேவனே, என்னுடைய அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். நான் அதில் ஒரு பாகமாய் இருக்க விரும்புகிறேன்,'' அது எனக்கு உள்ளே இருக்க விரும்புகிறேன் என்று எல்லாம் கூறுகிறவர்கள் இங்கிருக்கிறீர்களா-? 304. “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான்:15:7) என்று வேதம் கூறுகிறது. அது உண்மை என்று நாமறிவோம். கவனியுங்கள், “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் (உள்ளே இருப்பதும், வெளியே வருவதாகவும் அல்ல) நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் (அவரே வார்த்தையாய் இருக்கிறார்) என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால், பின்பு நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்,'' நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். 305. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவ னுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' (யோவான்:5:24) என்று இயேசு கூறினார். உங்களால் வார்த்தையை முதலாவது ஏற்றுக் கொள்ளக் கூடுமா-? எல்லா வார்த்தைகளையும் கிறிஸ்து எனப்படுவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக்கூடுமா-? கிறிஸ்துவே அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையாய் இருக்கிறார். 306. 'கிறிஸ்து' என்பதற்கு 'அபிஷேகிக்கப்பட்டவர்,' அந்த நாளுக்கு உரிய வார்த்தையாய் வெளிப்பட்டவர், 'இரட்சகர்,' 'மீட்பர்' என்றெல்லாம் பொருள்படும். அவர் தாம் அபிஷேகிக்கப்பட்டவராய் இருந்து அந்த இடத்தை நிரப்புகிறவர். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறை தட்டுகின்றார்). 307. சாயங்கால நேர வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவரே. ஸ்தாபனங்களினூடாக சிதைந்து விட்ட விசுவாசத்தை திரும்பப் பெறச் செய்கிறவரும் இவரே. ஸ்தாபனங்களை கடிந்து கொண்டு ஆதி விசுவாசத்திற்குள், வேத விசுவாசத்திற்குள், மூல விசுவாசத்திற்குள் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிப்பதற்காக அதனோடு ஒன்றை கூட்டின விதமாகவோ அல்லது குறைந்த விதமாகவோ அல்லாமல், அது இருக்கிற விதமாகவே அதை விசுவாசிக்க அவர் பிரகாசிக்கிறவராய் இருக்கிறார். அந்த விதமாக அதை விசுவாசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா-? 308. இங்கு இன்னுமாக கைகளை உயர்த்தாதவர் யாராகிலும் தங்கள் கரங்களை உயர்த்தி, ''தேவனே, என்னை நினைத்தருளும்,'' என்று கூறுவீர்களா-? 309. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக - (அநேகர் தங்கள் கரங்களை உயர்த்துகின்றனர். சகோ. பிரான்ஹாம் அவர்களை நோக்கி, ''தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று கூறுகிறார் - தமிழாக்கியோன்). 310. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கரங்களை என்னை நோக்கி உயர்த்தவில்லை. அவரை நோக்கித் தான் உயர்த்தி உள்ளீர்கள். இப்பொழுது எனக்குப் பின்னால் இருக்கும் தேவன் தாமே உங்கள் கரங்களைக் காண்கின்றார். நான் காணத் தவறினாலும் அவர் காண்கிறார். உன் இருதயத்தையும், உன் இருதயத் துடிப்பையும், உன்னுடைய குறிக்கோளையும், அந்தக் குறிக்கோளை அடைய விழையும் உன் செய்கையையும் தேவன் அறிவார். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. 311. “நான் எல்லா வார்த்தைகளையும் விசுவாசிக்க விரும்புகிறேன்'' என்று கூறுபவர் யாராவது இங்கு உண்டா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. எனக்கு உதவி செய்தருளும் தேவனே... எனக்கு உதவி செய்யும். தேவன் உம் கரங்களைக் காண்கிறார். ஆம் ஐயா, ஆம் அது தான் தேவனே. என்னால் புரிந்து கொள்ள முடியாத காரியங்கள் உண்டு. ஆனால் நான் ஒரு அவிசுவாசியாக இருக்க விரும்ப வில்லை. அது எனக்கு விளங்காவிடினும், நான் எப்படியும் அதை விசுவாசிக்க விரும்புகிறேன். ''கர்த்தராகிய ஆண்டவரே, இதோ இங்கிருக்கிறேன். நான் விசுவாசிக்க விரும்புகிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி அருளும்'' என்று சொல்பவர்கள் யாராவது உண்டா-? தேவன் உங்களோடிருப்பராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேகர் தங்கள் கரத்தை உயர்த்துகிறதை நான் காண்கிறேன். கரங்கள் இன்னும் உயர்த்தப்படுகின்றன. 312. ''சகோ.பிரான்ஹாமே, இது எனக்குப் பிரயோஜனமாய் இருக்குமா-?'' என்று நீ கேட்கலாம். சரியான காரியத்தின் மேல் உன் கையை நீ வைத்து, பின்பு அதைக் குறித்து எவ்விதம் உணர்கிறாய் என்று கண்டுக்கொள். 313. உன்னுடைய இருதயத்தில் நீ விரும்பதகாத ஒரு காரியம் இருந்து கொண்டு உனக்குத் தொல்லை தரலாம். இதை நீக்குவது எப்படி என்று நீ அதிசயிக்கலாம். கர்த்தாவே, நான் யூதாஸாக இருப்பதை தவிர்த்திடும். இந்தச் செய்தியை நான் தொடர்ந்து பின் பற்றுகையில் ஏதாகிலும் சிறு குறையும் என்னில் காணப் படாமல் தவிர்த்திடும். கர்த்தாவே, வார்த்தையில் உண்மையாக நான் நிலைத்து இருக்கச் செய்யும். ''மற்றவர்கள் எல்லோரும் ஏன் அவ்விதம் கூறுகிறார்கள்-?'' என்று ஒரு அவிசுவாசி கூறுவதைக் போன்று நான் கூறாமல் இருக்கட்டும். கர்த்தாவே, அந்த இரண்டு வகையினராகவும் இருக்க நான் பிரியப்படவில்லை. கர்த்தாவே, இந்த மணி நேரத்தின் தேவனுடைய வார்த்தையை நான் காண்கிறேன். அதிலே உம்மை காண்கிறேன். கர்த்தாவே, என்னை அதின் ஒரு பாகமாகவே நீர் ஆக்கிவிடும்" என்று ஜெபம் செய்வாயாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 314. நாம் ஜெபிப்போமாக; ஒவ்வொருவரும் உங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். நாம் எல்லோரும் இங்கு சில காலமே இருக்கப் போகிறோம். நம்மில் சிலர் நித்திரை அடைந்து விடுவார்கள். இங்கு அநேகராய் கூடி இருக்கிறோம். நம்மில் சிலர் முதிர் வயதடைந்து இருக்கிறோம்; சிலர் வாலிபமாயிருக்கிறோம். ஆனால் நாம் எந்த வயதிலும் மரிக்கக் கூடும். நாம் என்றாவது இங்கிருந்து பிரிக்கப்பட வேண்டியவர்கள் ஆனபடியால், இந்த விவகாரமானது இங்கேயே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியதாய் உள்ளது. நீங்கள் அங்கு ஏதோ தற்செயலாக வந்துவிட முடியாது. உங்களுக்கு சொந்த புத்தியுண்டாய் இருக்கையிலே நீங்கள் இங்கு வர வேண்டும். 315. “நல்லது, நான் மரிக்கும் முன்பாக அதைக் கண்டுக் கொள்ள கூடுமானால் நலம்,'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் மரிக்கும் நிலையில் இருக்கும் போது ஒரு வேளை உங்களுக்கு சொந்த புத்தியில்லாமல் போய் விடலாம்; அல்லது ஒரு விபத்து நேரிட்டோ, அல்லது இருதய அடைப்பு உண்டாகியோ உங்களுடைய மரணம் சம்பவிக்கலாம். என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறியாது இருக்கிறோம். தேவன் மட்டுமே காரியங்களை அறிந்து இருக்கிறார். என்னுடையவைகளை நான் நம்புகிறதில்லை. 316. ஜன்னல்களைப் பிடித்துக் கொண்டு ஜனங்கள் நின்று கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். பாருங்கள். ஆம், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. 317. “நான் சரியாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, இப்பொழுதே அத்தீர்மானத்தை செய்வோமாக. நீ உண்மையாக உன் இருதயத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரை நோக்கி, ''கர்த்தராகிய இயேசுவே, யார் என்ன கூறினாலும், உம்முடைய வார்த்தையே என் ஜீவியத்தின் முதலிடம். என்னுடைய ஜீவியத்திற்கு அது தேவை. ஏனெனில் நீரே அந்த வார்த்தை. வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன். சமயக் கோட்பாடுகளும், மனித எண்ணங்களும் இதற்கு உள்ளாக புகுத்தப்பட்டு, அது மாய்மாலத்திற்கு உரியதாக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும். கர்த்தாவே, அத்தகைய காரியத்தினின்று என்னை சுத்திகரித்து, என்னை முழுமையாக உமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும். நான் என்னுடைய கரத்தையும், இருதயத்தையும், என் குரலையும் என்னுடைய ஜெபத்தையும் உமக்கு நேராக ஏறெடுக்கிறேன். தேவனே, என்னிடத்தில் இரக்க மாய் இரும்,” என்று கூறுவாயானால், நீ முற்றிலும் ஒரு இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்து விடுவாய். 318. என்னுடைய கரங்களும் இப்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது. தேவனே எல்லா அவிசுவாசத்தினின்றும் என்னைக் கழுவியருளும். 319. பரலோகப் பிதாவே, ஏனோக்கு, மரணத்தைக் காணாமல் வல்லமையில் நடந்து ஒரு மத்தியான வேளையில் உம்மிடத்தில் வந்து விட்டான். தேவனே, அதே காரியம் திரும்பவும் நடக்கப் போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் கடைசி நாட்களில் எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிக்கும் என்று நான் அறிந்து இருக்கிறேன். எங்களுடைய கிரியைகள் துரிதமாக முடிவு பெறும் 320. பிதாவே, 36-வருடங்கள் மட்டுமே உண்டு என்று எங்கள் கால அட்டவணை காட்டுகின்றது. அந்தக் காலத்திற்குள் வராவிடில், மாம்சமான ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாமல் போகும். காலங்களை ஆராய்கிறவர்கள் அந்த நேரமானது இன்னுமாக குறுகிவிட்டதாகவும், இன்னும் 15-வருடங்களே மீதம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதைக் குறித்து எனக்குத் தெரியாது, பிதாவே. ஆனால் எங்கள் வேதாகமம் என்ற கால அட்டவணையின்படி நாங்கள் ஏறத்தாழ அங்கு வந்து விட்டோம் என்று மட்டும் நான் அறிகிறேன். 321. கர்த்தாவே, நம்பிக்கையானது முற்றிலும் அற்று போய் விட்டது என்று காண்கிறேன். அவர்கள் அந்த அணுகுண்டுகளை அவிழ்த்து விடுவார்களென்றால் யுத்த முண்ணணி என்று ஒன்று இராமல், அவர்கள் ஒருவரை ஓருவர் அழித்துக் கொள்ளப் போகிறார்கள். கர்த்தாவே, அந்த நியாயத் தீர்ப்பானது அதோ அங்கே தொங்கி கொண்டிருக்கிறது. உலகமானது நெருப்பினால் அழியும் என்று வேதம் கூறுவதை நான் அறிந்திருக்கிறேன், பிதாவே அந்த நேரமானது தோற்றம் அளிக்கத் தொடங்கி விட்டது. 322. கர்த்தாவே, ஜனாதிபதியைக் கொன்றவனை நியாய விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முன்பே, மற்றொரு பொல்லாத மனிதன் அவனை சுட்டுக் கொன்ற சம்பவம் நெஞ்சிரக்கமற்ற செயலாகும். கர்த்தாவே, இவனும் மற்றவனைப் போலவே குற்றமுள்ள நெஞ்சுள்ளவனாய் இருக்கின்றான். அத்தகைய காரியத்தைச் செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை. கிறிஸ்தவ தேசமாக இருக்க வேண்டிய எங்கள் தேசம் பொல்லாங்கினால் நிறையப்பட்டு இருக்கிறது. கர்த்தாவே, என்ன ஒரு கேவலமான உதாரணமாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னியும், கர்த்தாவே. 323. எங்களுக்கு உதவி செய்யும். விசேஷமாக கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அங்கத்தினர்களுக்கு உதவி செய்யும். "ஆவியே உயிர்ப்பிக்கிறது'' என்று நீர் கூறினீரே-! மனுஷ குமாரனாகிய நீர் மேலே ஏறினது போல, உம்முடைய சரீரமாகிய சபையும் மேலே ஏறிப் போக வேண்டும்-! கர்த்தாவே, சரீரத்தை வழி நடத்துகிறது தலை அல்லவா; வார்த்தையாகிய தலைமைத்துவம் சரீரமாகிய கிறிஸ்துவை வழி நடத்தட்டும். கர்த்தாவே, நானும் அந்த சரீரத்தின் பாகமாய் அமையட்டும். 324. இங்கு கரங்களை உயர்த்தினவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் நான் உத்தமமாய் ஜெபிக்கிறேன். கர்த்தாவே அவர்களுடைய இருதயங்களை உற்று நோக்கும். அவர்களைச் சேர்த்துக் கொள்ளும், அவர்கள் யார் என்று நீர் அறிந்து இருக்கிறீர் உம்முடைய ஊழியக்காரனாக நான் அவர்களுக்காக பரிந்து உரைக்கிறேன். கர்த்தாவே, நான் அவர்களை நேசிக்கிறேன். 325. நான் இக்காரியத்தைச் செய்ய முயற்சிப்பதன் காரணம் என் மேலுள்ள உம்முடைய அழைப்பின் ஊழியமே. ஆகவே, பிதாவே, என்னால் இயன்ற வரைக்கும் நன்மையானதை நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய நலிந்த தவறுகளை மன்னியும். கர்த்தாவே, இந்தக் கூடாரத்தில் கரங்கள் உயர்த்தினவர்களை கண்ணோக்கி அருளும். எனக்கு பலத்தை அளித்து அதன் மூலம் உம் சத்தியத்தை அவர்கள் இன்னும் எளிதாக அறிந்து கொள்ள உதவி செய்யும். 326. இந்த இரவிலே எங்களோடு கூடாரத்தில் தங்கியிரும். இந்த கூடாரத்தில் தங்கள் கரங்களை உயர்த்தினவர்களை கண்ணோக்கிப் பாரும். என்னில் ஏதாகிலும் தவறிருந்தால் கழுவி அருளும், பிதாவே, சபையை சுத்திகரியும் 327. வார்த்தையானது எங்கள் மத்தியில் மாமிசமாகி உள்ளதை இந்நாளில் உலகம் கண்டுக்கொள்ளட்டும், அருளிச் செய்யும், பிதாவே, இந்த செய்தியையும், என்னையும், இந்த சபையாரையும், உம்முடைய வார்த்தையில் உள்ள வாக்குத் தத்தமான இரட்சிப்பிற்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் சமர்ப்பிக்கி றேன். 328. தேவ வல்லமையானது இங்கு இறங்கி வந்து, போதகர் முதல் வாயிற் காப்போன் வரை உங்கள் எல்லோரையும் அபிஷேகிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் தாமே தம்முடைய இடமாகிய எங்கள் இருதயங்களில் வந்து தங்கி, ஒவ்வொரு தேவ வாக்குத் தத்தத்தையும் வெளிப்படுத்தி, உம்முடைய வார்த்தை சத்தியம் என்று விளங்கச் செய்யட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 329. நம்முடைய தலைகள் குனிந்த நிலையிலேயே நாம், 'என் மீட்பர் அழைக்கும் சத்தம் என்னில் தொனிக்கின்றது'' என்ற பாடலைப் பாடுவோம். என் மீட்பர் அழைக்கும் சத்தம் என்னில் தொனிக்கிறது. என் மீட்பர் அழைக்கும் சத்தம் என்னில் தொனிக்கிறது. (இப்பொழுது உங்களுடைய சமயக் கோட்பாடுகளை புறம்பாக்கிப் போடுங்கள்) “உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்று...'' 330. (தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என் வார்த்தையை பின்பற்றாதவன் எனக்கு சீஷனாயிருக்க பாத்திரன் அல்ல). எங்கே என்னை நடத்தினாலும் (தேவ வார்த்தைக்கே உன்னை அவர் நடத்துகிறார்) தண்ணீர் தடாகமானாலும், அவர் நாமத்திலே, பலிபீடமானாலும் அவர் நாமத்திலே, எங்கிலும் நான் பின் செல்வேன். 331. நியாயத் தீர்ப்பானாலும் அவரோடே (அவர் என்னை எங்கே நடத்தினாலும்.. நான் பின் செல்வேன் என்று சகோ. பிரான்ஹாம் மௌனமாகப் பாட ஆரம்பிக்கிறார்). 332. எந்தப் பக்கம் நீ காணப்படுகிறாய்-? தேவனுடைய நிலைக் கண்ணாடியில் என்ன நீ பிரதிபலிப்பை காண்கிறாய்-? வார்த்தையினால் நான் இப்பொழுது நியாயந் தீர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கி றேனா-? பின் செல்வேன். 333. (என்ன நேரிட்டாலும் நான் வார்த்தையோடு செல்வேன் அத்தகையதோர் இடத்தை நான் எடுத்துக் கொண்டாலும் தேவனுடைய நியாயத் தீர்ப்பினூடாக நான் சென்று கொண்டு இருக்கிறேன்; வார்த்தையினால் என்னை ஓர் விசுவாசியாக்கும்) பின் செல்வேன் நான் பின் செல்வேன் என் மீட்பர் பின் செல்வேன் எங்கிலும் நான் பின் செல்வேன் 334. நீங்கள் இப்பொழுது கவனமாய்ச் சிந்தித்துப் பாருங்கள் "அவர் நடத்துகிறார்.''